1
00:00:02,000 --> 00:00:07,000
Downloaded from
YTS.MX

2
00:00:08,000 --> 00:00:13,000
Official YIFY movies site:
YTS.MX

3
00:00:21,647 --> 00:00:23,607
டிரிங்!

4
00:00:43,836 --> 00:00:44,962
மன உளைச்சலுக்கான உதவி

5
00:00:45,045 --> 00:00:46,129
மருத்துவர் வெளியே போயிருக்கிறார்

6
00:01:32,426 --> 00:01:36,471
சீக்கிரம், சாலி. இந்தப் பயிற்சியைத் திட்டமிட்டதே
நான் தான். நானே தாமதமாக போகக்கூடாது.

7
00:01:36,555 --> 00:01:38,390
உங்கள் பின்னாடி தான் இருக்கிறேன், அண்ணா.

8
00:01:44,188 --> 00:01:45,564
கவனம்!

9
00:01:45,647 --> 00:01:47,316
காலை வணக்கம், சார்லி பிரவுன்.

10
00:01:47,399 --> 00:01:50,527
காலை வணக்கம், லைனஸ், லூசி.
இன்றைய பயிற்சிக்கு நீங்கள் தயாரா?

11
00:01:50,611 --> 00:01:54,114
ஏன் பயிற்சி செய்ய வேண்டும்? எந்தப் போட்டியிலும்
நாம் தான் ஜெயிக்க மாட்டோமே.

12
00:01:54,198 --> 00:01:56,658
அதனால் தான் சொல்கிறேன்.
தோல்வியடைந்தே சோர்ந்துவிட்டேன்.

13
00:01:56,742 --> 00:01:58,535
இப்படி யோசி, சார்லி பிரவுன்,

14
00:01:58,619 --> 00:02:01,580
வெற்றியைவிடத் தோல்வியிலிருந்துத் தான்
நாம் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.

15
00:02:01,663 --> 00:02:04,750
அதன் மூலம் நான் இந்த உலகிலேயே,
மிகப் பெரிய புத்திசாலி ஆகிவிடுவேன்.

16
00:02:04,833 --> 00:02:08,503
நீ எனக்கு காலை வணக்கம்
சொல்லமாட்டாயா, என் செல்ல பப்பூ?

17
00:02:08,586 --> 00:02:10,839
நான் உன்செல்ல பப்பூ கிடையாது!

18
00:02:10,923 --> 00:02:12,758
என்ன திட்டம், சார்லி பிரவுன்?

19
00:02:12,841 --> 00:02:15,928
புதிய சீருடைகளா? புதிய பிளேபுக்கா?
அல்லது புதிய குவாட்டர்பேக்கா?

20
00:02:16,011 --> 00:02:18,055
இல்லை, புது பயிற்சியாளர்.

21
00:02:19,014 --> 00:02:21,558
நீ அந்தளவுக்கு முட்டாள் இல்லை.

22
00:02:33,278 --> 00:02:35,322
-காலை வணக்கம், சார்.
-காலை வணக்கம், மார்ஸி.

23
00:02:35,405 --> 00:02:37,115
கால்பந்தாட்டத்தைப் பற்றி
கற்றுக் கொண்டிருக்கிறேன்.

24
00:02:37,199 --> 00:02:40,160
களத்திற்குச் சென்று பழமையான
ஹாக்ஸ்கின்னை உதைக்க நான் தயார்.

25
00:02:40,244 --> 00:02:43,580
அது பிக்ஸ்கின், மார்ஸி. கால்பந்தாட்டத்தில்
அனைத்தும் "பழமையானது" இல்லை.

26
00:02:43,664 --> 00:02:44,915
நீங்கள் என்ன சொன்னாலும் சரி, சார்.

27
00:02:44,998 --> 00:02:47,876
என்னை "சார்" எனக் கூப்பிடாதே.
இன்று நான் தான் "பயிற்சியாளர்."

28
00:02:47,960 --> 00:02:49,211
சரி, கவனியுங்கள்.

29
00:02:51,755 --> 00:02:57,052
இங்கிருக்கும் சக், அடுத்த சீசனில் தன் அணி திறன் பட
விளையாட உதவுமாறு என்னைக் கேட்டுக்கொண்டான்.

30
00:02:57,135 --> 00:02:59,429
ஆனால் அது நல்ல விஷயம் போல் தெரியவில்லை.

31
00:03:00,597 --> 00:03:02,474
பயிற்சி செய்யத் தயாரா? நல்லது.

32
00:03:02,558 --> 00:03:05,561
என் ஆயத்தப் பயிற்சிகளை, குதிக்கும்
பயிற்சியுடன் ஆரம்பிக்க விரும்புகிறேன்.

33
00:03:05,644 --> 00:03:06,770
மார்ஸி?

34
00:03:06,854 --> 00:03:08,814
அவள் சொன்னது கேட்டதல்லவா. குதியுங்கள்!

35
00:03:11,567 --> 00:03:14,027
ஒன்று, இரண்டு, மூன்று,

36
00:03:14,111 --> 00:03:19,783
நான்கு, ஐந்து, ஆறு,
ஏழு, எட்டு, ஒன்பது, பத்து,

37
00:03:19,867 --> 00:03:21,910
11,12,13...

38
00:03:21,994 --> 00:03:25,539
-தாமதத்திற்கு மன்னிக்கவும், கோச்.
-தகுந்த காரணத்தை சொல்லணும், பிக்பென்.

39
00:03:28,917 --> 00:03:33,964
சொல்கிறேன். நாளை அன்னையர் தினத்தையொட்டி
மிட்டாய் கடையில் கூட்டம் நிறைய இருந்தது.

40
00:03:35,048 --> 00:03:36,300
என்ன?

41
00:03:36,383 --> 00:03:40,012
நாளைக்கா? அன்னையர் தினத்தை
மறந்துவிட்டேன் என நம்பவே முடியவில்லை.

42
00:03:40,095 --> 00:03:42,306
அன்னையர் தினமா?
அன்னையர் தினம் விசேஷமானது.

43
00:03:42,389 --> 00:03:43,807
பேசுவதை நிறுத்து, சக்.

44
00:03:43,891 --> 00:03:45,267
நாம் எங்கே விட்டோம், மார்ஸி?

45
00:03:45,350 --> 00:03:47,561
நான் எண்ணிக்கையை விட்டுவிட்டேன்.

46
00:03:47,644 --> 00:03:49,104
விட்டுத் தள்ளு.

47
00:03:49,188 --> 00:03:52,482
ஒரு சிறிய செயல் விளக்கம்.
சுறுசுறுப்பாக விளையாடும் போது,

48
00:03:52,566 --> 00:03:56,570
இது போல் அழுக்காகலாம்.

49
00:03:56,653 --> 00:03:57,946
அவர்களை உள்ளே அழைத்து வா, மார்ஸி.

50
00:04:02,367 --> 00:04:05,078
வேடிக்கையான மூக்குடைய
அந்த குட்டியை கவனியுங்கள்.

51
00:04:05,162 --> 00:04:07,122
அந்த நகர்வுகளைப் பாருங்கள்.

