1
00:00:02,000 --> 00:00:07,000
Downloaded from
YTS.MX

2
00:00:08,000 --> 00:00:13,000
Official YIFY movies site:
YTS.MX

3
00:01:07,943 --> 00:01:09,111
ஏய்!

4
00:01:09,194 --> 00:01:12,698
நீ ஒரு வெற்றியாளன்
சார்லி பிரவுன்!

5
00:01:16,785 --> 00:01:18,328
ஹுரே! நீ வென்றுவிட்டாய், சார்லி பிரவுன்.

6
00:01:18,412 --> 00:01:21,290
-ஹுரே!
-அற்புதம், சார்லி பிரவுன்.

7
00:01:21,373 --> 00:01:22,791
ஏய்!

8
00:01:24,293 --> 00:01:25,127
பாப்

9
00:01:26,587 --> 00:01:28,338
ஏய்!

10
00:01:28,422 --> 00:01:32,968
சார்லி பிரவுன்!
சார்லி பிரவுன்! சார்லி பிரவுன்!

11
00:01:33,051 --> 00:01:34,928
அற்புதம், சார்லி பிரவுன்.

12
00:01:39,558 --> 00:01:40,767
யார் இப்படி...

13
00:01:58,368 --> 00:02:01,288
எனக்கு ஏன் மற்றவர்களைப் போல்,
சாதாரண நாய் கிடைக்கவில்லை?

14
00:02:11,673 --> 00:02:12,883
காலை வணக்கம், லைனஸ்.

15
00:02:13,967 --> 00:02:15,427
காலை வணக்கம், சார்லி பிரவுன்.

16
00:02:26,021 --> 00:02:28,065
நேற்றிரவு மீண்டும் அதே கனவு வந்தது.

17
00:02:30,651 --> 00:02:32,319
எந்தக் கனவு, சார்லி பிரவுன்?

18
00:02:34,780 --> 00:02:37,115
பெப்பெர்மின்ட் பேட்டியின்
அணியைத் தோற்கடித்தோமே அந்தக் கனவு.

19
00:02:40,369 --> 00:02:44,498
இந்த வருடம் நாம் வெற்றிக்கொடியை
பெறப்போவதற்கான அறிகுறியென நினைக்கிறேன்.

20
00:02:45,165 --> 00:02:46,875
இதையே தான் போன வருடமும் சொன்னாய்,

21
00:02:47,751 --> 00:02:49,086
அதற்கு முந்தைய வருடமும் சொன்னாய்,

22
00:02:50,379 --> 00:02:52,089
அதற்கு முந்தைய வருடமும் சொன்னாய்.

23
00:02:53,006 --> 00:02:55,217
ஆம், ஆனால் இந்த வருடம் சற்று வித்தியாசமானது.

24
00:02:55,717 --> 00:02:57,636
நாம் கடினமாகப் பயிற்சி செய்கிறோம்.

25
00:02:57,719 --> 00:02:59,638
நம் பேட்டிங் திறன் நன்றாக இருக்கிறது.

26
00:02:59,721 --> 00:03:01,849
பந்து வீசும் திறனும் மேம்பட்டுள்ளது.

27
00:03:01,932 --> 00:03:04,142
நாம் வெற்றிப் பெறுவோமென
நம்பிக்கையாக இருக்கிறேன்.

28
00:03:05,769 --> 00:03:07,729
எனக்குத் தெரியவில்லை, சார்லி பிரவுன்.

29
00:03:07,813 --> 00:03:10,691
பெப்பெர்மின்ட் பேட்டி இங்கு வந்ததிலிருந்து
அவளும் அவளது அணியினரும் ஒவ்வொரு முறையும்

30
00:03:10,774 --> 00:03:12,568
பக்கத்து ஊரின் போட்டியில் வென்றுள்ளனர்.

31
00:03:18,282 --> 00:03:19,491
உண்மையாக இருக்கலாம்.

32
00:03:19,575 --> 00:03:24,121
நாளை, நம் கொடிக்கம்பத்தில் மற்றொரு
வெற்றிக்கொடி பறக்குமென நம்புகிறேன்.

33
00:03:32,629 --> 00:03:36,842
தடைகள் பல இருந்தாலும் உன் நம்பிக்கையைப்
பார்த்து வியக்கிறேன், சார்லி பிரவுன்.