52
00:04:07,206 --> 00:04:09,166
சரி, குட்டி. நகர்வுகள் போதும்.

53
00:04:12,753 --> 00:04:14,505
எளிமையாக உதைத்து ஆரம்பிக்கலாம்.

54
00:04:14,588 --> 00:04:16,005
சரி, பந்தை உதைக்கத் தயாராக வை!

55
00:04:23,764 --> 00:04:25,390
நன்றாக உதைத்தாய், குட்டி.

56
00:04:25,474 --> 00:04:29,144
தவறவிட்டதை நினைக்காதே. உதைப்பதை மறந்துவிடு.
பந்தைக் கடத்திச் செல்லும் முறையை அறிந்துக்கொள்வோம்.

57
00:04:30,020 --> 00:04:34,733
என் அம்மாவுக்கு என்ன பிடிக்குமென தெரியவில்லை.
நீ அறிவாளி, லைனஸ். என்ன செய்யப் போகிறாய்?

58
00:04:34,816 --> 00:04:38,487
வந்து, தினமும் என் சாப்பாட்டுக் கூடையில்
என் அம்மா சிறு குறிப்புகளை வைப்பார்,

59
00:04:38,570 --> 00:04:39,696
இதோ இது போன்று.

60
00:04:41,823 --> 00:04:43,659
“அன்பு மகனே, நன்றாகப் படி.

61
00:04:43,742 --> 00:04:45,994
நினைவில்கொள்,
நீ தேடும் உண்மையான சந்தோஷம்

62
00:04:46,078 --> 00:04:47,746
உனக்குள்ளேயே இருக்கிறது.

63
00:04:47,829 --> 00:04:50,415
மதிய உணவு ஒரு கூடுதல் பரிசு
அவ்வளவுதான். அன்புடன், அம்மா.”

64
00:04:51,375 --> 00:04:53,210
சில சமயம், ரொம்ப உணர்ச்சி வசப்படுவார்.

65
00:04:53,293 --> 00:04:55,587
நேராகச் சென்று வலது பக்கம் திரும்பு.

66
00:04:56,713 --> 00:04:58,632
இப்போது இடது பக்கம்.
இப்போது பின்னாடித் திரும்பு.

67
00:05:03,345 --> 00:05:06,682
திரும்ப வராதே. அதில் போகத்தான் முடியும்,
திரும்பி வரக் கூடாது.

68
00:05:06,765 --> 00:05:10,561
இந்த வருடம், என் அம்மாவிற்கு நன்றி தெரிவிக்க
ஒரு கடிதம் எழுதப் போகிறேன்.

69
00:05:10,644 --> 00:05:13,564
துரதிர்ஷ்டவசமாக, என்ன எழுத வேண்டுமென
இனிமேல் தான் யோசிக்கணும்.

70
00:05:13,647 --> 00:05:16,191
எனக்கு அவ்வளவாக எழுத வராது.

71
00:05:16,275 --> 00:05:18,777
“ரோஜாக்கள்... வயலட் நிறம்”...

72
00:05:21,071 --> 00:05:24,283
இப்படி விளையாடக் கூடாது! அவனைச் சமாளி.

73
00:05:24,366 --> 00:05:26,034
நான் சொல்வது அவனுக்கு கேட்குமா?

74
00:05:26,618 --> 00:05:28,412
இருவரும் என்ன செய்கிறீர்கள்?

75
00:05:28,495 --> 00:05:32,541
நான் என் அம்மாவுக்கு கலைநயமிக்கப்
பொருளைப் பரிசளிக்கப் போகிறேன்.

76
00:05:32,624 --> 00:05:34,168
அப்படியா? என்ன அது?

77
00:05:34,251 --> 00:05:36,044
தெரிந்திருந்தால், சொல்லி இருப்பேனே!

78
00:05:36,753 --> 00:05:40,424
-நீ உன் அம்மாவுக்கு என்ன கொடுக்கப் போகிறாய்?
-சமீபமாக, என் அம்மா என்னிடம் நன்றாகப் பழகுகிறார்,

79
00:05:40,507 --> 00:05:44,136
எனவே அவருக்கு ஐந்து டாலர்கள்
மதிப்புள்ள பரிசினை வழங்கப் போகிறேன்.

80
00:05:44,219 --> 00:05:45,721
நல்ல யோசனை.

81
00:05:45,804 --> 00:05:47,139
பணமாகவே கொடுத்துவிடேன்.

82
00:05:47,222 --> 00:05:49,474
உன்னிடம் பந்தே இல்லை.

83
00:05:50,184 --> 00:05:52,144
என் அம்மாவுக்கு சொனாட்டா ராகத்தில்
இசையமைக்கப் போகிறேன்.

84
00:05:52,227 --> 00:05:56,148
“நீங்கள் தான் சிறந்த அம்மா,” என்று
எஃப் மேஜரில் வாசிக்கப் போகிறேன்.

85
00:05:56,231 --> 00:05:57,399
என் அம்மாவுக்கு கட்டிப்பிடிக்க பிடிக்கும்,

86
00:05:57,482 --> 00:06:00,110
எனவே அதற்கான கூப்பன்
தயாரிக்கப் போகிறேன்.

87
00:06:00,194 --> 00:06:02,821
நில்! உனக்குப் பின்னாடிப் பார்.

88
00:06:07,409 --> 00:06:11,330
சிறுவனாக இருந்தாலும்
நன்றாக விளையாடினாய். ஓடு! போ, போ!

89
00:06:15,042 --> 00:06:16,919
ஆமாம்!

90
00:06:17,002 --> 00:06:19,671
சிரமப்பட்டு விளையாடினாய், ஆனால் டச்டவுன்!

91
00:06:19,755 --> 00:06:22,090
எல்லோரும், அதை... கவனித்தீர்களா?

92
00:06:22,174 --> 00:06:23,759
-அன்னையர் தினம்.
-அன்னையர் தின வாழ்த்துகள்.

93
00:06:23,842 --> 00:06:25,135
அன்னையர் தினம் சிறப்பு வாய்ந்ததல்லவா?

94
00:06:25,219 --> 00:06:27,346
-அன்னையர் தின வாழ்த்துக்கள்.
-எனக்கு அன்னையர் தினம் பிடிக்கும்.

95
00:06:31,558 --> 00:06:33,060
எல்லோரும் கொஞ்சம் கவனிக்கிறீர்களா?

96
00:06:33,644 --> 00:06:37,064
எதுவுமே சிறப்பாக இருந்தால்தான்
நீங்கள் செய்வீர்களா?

97
00:06:38,690 --> 00:06:41,527
உண்மையில், நான் கடைக்குச் சென்று
கலைப்பொருட்கள் வாங்க வேண்டும்.

98
00:06:41,610 --> 00:06:43,070
நிறைய கூப்பன்கள் தயாரிக்க வேண்டும்.

99
00:06:43,153 --> 00:06:45,781
சொனாட்டா இசையின் கடைசிப் பகுதியை
மேம்படுத்த வேண்டும்.

100
00:06:45,864 --> 00:06:48,825
வாழ்த்து அட்டையுடன் டப்பா நிறைய சாக்லெட்டுகள்
கொடுத்தால் நன்றாக இருக்கும்.

101
00:06:49,368 --> 00:06:51,203
நான் கடிதம் எழுத வேண்டும்.

102
00:06:54,373 --> 00:06:57,000
மன்னித்துவிடு, கோச்.
நானும் போக வேண்டும்.

103
00:06:57,084 --> 00:06:59,628
விரைவில் அடுத்த பயிற்சிக்கு
உன்னை அழைக்கிறேன்.

104
00:07:02,130 --> 00:07:04,007
சரி, எல்லோரும் போய்த் தொலையுங்கள்.

105
00:07:04,091 --> 00:07:06,760
ஆனால் அடுத்த சீசனில் தோற்றுவிட்டால்
என்னைக் குறை சொல்லாதீர்கள்.

106
00:07:13,016 --> 00:07:16,228
குறைந்தபட்சம் ஒருவனாவது அன்னையர் தினத்தில்
கவனம் சிதறாமல் இருக்கிறானே.

107
00:07:21,441 --> 00:07:24,152
நீயுமா? எல்லோரும் என்னை
விட்டுவிட்டு சென்றுவிட்டார்கள். அடச்சே.

108
00:07:25,320 --> 00:07:27,531
நான் இருக்கிறேனே, கோச். சார்.

109
00:09:47,462 --> 00:09:49,256
இப்போது தான் தந்திரமான விஷயத்தை
சொல்லப் போகிறேன்.

110
00:09:49,339 --> 00:09:52,759
நான் திரும்பி நின்று, பந்தைக் கடத்திச்
செல்வது போல போலியாக நடிக்கிறேன்.

111
00:09:52,843 --> 00:09:55,137
ஆனால் பந்தை நானே வைத்துக்கொண்டு,

112
00:09:55,220 --> 00:09:57,973
தந்திரமாக நகர்ந்து
மறு பக்கத்தினைத் தவிர்த்துவிட்டு,

113
00:09:58,056 --> 00:10:00,934
டச்டவுன் இடத்திற்கு ஓடி சென்றுவிடுவேன்.

114
00:10:01,018 --> 00:10:02,227
சார்...

115
00:10:03,729 --> 00:10:05,772
இதெல்லாமே சுவாரஸ்யமானவை தான், சார்,

116
00:10:05,856 --> 00:10:08,692
ஆனால் நாம் இதை மற்ற வீரர்கள்
இருக்கும் போது செய்ய வேண்டும்.

117
00:10:08,775 --> 00:10:12,613
இல்லை. என் திட்டத்தை அன்னையர் தினத்திற்காக
மாற்றிக்கொள்ள மாட்டேன்.

118
00:10:13,447 --> 00:10:16,450
சந்தோஷம் தரும் வேறெதாவது
விஷயத்தைச் செய்யலாம்.

119
00:10:16,533 --> 00:10:18,493
நான் சந்தோஷமாக இல்லையென
யார் சொன்னது?

120
00:10:18,577 --> 00:10:21,955
சந்தோஷமாக இல்லாவிட்டால்
முகம் இப்படியா இருக்கும்?

121
00:10:24,166 --> 00:10:26,668
-அதைப் பற்றி பேசலாமா, சார்?
-வேண்டாம்.

122
00:10:33,217 --> 00:10:36,011
உங்களுக்கு அம்மா இல்லாதது
எனக்கு வருத்தம் தான், சார்.

123
00:10:36,094 --> 00:10:39,014
அன்னையர் தினத்தை ஏன் இவ்வளவு
கொண்டாடுகிறார்கள் என்றே தெரியவில்லை.

124
00:10:39,097 --> 00:10:41,391
அன்னையர் தினம் என்பது... மடத்தனம்!

125
00:10:51,318 --> 00:10:54,988
இது பற்றி மனம் திறந்து பேசியது
நல்லது தான், சார்.

126
00:11:10,629 --> 00:11:12,548
நீ வீட்டிற்குப் போ, மார்ஸி.

127
00:11:12,631 --> 00:11:15,634
நாளைய தினத்திற்காக நீ ஏதாவது
தயார் செய்ய வேண்டியிருக்கலாம்.

128
00:11:15,717 --> 00:11:19,096
முடிந்துவிட்டது, சார்.
கப்கேக்குகள் செய்துள்ளேன்.

129
00:11:19,179 --> 00:11:21,265
நான் இங்கு உங்களுடனேயே இருக்கிறேன்.

130
00:11:23,475 --> 00:11:25,435
எல்லா வருடமும் ஒரே மாதிரி தான் இருக்கும்.

131
00:11:25,519 --> 00:11:29,523
நன்றாகத் தான் இருப்பேன், ஆனால் யாராவது
அன்னையர் தினத்தைப் பற்றி பேசுவர்.

132
00:11:29,606 --> 00:11:33,986
உடனே எனக்கு மட்டும் தான் அம்மா இல்லை
என்ற ஞாபகம் வந்துவிடும்.

133
00:11:34,653 --> 00:11:36,780
கஷ்டமாகத் தான் இருக்கும், சார்.

134
00:11:36,864 --> 00:11:38,490
ஆமாம், மார்ஸி.

135
00:11:46,957 --> 00:11:48,917
போன வருடம், அந்த வாரம் முழுவதும்

136
00:11:49,001 --> 00:11:51,253
பள்ளிக்கு போகாமலிருக்க
உடம்பு சரியில்லாதது போல நடித்தேன்.

137
00:11:51,336 --> 00:11:54,673
ஞாபகமிருக்கிறது.
மருந்துப் பெட்டியுடன் வந்தீர்கள்.

138
00:11:57,885 --> 00:12:00,888
வேண்டுமானால், அன்னையர் தினத்தை
என் வீட்டில் கொண்டாடுங்களேன்.

139
00:12:00,971 --> 00:12:02,639
என் அம்மாவை
உங்களோடு பகிர்ந்துக்கொள்கிறேன்.

140
00:12:03,307 --> 00:12:06,727
உன் அம்மா அன்பானவர்,
ஆனால் அது சரிவராது.

141
00:12:07,227 --> 00:12:09,313
நான் வேறெந்த வகையிலாவது உதவ முடியுமா?

142
00:12:11,106 --> 00:12:12,357
தெரியவில்லை, மார்ஸி.

143
00:12:12,441 --> 00:12:16,028
அன்னையர் தினத்தைப் போக வைத்து
மீண்டும் வராத மாதிரி செய்ய முடியுமா?

144
00:12:16,820 --> 00:12:18,739
அது முடியாது, சார்.

145
00:12:19,448 --> 00:12:21,033
எனக்கு அப்படி தோன்றவில்லை.

146
00:12:25,162 --> 00:12:27,122
சக்கின் கால்பந்தைத்
திருப்பிக் கொடுத்துவிட்டு வரலாம்.

147
00:12:29,416 --> 00:12:32,753
“என் அம்மாவிற்கு.” வேண்டாம்.