34
00:03:44,600 --> 00:03:45,601
நன்றாக எறிந்தாய்.

35
00:03:46,185 --> 00:03:47,686
முட்டிகளை தூக்கு, ஷெர்மி.

36
00:03:47,769 --> 00:03:49,188
அது ஒரு அற்புதமான நகர்வு.

37
00:03:49,271 --> 00:03:51,356
-இரண்டு, மூன்று, நான்கு.
-நல்ல ஆற்றல், பிக்பென்.

38
00:03:51,440 --> 00:03:52,774
ஹாய்!

39
00:03:53,317 --> 00:03:56,361
-நன்றாக சுழற்றினாய், லூசி.
-நன்றி, சார்லி பிரவுன்.

40
00:03:58,488 --> 00:03:59,615
சரி, அணியினரே.

41
00:03:59,698 --> 00:04:02,451
நாளை நாம் வெல்லப் போகும்

42
00:04:02,534 --> 00:04:04,912
பெரும் போட்டிக்கு முன்பான,
கடைசிப் பயிற்சி இதுதான்.

43
00:04:04,995 --> 00:04:06,455
பொறுங்கள்.

44
00:04:06,538 --> 00:04:07,915
யாராவது ஸ்நூப்பியைப் பார்த்தீர்களா?

45
00:04:25,724 --> 00:04:28,310
என் நாய். வல்லவன்.

46
00:04:36,485 --> 00:04:38,695
சரி. ஆரம்பிக்கலாம்.

47
00:04:39,905 --> 00:04:41,073
நான் பிடிக்கிறேன்.

48
00:04:54,753 --> 00:04:55,963
தரையை நோக்கி அடிக்கப்பட்டது!

49
00:04:59,216 --> 00:05:00,342
நீயே பந்தை வைத்துக் கொள்கிறாய்.

50
00:05:01,134 --> 00:05:02,344
சிறப்பான ஆட்டம், அணியினரே.

51
00:05:03,095 --> 00:05:05,305
விலகிவிடு. இதை நான் பிடிக்கிறேன்.

52
00:05:17,818 --> 00:05:19,653
இயற்கையான என் சுருள் முடி!

53
00:05:21,446 --> 00:05:22,781
கடவுளே.

54
00:05:23,448 --> 00:05:24,992
ஹலோ, அண்ணா.

55
00:05:25,075 --> 00:05:27,619
உ ங்கள் நட்சத்திர வீரர் வந்துவிட்டேன்.

56
00:05:29,955 --> 00:05:31,164
என் நட்சத்திர வீரரா?

57
00:05:31,248 --> 00:05:32,165
ஆமாம்.

58
00:05:32,249 --> 00:05:35,711
எனக்கு ஐந்து வயதானதும், உங்கள் அணியில்
என்னை சேர்த்துக் கொள்வதாய் உறுதியளித்தீர்கள்.

59
00:05:35,794 --> 00:05:37,087
ஞாபகமிருக்கிறதா?

60
00:05:38,172 --> 00:05:40,007
அதற்குள் ஒரு வருடமாகிவிட்டதா?

61
00:05:45,971 --> 00:05:47,097
சரி, சாலி.

62
00:05:47,181 --> 00:05:48,640
சொன்னது சொன்னதுதான்.

63
00:05:48,724 --> 00:05:49,975
உன்னை அதற்கு தயார் செய்வோம்.

64
00:05:59,359 --> 00:06:01,153
நன்றி, அண்ணா.

65
00:06:01,236 --> 00:06:03,989
அல்லது, "மேலாளர்" என சொல்லணுமா?

66
00:06:06,158 --> 00:06:08,535
சரி. உன் திறமை என்னவென்று பார்க்கலாம்.

67
00:06:10,621 --> 00:06:14,583
இத்தருணத்திற்காகத் தான்
என் வாழ்நாள் முழுவதும் காத்திருந்தேன்.

68
00:06:19,505 --> 00:06:21,048
பரவாயில்லை, சாலி.

69
00:06:21,131 --> 00:06:22,299
நீ நம்பமாட்டாய்,

70
00:06:22,382 --> 00:06:25,052
உன் முன்பு எப்போதுமே
நான் சிறப்பாக பந்து வீசமாட்டேன்.