148
00:12:33,295 --> 00:12:36,924
“அன்புள்ள அம்மா.” வேண்டாம்.

149
00:12:38,383 --> 00:12:40,093
“ஓ, என் அம்மாவே.”

150
00:12:43,305 --> 00:12:44,473
“ஹே, அம்மா.”

151
00:12:46,350 --> 00:12:48,227
கடிதம் எழுதுவது, அழிந்துப்போன கலை.

152
00:12:49,853 --> 00:12:50,854
“அம்மா.”

153
00:12:51,355 --> 00:12:53,065
நகரு, லைனஸ்.

154
00:12:53,148 --> 00:12:56,443
அன்னையர் தின பரிசை தயார் செய்ய,
எனக்கு இந்த மேஜை வேண்டும்.

155
00:13:02,074 --> 00:13:05,410
வாட்டர்கலரில் அம்மாவின்
வரைபடத்தை வரையப் போகிறேன்.

156
00:13:05,494 --> 00:13:07,996
அவர் அதை ஒருமுறை பார்த்துவிட்டு,

157
00:13:08,080 --> 00:13:10,707
“இந்தப் படத்தை குளிர்சாதனப் பெட்டியின் மேல்
வைக்க வேண்டும்” என சொல்வார்.

158
00:13:10,791 --> 00:13:12,501
நல்ல யோசனை.

159
00:13:12,584 --> 00:13:15,254
சிறந்த பரிசுகள் எல்லாம் ஆத்மார்த்தமானவை.

160
00:13:15,337 --> 00:13:18,131
இதயம், இருதயம். இது கலைநயம்.

161
00:13:18,632 --> 00:13:24,179
சிறந்த கலைஞர் ஒழுங்காகவும், கவனமாகவும்,

162
00:13:24,263 --> 00:13:27,349
தனது தலைசிறந்த படைப்பை
அவசரப்படாமலும் செய்வார்.

163
00:13:27,432 --> 00:13:28,684
முடிந்துவிட்டது!

164
00:13:31,103 --> 00:13:33,021
சரி, நீ அம்மாவைப் பார்த்தாயா?

165
00:13:36,191 --> 00:13:40,612
நான் வேறெதாவது செய்யலாம்
என நினைக்கிறேன். ஈர்க்கும் வகையில்.

166
00:13:41,238 --> 00:13:45,117
நேர்மையாக இருப்பதற்கும், ரொம்ப நேர்மையாக
இருப்பதற்கும் நூல் அளவு வித்தியாசம் தான்.

167
00:13:47,870 --> 00:13:49,872
அழைப்புமணியை அடிக்க மாட்டீர்களா?

168
00:13:49,955 --> 00:13:51,707
நான் யாரையும் பார்க்க விரும்பவில்லை.

169
00:13:53,667 --> 00:13:55,669
கைக்குட்டை வேண்டுமா?

170
00:13:56,670 --> 00:13:59,214
நான் அழவில்லை, யோசிக்கிறேன்.

171
00:13:59,298 --> 00:14:02,426
சில நேரங்களில் இரண்டும்
ஒன்று போலவே இருக்கிறது.

172
00:14:02,509 --> 00:14:04,678
சரி, தேவைப்பட்டால் சொல்லுங்கள்.

173
00:14:08,932 --> 00:14:11,101
நான் ஏன் இவ்வளவு
கவலைப்படுகிறேன் என்றே தெரியவில்லை.

174
00:14:11,685 --> 00:14:13,854
உங்கள் அம்மாவிற்காக ஏங்குகிறீர்களோ என்னமோ?

175
00:14:13,937 --> 00:14:16,940
எனக்கு அம்மாவே இல்லை.
எப்படி அம்மாவிற்காக ஏங்குவேன்?

176
00:14:17,608 --> 00:14:19,943
வந்து, அம்மாக்கள்
செய்யும் விஷயங்களுக்காக ஏங்கலாம்,

177
00:14:20,027 --> 00:14:22,070
அதாவது உங்களுக்குப் பிடித்த
ரொட்டிகளை சமைப்பது,

178
00:14:22,154 --> 00:14:24,656
கையில் காயம் ஏற்பட்டால் கட்டுப் போடுவது

179
00:14:24,740 --> 00:14:26,200
உங்களுக்குப் பிடித்த பாடலைப் பாடுவது?

180
00:14:26,283 --> 00:14:27,618
இதற்காகவெல்லாம் நான் ஏங்கவில்லை.

181
00:14:27,701 --> 00:14:31,747
அம்மா செய்ய வேண்டியவற்றை என் அப்பா
செய்வார். என் அப்பா சிறந்தவர்.

182
00:14:32,748 --> 00:14:34,499
உங்கள் அப்பா ரொம்ப அன்பானவர்.

183
00:14:35,375 --> 00:14:37,461
உங்களுக்கு ஒன்றுமில்லையே, சார்?

184
00:14:38,003 --> 00:14:41,256
மார்ஸி, எல்லா வகையான
அம்மாக்களும் இருக்கின்றனர் தானே?

185
00:14:41,798 --> 00:14:44,593
கண்டிப்பாக. வளர்ப்பு குழந்தைகளின்
அம்மாக்கள் மோசமாக இருப்பார்கள்.

186
00:14:44,676 --> 00:14:48,180
தத்தெடுத்தக் குழந்தைகளுக்கும் அப்படித் தான். சில
குழந்தைகளுக்கு இரண்டு அம்மாக்கள் கூட இருப்பார்கள்.

187
00:14:48,263 --> 00:14:53,560
சரி. என்னைப் போன்ற அம்மா இல்லாத குழந்தைகளுக்கு
அம்மாவைப் போல் ஒருவர் இருப்பார்.

188
00:14:54,144 --> 00:14:57,898
எல்லா அம்மாக்களும் கொண்டாடப்பட
வேண்டியவர்கள், இல்லையா?

189
00:14:57,981 --> 00:14:59,233
நிச்சயமாக.

190
00:14:59,733 --> 00:15:01,610
நான் அதைத் தான் செய்ய போகிறேன்.

191
00:15:01,693 --> 00:15:04,738
அன்னையர் தினத்திற்கு, நான் என் அப்பாவை
கொண்டாடப் போகிறேன்.

192
00:15:04,821 --> 00:15:06,198
ரொம்ப சுலபம்.

193
00:15:06,281 --> 00:15:09,826
அன்னையர் தினத்திற்கான பரிசுகளுள்
ஒன்றை வாங்கினால் போதும்.

194
00:15:11,787 --> 00:15:12,996
வாழ்த்து அட்டை போன்றா?

195
00:15:13,080 --> 00:15:15,707
ஆமாம், அதே தான்! வாழ்த்து அட்டை!

196
00:15:15,791 --> 00:15:20,128
நான் அப்பாவிற்கு வாழ்த்து அட்டை வாங்கப்
போகிறேன். சிறப்பு! பிரச்சனை முடிந்தது.

197
00:15:20,212 --> 00:15:22,589
நீ ஒரு மேதை, மார்ஸி!

198
00:15:23,090 --> 00:15:24,091
நானா?

199
00:15:30,138 --> 00:15:33,016
நாளையே அன்னையர் தினம்
என்பதை நம்பவே முடியவில்லை.

200
00:15:33,100 --> 00:15:35,644
போன வருடம் அன்னையர் தினம் வரவில்லையா?

201
00:15:35,727 --> 00:15:37,354
எல்லா வருடமும் தான் வருகிறது.

202
00:15:37,437 --> 00:15:40,983
கவனத்துடன் இரு, சாலி.
நாம் ஒரு சிறந்த பரிசை யோசிக்க வேண்டும்.

203
00:15:56,957 --> 00:15:59,084
சாலி, ஒரு யோசனை.

204
00:15:59,168 --> 00:16:01,587
அம்மாவிற்கு பிடித்த சாப்பாடு என்ன?

205
00:16:01,670 --> 00:16:03,505
அம்மா சமைக்காத உணவு.

206
00:16:03,589 --> 00:16:04,631
அதே தான்.

207
00:16:04,715 --> 00:16:08,468
சரி, நாளை காலை உணவை அம்மா
எழும் போதே, நாம் தரப் போகிறோம்.

208
00:16:08,552 --> 00:16:10,596
மெத்தை விரிப்புகள் ஈரமாகிவிடாதா?

209
00:16:10,679 --> 00:16:15,184
மெத்தையில் வழங்கப்படும் உணவைப் பற்றிய
நுணுக்கங்கள் உனக்குத் தெரியவில்லை.

210
00:16:15,267 --> 00:16:18,395
தட்டில் தான் பரிமாறுவோம்,
நேர்த்தியாக இருக்கும்.

211
00:16:18,478 --> 00:16:20,105
இது ஏதோ சொதப்பலான விஷயமாகத் தெரிகிறது.

212
00:16:20,189 --> 00:16:22,524
என்னை நம்பு,
அம்மாவிற்கு இது நிச்சயம் பிடிக்கும்.

213
00:16:22,608 --> 00:16:24,693
ஆனால் நாம் முதலில்
ஒத்திகை பார்க்க வேண்டும்.

214
00:16:24,776 --> 00:16:27,446
நல்ல பீங்கான் தட்டுகளைக் கொண்டுவா.

215
00:16:27,529 --> 00:16:29,239
சரி, அண்ணா.

216
00:16:39,666 --> 00:16:41,418
மாவு

217
00:17:05,776 --> 00:17:07,194
என்ன...

218
00:17:14,159 --> 00:17:17,496
மெத்தையில் காலை உணவு கொடுப்பது
குளறுபடி இல்லாமல் நடக்குமெனச் சொன்னீர்களே.

219
00:17:19,665 --> 00:17:21,165
கடவுளே.

220
00:20:15,632 --> 00:20:17,885
நாம் வந்துவிட்டோம். சரி.

221
00:20:17,968 --> 00:20:20,220
“ஒரு நல்ல அம்மாவாக இருப்பதற்கு,
நன்றி, அப்பா” என

222
00:20:20,304 --> 00:20:23,015
எழுதியிருக்கும், அன்னையர் தின
வாழ்த்து அட்டையை வாங்க வேண்டும்.

223
00:20:23,098 --> 00:20:25,601
அர்த்தமுடையதாக... இருக்கிறது.

224
00:20:26,560 --> 00:20:30,355
“அன்புள்ள அம்மா, உங்கள் சிரிப்பு
என் நாளை பிரகாசமாக்குகிறது” வேண்டாம்.

225
00:20:30,439 --> 00:20:32,941
“அன்புள்ள அம்மா, உங்களுக்கு என் அன்பு”...

226
00:20:33,984 --> 00:20:37,404
“இனிப்பை விட இனிப்பான என் அம்மாவிற்கு.”
இதுவும் வேண்டாம்.

227
00:20:37,487 --> 00:20:39,698
அப்பாவுக்குப் பிடித்தமான
வாழ்த்து அட்டைகள் எங்கிருக்கும்?

228
00:20:39,781 --> 00:20:43,452
ஏதாவது வண்டிகள், விளையாட்டுப் பொருட்கள்
அல்லது ஃப்லேனல் சட்டை போன்றவை?

229
00:20:43,535 --> 00:20:45,996
இதெல்லாம் பூக்களாகவும், உணர்ச்சிவசமாகவும்
இருக்கின்றன.

230
00:20:46,079 --> 00:20:48,624
“அம்மா, என் அம்மா!” அடக் கடவுளே.

231
00:20:48,707 --> 00:20:50,375
இல்லை. வேண்டவே வேண்டாம்.

232
00:20:55,714 --> 00:20:58,926
என்னால் நம்ப முடியவில்லை. இங்கு என் அப்பாவிற்கு
ஏற்றது போல ஒரு அட்டைக் கூட இல்லை.

233
00:20:59,009 --> 00:21:00,594
“உலகிலேயே மிகச்சிறந்த பாட்டிக்கு

234
00:21:00,677 --> 00:21:03,764
அன்னையர் தின வாழ்த்துகள்” என
எழுதியிருக்கும் அட்டைகள் ஏதாவது பார்த்தாயா?

235
00:21:03,847 --> 00:21:07,226
அவரைப் போன்றே அந்த அட்டையும்
சிறியதாகவும், இனிமையாகவும் இருக்க வேண்டும்.

236
00:21:08,018 --> 00:21:09,228
கிடைப்பதற்கு வாழ்த்துக்கள்.

237
00:21:11,688 --> 00:21:14,525
“என் பாட்டியைப் போல் வேறு யாரும் இல்லை.

238
00:21:14,608 --> 00:21:17,861
உலகத்திலேயே மிகச்சிறந்த பாட்டிக்கு
அன்னையர் தின வாழ்த்துகள்.”

239
00:21:17,945 --> 00:21:19,696
இது பொருத்தமாக இருக்கும்.

240
00:21:19,780 --> 00:21:22,407
நன்றி. மார்ஸி.

241
00:21:24,493 --> 00:21:25,827
மன்னிக்கவும்.

242
00:21:25,911 --> 00:21:29,665
என் அப்பாவிற்கு தர அன்னையர் தின வாழ்த்து
அட்டைகள் எங்கிருக்கும் எனச் சொல்ல முடியுமா?

243
00:21:32,167 --> 00:21:34,753
வந்து, நீங்கள் அட்டைகளை இன்னும்
விரிவாகத் தேர்வு செய்ய வேண்டும்.

244
00:21:34,837 --> 00:21:38,632
அனைவருக்கும் ஒரே மாதிரியான குடும்பம்
இருப்பதில்லை, தெரியுமா. அடச்சே.

245
00:21:39,341 --> 00:21:40,384
மார்ஸி.

246
00:21:41,885 --> 00:21:43,053
மன்னிக்கவும்.

247
00:21:44,429 --> 00:21:45,430
அட.

248
00:21:46,306 --> 00:21:47,474
நான் அப்படியே கைவிட மாட்டேன்.

249
00:21:48,016 --> 00:21:49,017
போகலாம்.