71
00:06:28,514 --> 00:06:31,433
உங்கள் அணிக்கு எப்படிப்பட்ட திறமை கிடைக்கப்
போகிறது என பார்க்கத் தயாராகுங்கள்.

72
00:06:38,690 --> 00:06:39,525
டமால்!

73
00:06:59,753 --> 00:07:00,587
டமால்!

74
00:07:03,423 --> 00:07:05,259
பிடித்துவிடுவேன். பிடித்துவிடுவேன்.

75
00:07:08,595 --> 00:07:10,472
நான் பிடிக்கவில்லை.

76
00:07:12,099 --> 00:07:14,643
நான் இதற்குத் தயாராகவில்லை
என நினைக்கிறேன்.

77
00:07:17,145 --> 00:07:18,772
கேள், சாலி, உறுதியாக...

78
00:07:20,315 --> 00:07:22,442
ஐயோ. பெப்பெர்மின்ட் பேட்டி வந்துவிட்டாள்.

79
00:07:53,056 --> 00:07:54,808
பாப்!

80
00:08:03,901 --> 00:08:06,236
ஹே, நண்பர்களே. பொறுங்கள்.

81
00:08:14,494 --> 00:08:16,788
ஹே, என் அருமை நண்பா, சக்.

82
00:08:16,872 --> 00:08:20,250
நாளை நடக்கவிருக்கும் போட்டியில்

83
00:08:20,334 --> 00:08:22,920
நீங்கள் தோற்கத் தயாராக இருக்கிறீர்கள்
என நினைக்கிறேன்.

84
00:08:23,003 --> 00:08:24,922
இந்த வருடம் அவ்வாறு நடக்காது,
பெப்பெர்மின்ட் பேட்டி.

85
00:08:25,005 --> 00:08:28,050
என் அணி வலிமையுடன்
போட்டியிடத் தயாராக இருக்கிறது.

86
00:08:28,133 --> 00:08:30,719
நீ சிறந்த விளையாட்டு வீரர்களை
என்றாவதுப் பார்த்திருக்கிறாயா?

87
00:08:35,599 --> 00:08:37,726
நீ என்ன சொன்னாலும் சரி, சக்.

88
00:08:38,309 --> 00:08:42,188
ஹே, பயிற்சியாளரே, நாம் இங்கு கண்டிப்பாக
விளையாடித்தான் வேண்டுமா?

89
00:08:42,272 --> 00:08:45,776
இது பந்து வீசும் மைதானம் போல்
இல்லாமல் காலியிடம் போலிருக்கிறது.

90
00:08:46,485 --> 00:08:49,905
ஆமாம், மூன்றாவது பேஸ்மேனை விட
அசுத்தமாக இருக்கிறது.

91
00:08:52,616 --> 00:08:54,117
பார், சக்,

92
00:08:54,201 --> 00:08:57,538
வேண்டுமானால், நாளை உனக்காக
சில இன்னிங்ஸுகளை விட்டுக்கொடுக்கிறோம்,

93
00:08:57,621 --> 00:09:01,041
ஆனால் நீ அதை விரும்பமாட்டாய்,
அப்படித்தானே?

94
00:09:02,793 --> 00:09:05,671
நீ எங்களைப் பற்றி கவலைப்படாதே,
பெப்பெர்மின்ட் பேட்டி.

95
00:09:05,754 --> 00:09:07,047
நாங்கள் தயாராக இருப்போம்.

96
00:09:07,130 --> 00:09:09,132
உன் நம்பிக்கை எனக்குப் பிடித்திருக்கிறது, சக்.

97
00:09:09,633 --> 00:09:14,513
நாளை பெருமளவு வித்தியாசத்தில்
உன்னை வென்று காட்டுகிறேன்.

98
00:09:23,856 --> 00:09:25,983
ஐந்து வயதாகியும்,

99
00:09:26,066 --> 00:09:30,696
எனக்கு பேஸ்பால் அணியில் சேரும்
வயதாகவில்லை போல.

100
00:09:50,757 --> 00:09:52,759
ஹே, ஹலோ, சிறிய மலரே.

101
00:09:55,846 --> 00:09:58,015
நீ இங்கு தனியாக என்ன செய்கிறாய்?

102
00:10:02,227 --> 00:10:04,730
நீ அணிக்குப் பொருத்தமானவள் இல்லை
என எப்போதாவது நினைத்திருக்கிறாயா?