250
00:21:50,185 --> 00:21:51,895
பனிச் சறுக்கு பலகை பரவாயில்லையா?

251
00:21:51,979 --> 00:21:53,105
அப்பாவின் கால்கள் பலவீனமானவை.

252
00:21:53,188 --> 00:21:55,649
-பூக்கள் கொடுத்தால் என்ன?
-அவருக்கு ஒவ்வாமை இருக்கிறது.

253
00:21:55,732 --> 00:21:56,650
காதல்

254
00:21:56,733 --> 00:21:59,611
-ஏதாவது நகைகள்?
-அருமை, ஆனால் விலை அதிகமாக இருக்குமே.

255
00:21:59,695 --> 00:22:00,696
கேக் கொடுத்தால் என்ன?

256
00:22:00,779 --> 00:22:03,031
உப்பு பொருட்களைத்தான் அதிகம் சாப்பிடுவார்.

257
00:22:03,115 --> 00:22:04,408
ஒருநாள் அவரை
நீங்கள் பார்த்துக்கொள்கிறீர்களா?

258
00:22:04,491 --> 00:22:05,951
அவருக்கு வெள்ளரிக்காய் பிடிக்காது.

259
00:22:10,205 --> 00:22:11,582
அவருக்காக ஒரு பாடல் எழுதுகிறீர்களா?

260
00:22:11,665 --> 00:22:15,586
நான் கைவிடுகிறேன். இது முடியாது.

261
00:24:49,448 --> 00:24:52,826
சமையலறையைச் சுத்தம் செய்வது
பரிசாக ஏற்றுக்கொள்ளப்படாதா?

262
00:24:52,910 --> 00:24:55,787
நேரமாகிறது. சீக்கிரம் பார்ப்போம்.

263
00:24:58,582 --> 00:25:00,375
ஐஸ் க்ரீம் கேக் கொடுத்தால் என்ன?

264
00:25:02,252 --> 00:25:04,713
உண்மையில், இது நல்ல யோசனை தான்.

265
00:25:10,886 --> 00:25:12,721
ஒரு ஐஸ் க்ரீம் கேக், கொடுங்கள்.

266
00:25:14,681 --> 00:25:16,141
-ஸ்ட்ராபெர்ரி.
-ஸ்ட்ராபெர்ரி.

267
00:25:16,934 --> 00:25:18,185
அதன் அளவு...

268
00:25:18,268 --> 00:25:19,978
-பெரியது.
-பெரிதாக செய்யுங்கள்.

269
00:25:24,107 --> 00:25:28,070
பணம் கொஞ்சம் குறைகிறது, சாலி.
உன்னிடம் பணம் இருக்கிறதா?

270
00:25:30,155 --> 00:25:31,990
ஒரு குளறுபடியிலிருந்து இன்னொன்று.

271
00:25:36,787 --> 00:25:39,998
தெரியுமா, அன்னையர் தினம் என்பது
வியாபார ரீதியான ஊழல்.

272
00:25:41,542 --> 00:25:42,543
நன்றி, சார்.

273
00:25:43,085 --> 00:25:46,797
நீ இந்த வியாபார ரீதியிலான ஊழல்
கேக்கை சாப்பிட மாட்டாயா?

274
00:25:46,880 --> 00:25:48,465
கண்டிப்பாகச் சாப்பிடுவேன்.

275
00:25:48,549 --> 00:25:52,511
ஐஸ் க்ரீம் என்று வந்துவிட்டால், என் கொள்கைகள்
அனைத்தையும் தள்ளி வைத்துவிடுவேன்.

276
00:26:01,854 --> 00:26:05,732
நான் இந்த அழகான கிரீடத்தை
எங்கு வாங்கினேன் என ஆச்சரியப்படுகிறாயா?

277
00:26:05,816 --> 00:26:07,276
நிச்சயமாக யோசித்தேன்.

278
00:26:07,359 --> 00:26:09,319
நாளைக்கு என் அம்மாவிற்குத் தர,
இதை நானே செய்தேன்,

279
00:26:09,403 --> 00:26:12,197
ஒரு நாள் ராணியாக இருந்தால்
எப்படியிருக்கும் என்பதை அவர் உணர்வார்.

280
00:26:12,281 --> 00:26:15,075
சும்மா போட்டுப் பார்த்தேன்,
ரொம்ப நன்றாக இருக்கிறது.

281
00:26:16,159 --> 00:26:18,287
என் அப்பாவிற்கு எதுவுமே
கிடைக்கப் போவதில்லை...

282
00:26:20,914 --> 00:26:24,877
அன்னையர் தினம், அன்னையர் தினம்...
எங்குப் போனாலும், இதைத் தான் கேட்கிறேன்.

283
00:26:24,960 --> 00:26:29,965
இன்னொரு முறை “அன்னையர் தினம்”
எனக் கேட்டது, நான்... கத்திவிடுவேன்.

284
00:26:30,048 --> 00:26:32,301
அன்னையர் தினத்திற்காக, எங்கள் அம்மாவிற்காக
ஐஸ் க்ரீம் கேக் வாங்கியுள்ளோம்.

285
00:26:32,384 --> 00:26:36,471
அன்னையர் தினத்திற்காக, வென்னிலா அல்லது
சாக்லெட் கேக் தான் வாங்க நினைத்தேன்.

286
00:26:37,639 --> 00:26:39,766
ஆனால் சாலி ஸ்ட்ராபெர்ரி வாங்கச் சொன்னாள்.

287
00:26:39,850 --> 00:26:42,686
அது தான் அன்னையர் தினத்திற்கு
ஏற்ற வகைப் போலத் தெரிந்தது.

288
00:26:42,769 --> 00:26:47,107
அன்னையர் தினம். அன்னையர் தினம்.
அன்னையர் தினம். அன்னையர் தினம்.

289
00:27:05,959 --> 00:27:08,504
வீணாகிவிட்டது!
நீ என்ன செய்திருக்கிறாய் பார்!

290
00:27:10,547 --> 00:27:12,883
ம-மன்னித்துவிடு, லூசியெல்.

291
00:27:12,966 --> 00:27:15,427
சக். அது வந்து...

292
00:27:17,262 --> 00:27:18,430
விளக்குவதற்கு நேரமில்லை.

293
00:27:19,598 --> 00:27:21,016
திரும்பி வாருங்கள், சார்.

294
00:27:21,517 --> 00:27:24,728
அன்னையர் தின கொண்டாட்டம் அவளுக்குப்
பிடிக்கவில்லையென வெளிப்படையாகத் தெரிகிறது.

295
00:27:30,234 --> 00:27:32,861
-சார்? எங்கே போகிறீர்கள்?
-வீட்டுக்கு.

296
00:27:36,490 --> 00:27:40,702
நான் என் அப்பாவிற்கு அன்னையர் தின
பரிசு வாங்க நினைத்தேன். அது முடியவில்லை.

297
00:27:40,786 --> 00:27:42,412
-நாம் வேண்டுமானால்...
-இல்லை, மார்ஸி.

298
00:27:42,496 --> 00:27:44,915
நீ சொல்ல வருவதை என்னால் கேட்க முடியாது.