103
00:10:09,318 --> 00:10:11,236
ஆமாம், நானும் நினைத்திருக்கிறேன்.

104
00:10:11,737 --> 00:10:13,697
நம்மிடையே பொதுவான விஷயங்கள்
நிறைய உள்ளன.

105
00:10:29,880 --> 00:10:31,381
நம்மை போன்ற சிறியவர்கள்,

106
00:10:32,216 --> 00:10:33,634
ஒன்றாக இருக்க வேண்டும்.

107
00:10:35,844 --> 00:10:38,722
கவலைப்படாதே.
நான் உன்னைப் பார்த்துக்கொள்கிறேன்.

108
00:10:38,805 --> 00:10:40,182
சத்தியமாக.

109
00:11:03,956 --> 00:11:05,999
பெப்பெர்மின்ட் பேட்டி சொன்னதைப்
பொருட்படுத்தாதீர்கள்.

110
00:11:06,083 --> 00:11:08,752
நான் தான் உங்கள் மேலாளர். அவளில்லை.

111
00:11:08,836 --> 00:11:10,170
நம்மால் வெல்ல முடியும்.

112
00:11:10,254 --> 00:11:13,048
நாம் ஒரு அணியாக ஒற்றுமையுடன் சேர்ந்து
விளையாட வேண்டும்.

113
00:11:13,131 --> 00:11:15,801
ஒவ்வொரு வருடமும் ஏன் எங்களை
இப்படி செய்ய வைக்கிறாய்?

114
00:11:15,884 --> 00:11:19,805
நாம் எவ்வளவு முயன்றாலும்,
இறுதியில் ஒரே முடிவு தானே.

115
00:11:20,389 --> 00:11:22,474
பெப்பெர்மின்ட் பேட்டி வென்றுவிடுவாள்.

116
00:11:22,558 --> 00:11:24,268
நாம் தோற்றுவிடுவோம்.

117
00:11:24,351 --> 00:11:26,770
அது நிச்சயம்.
அவள் சொல்வது சரி தான்.

118
00:11:26,854 --> 00:11:28,605
உங்களுக்கு என்ன பிரச்சினை, நண்பர்களே?

119
00:11:29,189 --> 00:11:30,649
உங்கள் நம்பிக்கை எங்கே போனது?

120
00:11:31,149 --> 00:11:33,652
இந்த வருடம் வித்தியாசமாக இருக்கும்
என நம்புங்கள்.

121
00:11:33,735 --> 00:11:36,905
நாம் அவர்களின் யுக்தியை அறிந்துள்ளோம்.
அவர்களின் பலமும் நமக்குத் தெரியும்.

122
00:11:36,989 --> 00:11:38,574
பலவீனங்களும் தெரியும்.

123
00:11:38,657 --> 00:11:40,117
நாளை மாலைக்குள்,

124
00:11:40,200 --> 00:11:43,704
அந்தக் கொடிக்கம்பத்தில் மற்றுமொரு வெற்றிக்கொடியைப்
பறக்கவிடுவோம் என உறுதியளிக்கிறேன்.

125
00:11:43,787 --> 00:11:45,289
ஆனால் அது நீங்கள் நம்பினால் மட்டுமே முடியும்.

126
00:11:46,164 --> 00:11:47,207
என்னுடன் ஒத்துழைப்பீர்களா?

127
00:11:51,628 --> 00:11:53,755
ஜாலி! ஹூரே!

128
00:11:53,839 --> 00:11:55,215
ஹைய்யா!

129
00:11:55,299 --> 00:11:56,508
உங்களால் முடியும், அணியினரே.

130
00:11:56,592 --> 00:11:59,261
போங்கள், போங்கள்!
அந்தக் களத்தில் விளையாடி அசத்துவோம்.

131
00:11:59,845 --> 00:12:01,221
ஜாலி!

132
00:12:02,931 --> 00:12:04,558
நீ விளையாடுகிறாயா என்ன?

133
00:12:04,641 --> 00:12:05,893
இது ரொம்ப மோசம்.

134
00:12:05,976 --> 00:12:07,936
-உண்மையாகவா?
-அவள் என்ன செய்கிறாள்?

135
00:12:08,020 --> 00:12:09,479
சாலி?

136
00:12:09,563 --> 00:12:10,898
ஹலோ, அண்ணா.

137
00:12:11,398 --> 00:12:12,649
தயவு செய்து, கொஞ்சம் நகர்கிறாயா?

138
00:12:12,733 --> 00:12:14,484
நீ வழியை மறைத்திருக்கிறாய்.

139
00:12:14,568 --> 00:12:16,153
அவள் வழியை முழுவதுமாக அடைத்திருக்கிறாள்.

140
00:12:16,236 --> 00:12:17,613
-சரியாகச் சொன்னாய், ஃபிராங்க்ளின்.
-ஆமாம்.

141
00:12:17,696 --> 00:12:18,989
-ம்-ம்.
-சரிதான்.

142
00:12:19,072 --> 00:12:20,657
இது ஒரு கேலிக்கூத்து.

143
00:12:20,741 --> 00:12:24,661
நீங்கள் பார்த்ததிலேயே மிகவும்
அழகான மலர் இதுதானே?

144
00:12:26,079 --> 00:12:28,457
மலரா? இது டாண்டேலியன்.

145
00:12:28,540 --> 00:12:31,043
டாண்டேலியன்கள் என்பது ஒருவித களைகள், சாலி.

146
00:12:31,960 --> 00:12:33,253
அவளை அப்படி சொல்லாதே.

147
00:12:33,337 --> 00:12:35,464
நீ அவள் உணர்வுகளைக் காயப்படுத்துகிறாய்.

148
00:12:35,547 --> 00:12:39,551
அவள் ஒரு அழகான சிறிய மலர்,
அவள் போற்றப்பட வேண்டியவள்.

149
00:12:39,635 --> 00:12:41,637
பந்து வீசும் இடத்தில் வேறு உள்ளது.

150
00:12:41,720 --> 00:12:43,263
மிதிபடப் போகிறது.

151
00:12:43,347 --> 00:12:45,390
அவ்வாறு நடக்க நான் விடமாட்டேன்.

152
00:12:45,474 --> 00:12:48,560
அவள் என் தோழி, அவளை நான் பாதுகாப்பேன்
என உறுதியளித்துள்ளேன்.

153
00:12:48,644 --> 00:12:49,853
என்ன?

154
00:12:49,937 --> 00:12:52,523
நாம் பயிற்சி செய்ய வேண்டுமென சொன்னாயே.

155
00:12:52,606 --> 00:12:55,025
ஆமாம். ஆரம்பிக்கலாம்!

156
00:12:56,485 --> 00:12:57,986
எல்லோரும், அமைதியாக இருங்கள்.

157
00:12:58,070 --> 00:12:59,196
இதை நான் பார்த்துக்கொள்கிறேன்.

158
00:13:00,531 --> 00:13:04,201
சாலி, இன்று காலை அம்மா உனக்குப் பிடித்த
ரொட்டிகளை சமைத்தது உனக்குத் தெரிந்திருக்காது.

159
00:13:04,701 --> 00:13:06,828
நீ வீட்டிற்கு விரைந்து சென்றால்,
உனக்கு ஒன்று கொடுப்பார்கள்.

160
00:13:09,498 --> 00:13:12,209
என் மனதை யாராலும் மாற்ற முடியாது.

161
00:13:13,043 --> 00:13:15,629
நீ வேறெதாவது யுக்தியை முயற்சி செய்.

162
00:13:16,255 --> 00:13:18,549
-எப்படிப்பட்ட யுக்தி?
-சாக்ரடிக் முறை.

163
00:13:18,632 --> 00:13:23,053
இது ஒரு வகையான விவாத உரையாடல்
கேள்விகளைக் கேட்டு பதிலளிப்பதன் மூலம்

164
00:13:23,136 --> 00:13:24,972
இக்கட்டான சூழ்நிலையில் யோசிக்க வைக்கும்.

165
00:13:25,639 --> 00:13:26,932
சாக்ரடிக்கா, என்ன?

166
00:13:28,267 --> 00:13:29,601
கெஞ்சுவதுக் கூட சரி வரலாம்.

167
00:13:32,771 --> 00:13:33,814
சாலி,

168
00:13:34,606 --> 00:13:36,692
தயவு செய்து நகரு!

169
00:13:36,775 --> 00:13:38,861
நாளைய போட்டிக்கு
நாங்கள் பயிற்சி செய்ய வேண்டும்.