299
00:27:44,998 --> 00:27:47,960
நீ ஒவ்வொரு முறை உதவ முயலும் போதும்,
அது மோசமாகத் தான் முடிகிறது.

300
00:27:48,043 --> 00:27:51,547
என்னை மன்னித்துவிடுங்கள், சார்.
அது என் நோக்கம் இல்லை.

301
00:27:51,630 --> 00:27:55,592
அன்னையர் தினம் எனக்கு எப்போதுமே
மோசமாகத் தான் இருந்திருக்கிறது, அது மாறாது.

302
00:27:55,676 --> 00:27:58,136
எனவே, தயவுசெய்து என்னைத் தனியாக விடு.

303
00:30:15,899 --> 00:30:18,735
நிச்சயம், எறும்புகள் அன்னையர் தினம்
கொண்டாடத் தேவையில்லை.

304
00:30:20,988 --> 00:30:22,823
கொடுத்து வைத்த எறும்புகள்.

305
00:30:23,365 --> 00:30:25,284
எறும்புகள் கொடுத்து வைத்தவை தான்.

306
00:30:25,784 --> 00:30:28,287
அவற்றிற்கு எது தமக்குத் தகுந்தது எனத் தெரிகிறது.

307
00:30:30,122 --> 00:30:33,417
எப்பவும், என் அப்பா, என்னிடம்

308
00:30:33,500 --> 00:30:36,336
“பெப்பெர்மின்ட் பேட்டி,
நீ யாரென்று தெரியுமா?” எனக் கேட்பார்.

309
00:30:36,420 --> 00:30:38,088
நான் தெரியாது எனச் சொல்வேன்.

310
00:30:38,172 --> 00:30:44,428
அதற்கு அப்பா, “நீ ஒரு அரிய பொக்கிஷம்” என்பார்.
பிறகு நாங்கள் அதை நினைத்துச் சிரிப்போம்.

311
00:30:44,511 --> 00:30:47,931
சில சமயங்களில் நான் வித்தியாசமாக
இருந்திருக்க வேண்டாமெனத் தோன்றும்.

312
00:30:48,432 --> 00:30:49,933
புரிகிறது.

313
00:30:50,475 --> 00:30:54,605
இன்று அனைவருமே உற்சாகமாக இருக்கின்றனர்.
ரொம்ப சந்தோஷமாக இருக்கின்றனர்.

314
00:30:54,688 --> 00:30:58,025
அவர்களின் அம்மாவைக் கொண்டாடுவதில்
மகிழ்ச்சி அடைகின்றனர்.

315
00:30:58,108 --> 00:31:03,488
என்ன செய்தாலும், அந்த உணர்வை
என்னால் ஒருபோதும் அனுபவிக்க முடியாது.

316
00:31:03,572 --> 00:31:05,073
நானோ கோபமாக இருந்தேன்.

317
00:31:05,657 --> 00:31:09,661
உங்கள் கோபம் வருத்தத்தின் வெளிப்பாடு தான்
என யோசித்திருக்கிறீர்களா?

318
00:31:21,006 --> 00:31:22,633
அழுவது தவறில்லை, சார்.

319
00:31:25,969 --> 00:31:27,763
ஒரே ஒரு கண்ணீர் துளி அழுகையாகாது.

320
00:31:33,810 --> 00:31:36,480
உங்கள் அப்பாவிற்கு, நீங்கள்
வேறெதாவது வாங்கித் தரலாமே.

321
00:31:37,064 --> 00:31:38,607
மீண்டும் அதை ஆரம்பிக்காதே.

322
00:31:38,690 --> 00:31:41,777
நான் யோசித்தேன், சார். நாம் வழக்கமான
பொருள்களைத் தானே தர நினைத்தோம்.

323
00:31:41,860 --> 00:31:42,861
ஆனால் நீங்கள் அபூர்வமானவள்.

324
00:31:42,945 --> 00:31:46,657
உங்களிடம் மட்டும் இருக்கும் சிறந்த விஷயத்தை
அப்பாவுக்குப் பரிசாகத் தர முடியுமா?

325
00:31:46,740 --> 00:31:48,325
எனக்குத் தெரியவில்லை.

326
00:31:48,408 --> 00:31:52,120
சரி, நீங்கள் ஒன்றாக விரும்பி செய்யும்
விஷயங்கள் என்ன?

327
00:31:53,705 --> 00:31:54,957
எல்லாமே.

328
00:31:55,040 --> 00:31:59,211
பேஸ்பால் விளையாடுவோம். அப்பா தான்
எனக்கு கால்பந்தாட்டம் சொல்லிக்கொடுத்தார்.

329
00:31:59,294 --> 00:32:04,466
மொக்கையான ஜோக்குகள் சொல்லி விளையாடுவோம்.
எந்தளவிற்கு மொக்கையோ, அந்தளவிற்குச் சிரிப்போம்.

330
00:32:04,967 --> 00:32:08,720
என் சிரிப்பு அப்பாவுக்குப் பிடிக்கும்.
அது அவருக்கு என் அம்மாவை ஞாபகப்படுத்துமாம்.

331
00:32:11,807 --> 00:32:13,851
அன்னையர் தினத்தை கொண்டாட
வழி தெரிந்துவிட்டது.

332
00:32:13,934 --> 00:32:16,603
நாளைய நாள் முழுவதும்
என் அப்பாவுடன் செலவிடப் போகிறேன்.

333
00:32:16,687 --> 00:32:20,649
நாங்கள் பேசுவோம், விளையாடுவோம்,
நான் அப்பாவை சிரிக்க வைக்கப் போகிறேன்.

334
00:32:20,732 --> 00:32:22,192
அப்புறம் அப்பா என்னைச் சிரிக்க வைப்பார்.

335
00:32:22,276 --> 00:32:25,404
இருவரும் என்றுமில்லாத அளவிற்கு
சந்தோஷமாகச் சிரிப்போம்.

336
00:32:25,487 --> 00:32:29,408
ஒரு அப்பாவிற்கு அன்னையர் தினத்தன்று
கிடைக்கும் மிகச்சிறந்த பரிசு இது தான்.

337
00:32:29,491 --> 00:32:32,286
ஆமாம்! ஜாலி! நான் கிளம்புகிறேன்!

338
00:32:33,954 --> 00:32:39,251
உன் மனம் கஷ்டப்படும்படி ஏதாவது
பேசியிருந்தால் என்னை மன்னித்துவிடு, மார்ஸி.

339
00:32:39,334 --> 00:32:42,004
-நீ ஒரு உண்மையான தோழி.
-நீங்களும் தான், சார்.

340
00:32:45,090 --> 00:32:47,801
என் சார்பில், உன் அம்மாவிற்கு அன்னையர் தின
வாழ்த்துச் சொல்!

341
00:32:49,178 --> 00:32:50,387
சொல்கிறேன், சார்.

342
00:32:55,100 --> 00:32:57,269
அம்மாவிற்கு

343
00:32:58,520 --> 00:33:01,732
அருமையாக இருக்கு. ஆனால் ஃப்ரிட்ஜின் மேல்
வைக்கும் அளவிற்கு நன்றாக இருக்கிறதா?