170
00:13:39,486 --> 00:13:40,696
நகர மாட்டேன்.

171
00:13:42,948 --> 00:13:45,409
ரொம்ப அற்புதம்.

172
00:13:45,492 --> 00:13:47,911
கண்டிப்பாக இனி நம்மால்
இந்தப் போட்டியை வெல்ல முடியாது!

173
00:13:52,291 --> 00:13:54,042
இது ஒரு சிறிய பிரச்சினை.

174
00:13:54,126 --> 00:13:55,544
பெரிய விஷயமல்ல.

175
00:13:55,627 --> 00:13:57,212
என் தங்கையைப் பற்றி எனக்குத் தெரியும்.

176
00:13:57,296 --> 00:13:59,506
அவள் சலிப்படைந்து சீக்கிரம்
வீட்டிற்குச் சென்றுவிடுவாள்.

177
00:13:59,590 --> 00:14:02,509
அதுவரை, நாம் அவளைச் சுற்றி பயிற்சி செய்வோம்.

178
00:14:02,593 --> 00:14:04,344
எல்லோரும், அவரவர் இடத்தில் நில்லுங்கள்.

179
00:14:13,979 --> 00:14:16,023
"ஒரு பொன்மயமான நேரத்தில்

180
00:14:16,732 --> 00:14:18,692
மண்ணில் ஒரு விதையை விதைத்தேன்.

181
00:14:19,735 --> 00:14:22,112
அது மலராக உருவெடுத்தது,

182
00:14:22,988 --> 00:14:25,115
அதை மக்கள், "களை" என்றனர்.

183
00:14:31,663 --> 00:14:32,581
நான் பிடிக்கிறேன்!

184
00:14:34,958 --> 00:14:35,792
டமால்!

185
00:14:52,601 --> 00:14:54,061
மூன்றாவது ஸ்ட்ரைக்!

186
00:14:54,144 --> 00:14:55,187
ஐயோ!

187
00:15:11,411 --> 00:15:15,082
சாலி? நம்மிடையே சில கருத்து வேறுபாடுகள்
இருப்பது உண்மைதான், ஆனால் இதைப் பார்.

188
00:15:15,165 --> 00:15:17,000
அம்மா சமைத்த சில ரொட்டிகளை
உனக்காக கொண்டு வந்துள்ளேன்.

189
00:15:38,397 --> 00:15:39,648
அவள் திரும்பி வந்துவிடுவாள்.

190
00:15:39,731 --> 00:15:40,774
அப்படித்தான் நம்புகிறேன்.

191
00:15:42,860 --> 00:15:45,279
அந்த கரடுமுரடான பழைய மேடு
அவ்வளவு வசதியாக இருக்காது.

192
00:15:45,779 --> 00:15:48,073
நாளை காலைக்குள் எல்லாம் சரியாகிவிடும்.

193
00:16:11,305 --> 00:16:12,431
இன்று போட்டி நாள்.

194
00:16:18,604 --> 00:16:20,314
எனக்கு வாழ்த்துச் சொல், ஜோ.

195
00:16:22,858 --> 00:16:26,987
சார்லி பிரவுன்!
சார்லி பிரவுன்! சார்லி பிரவுன்!

196
00:16:29,489 --> 00:16:33,285
சார்லி பிரவுன்! சார்லி பிரவுன்!
சார்லி பிரவுன்!

197
00:16:33,368 --> 00:16:35,662
சார்லி... பிரவுன்?

198
00:16:35,746 --> 00:16:37,331
காலை வணக்கம், அண்ணா.

199
00:16:37,414 --> 00:16:40,125
சாலி, நீ என்ன செய்கிறாய்?

200
00:16:40,209 --> 00:16:42,794
எப்போதும் இந்த மேட்டிலேயே
உட்கார்ந்திருக்க முடியாது.

201
00:16:42,878 --> 00:16:44,213
என்னால் முடியும்!

202
00:16:44,296 --> 00:16:47,132
நான் சத்தியம் செய்துள்ளேன்,
என்னால் அதை மீற முடியாது.

203
00:16:47,925 --> 00:16:49,051
உங்களுக்குத் தெரியவில்லையா?

204
00:16:49,134 --> 00:16:50,969
இந்த மலருக்கு என் உதவி வேண்டும்.