344
00:33:11,241 --> 00:33:13,744
கண்டிப்பாக ஃப்ரிட்ஜின் மேல் வைக்கும்
அளவிற்கு தரமாக இருக்கிறது.

345
00:33:13,827 --> 00:33:15,871
அப்பாடா.

346
00:33:15,954 --> 00:33:18,624
என் திறமை மீதே எனக்கு சந்தேகம் வந்துவிட்டது.

347
00:33:18,707 --> 00:33:22,252
-ஆனால் இன்னும் ஏதோ ஒன்று குறைகிறது.
-என்ன? இப்போது தானே...

348
00:33:22,336 --> 00:33:25,047
எல்லா அட்டையிலும் ஏதாவது ஒரு செய்தி
இருக்க வேண்டும். அது ஒரு விதி.

349
00:33:26,590 --> 00:33:29,551
சரி, அறிவாளியே. உன் கடிதம் என்ன சொல்கிறது?

350
00:33:30,344 --> 00:33:31,345
இதோ.

351
00:33:37,309 --> 00:33:42,940
லைனஸ். வந்து... இவற்றைத் தான்
நானும் சொல்ல நினைக்கிறேன்.

352
00:33:43,774 --> 00:33:47,611
வந்து, என் கடிதத்திலும் ஏதோ ஒன்று குறைகிறது.

353
00:33:47,694 --> 00:33:50,197
வேண்டுமானால், இதை உன் அட்டையில் வைத்து

354
00:33:50,280 --> 00:33:52,282
இருவரும் சேர்ந்து அம்மாவிடம் கொடுக்கலாம்.

355
00:33:52,366 --> 00:33:53,867
நீ அதைச் செய்வாயா?

356
00:33:55,369 --> 00:33:58,288
இந்த இடத்தில் மட்டும்
சிறிய மாற்றம் செய்தால் போதும்.

357
00:34:04,711 --> 00:34:07,381
“அன்புள்ள அம்மா,
நீங்கள் என் மதிய உணவுடன் வைக்கும்

358
00:34:07,464 --> 00:34:09,675
சிறு குறிப்புகளுக்கு நன்றி செலுத்தும் வகையில்
இக்கடிதத்தை எழுதுகிறேன்.

359
00:34:09,757 --> 00:34:14,721
என் மதிய உணவிற்காகவும், குறிப்பாக,
டூனா மீன் சாண்ட்விச்சை தவிர்த்துவிட்டு,

360
00:34:14,804 --> 00:34:16,639
பொலோனி சாண்ட்விச் வைப்பதற்காகவும் நன்றி.”

361
00:34:17,599 --> 00:34:21,436
“நீங்கள் எனக்குச் செய்யும் அனைத்திற்கும்
நன்றி தெரிவிக்கிறேன்.

362
00:34:22,062 --> 00:34:25,482
நான் பயப்படும்போது, என்னைக்
கட்டியணைத்து அன்பாக நடந்துக்கொள்வீர்கள்.

363
00:34:27,650 --> 00:34:30,654
நான் தனியாக உணரும்போது, என்னிடம் 'எப்போதுமே
நீதான் என் சிறந்த நண்பர்' எனச் சொல்வீர்கள்.

364
00:34:30,737 --> 00:34:31,947
எனக்கு அது பிடிக்கும்.

365
00:34:34,408 --> 00:34:37,494
என் புதிய யோசனைகளைக் கேட்டுத்
தெரிந்துக்கொள்ள நேரம் ஒதுக்குவீர்கள்.”

366
00:34:40,914 --> 00:34:41,956
தழுவல்கள்

367
00:34:42,040 --> 00:34:45,168
“நீங்கள் என் நண்பர்கள் முன்பு
என்னைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பீர்கள்,

368
00:34:45,252 --> 00:34:48,505
சில நேரங்களில் எனக்குக் கூச்சமாக
இருந்தாலும், அதை நான் ரசிப்பேன்.

369
00:34:49,547 --> 00:34:53,969
நான் தவறு செய்யும் போதெல்லாம், மீண்டும்
முயற்சி செய் என உற்சாகப்படுத்துவீர்கள்.

370
00:35:00,434 --> 00:35:02,561
ஒவ்வொரு இரவும் நான் பத்திரமாக
இருக்கிறேனா என உறுதிசெய்வீர்கள்.

371
00:35:03,645 --> 00:35:06,648
உங்களின் தனித்துவமான வழியில்
எனக்குச் சிறந்ததையே செய்கிறீர்கள்.”

372
00:35:12,029 --> 00:35:13,322
தூரமாகச் செல்லுங்கள், அப்பா.

373
00:35:14,573 --> 00:35:15,908
அற்புதமான கேட்ச்.

374
00:35:16,658 --> 00:35:18,452
அதற்கு குட்பை சொல்லிவிடுங்கள், அப்பா.

375
00:35:18,535 --> 00:35:21,747
இன்னொன்று சொல்கிறேன்.
அந்த முட்டை, செஃபிடம் என்ன சொன்னது?

376
00:35:22,331 --> 00:35:23,874
“என்னைக் கிராக் செய்து விட்டாய்.”

377
00:35:24,458 --> 00:35:26,376
“நான் சோகமாக இருக்கும் போது,
என்னைச் சிரிக்க வைப்பீர்கள்.

378
00:35:26,460 --> 00:35:29,796
நீங்களும் சிரிப்பீர்கள்,
அது என்னை இன்னும் சிரிக்க வைக்கும்.”

379
00:35:31,924 --> 00:35:36,595
“நீங்கள் என்னை நேசிக்கிறீர்கள், எனக்காக
எப்போதும் இருப்பீர்கள் என எனக்குத் தெரியும்.

380
00:35:36,678 --> 00:35:40,516
அதைத்தான் எல்லா அம்மாக்களும் செய்வார்கள். ஆனால்
நீங்கள் அதை சிறப்பாகச் செய்கிறீர்கள். அதனால் தான்”...

381
00:35:40,599 --> 00:35:42,809
இப்போது நீயும் சேர்ந்துப் படிக்க வேண்டும்.

382
00:35:42,893 --> 00:35:48,524
நாங்கள் உங்களை மிகவும் நேசிக்கிறோம்.
அன்னையர் தின வாழ்த்துக்கள்.

383
00:35:51,944 --> 00:35:54,947
அம்மாவிற்கு

384
00:36:34,194 --> 00:36:36,738
சார்லஸ் எம்.ஷுல்ஸ் எழுதிய
பீனட்ஸ் படக்கதையின் அடிப்படையில்

385
00:37:54,608 --> 00:37:57,110
ராப் கிப்ஸ் 1964-2020
அவர்களின் நினைவாக

386
00:37:57,194 --> 00:37:59,196
தமிழாக்கம் மேனகா மணிகண்டன்

387
00:38:02,282 --> 00:38:04,243
நன்றி, ஸ்பார்க்கி.
என்றும் எங்கள் மனதில் இருக்கிறீர்கள்.