205
00:16:51,053 --> 00:16:53,222
ஆனால் இன்று சாம்பியன்ஷிப் போட்டி.

206
00:16:53,305 --> 00:16:55,807
தோற்றால் விளைவுகள் எப்படியிருக்கும்
எனத் தெரியுமா?

207
00:16:55,891 --> 00:16:57,059
தெரியும்.

208
00:16:57,142 --> 00:16:59,353
உங்கள் விளையாட்டு முக்கியமில்லை.

209
00:16:59,937 --> 00:17:02,940
இந்த சிறு மலர் தான் முக்கியம்.

210
00:17:03,023 --> 00:17:05,442
ஆனால் இது மலரல்ல. இது ஒரு களை.

211
00:17:05,526 --> 00:17:07,027
என்னால் இதை நம்ப முடியவில்லை.

212
00:17:07,109 --> 00:17:08,862
இவள் இன்னும் இங்கேயே இருக்கிறாள்!

213
00:17:08,945 --> 00:17:11,698
"என் தங்கையைப் பற்றி எனக்குத் தெரியும்",
என்று சொன்னவனுக்கு என்னவானது?

214
00:17:11,781 --> 00:17:14,785
சார்லி பிரவுன் எப்போது ஒரு விஷயத்தைச்
சரியாக செய்திருக்கிறான்?

215
00:17:14,867 --> 00:17:17,954
அண்ணா, உங்கள் உரையாடலை
வேறெங்காவது வைத்துக் கொள்கிறீர்களா?

216
00:17:18,038 --> 00:17:20,749
இங்கு நடக்கும் சண்டை
என் மலரை பலவீனப்படுத்துகிறது.

217
00:17:21,333 --> 00:17:22,542
சரி, எல்லோரும் கவனியுங்கள்.

218
00:17:22,626 --> 00:17:24,336
எனக்கு யோசிக்க நேரம் கொடுங்கள்.

219
00:17:25,378 --> 00:17:27,130
மருத்துவர் உள்ளே இருக்கிறார்

220
00:17:27,214 --> 00:17:28,757
மன உளைச்சலுக்கான உதவி

221
00:17:28,841 --> 00:17:31,510
போட்டித் தொடங்குவதற்கு முன்,
நீ திறந்து வைத்திருப்பதற்கு நன்றி, லூசி.

222
00:17:32,261 --> 00:17:34,346
எனக்கு உதவித் தேவைப்படுகிறது.

223
00:17:34,429 --> 00:17:36,890
நீ சரியான இடத்திற்குத் தான் வந்திருக்கிறாய்,
சார்லி பிரவுன்.

224
00:17:36,974 --> 00:17:40,060
உன் பிரச்சினையை என்னைத் தவிர வேறு
யாராலும் தீர்க்க முடியாது.

225
00:17:40,143 --> 00:17:41,353
உன் கோப்பை எடுக்கிறேன்.

226
00:17:47,401 --> 00:17:48,527
சொல்.

227
00:17:51,321 --> 00:17:53,282
இது சாலியைப் பற்றிய விஷயம்.

228
00:17:53,365 --> 00:17:55,284
இன்னும் அவள் பந்து எறிபவரின்
இடத்தை விட்டு நகரவில்லை,

229
00:17:55,367 --> 00:17:57,369
அதோடு இன்று சாம்பியன்ஷிப் போட்டி
நடக்கப் போகிறது.

230
00:17:58,120 --> 00:17:59,955
நீ அவளிடம் பேசிப் பார்க்கலாமே
என நினைத்தேன்.

231
00:18:02,124 --> 00:18:04,209
நான் பொதுவாக அந்த இடத்திற்கே சென்று
சிகிச்சை அளிப்பதில்லை.

232
00:18:05,127 --> 00:18:07,504
இதற்காக நீ கூடுதலாக எனக்கு ஐந்து சென்ட்
தர வேண்டி இருக்கும்.

233
00:18:10,507 --> 00:18:13,969
மூன்று சென்ட் மற்றும் பட்டர்ஸ்காட்ச்
பரவாயில்லையா?

234
00:18:16,471 --> 00:18:17,764
நான் செய்கிறேன்!

235
00:18:26,148 --> 00:18:28,442
சாலி எதை நிரூபிக்க காத்திருக்கிறாள் என்றே
எனக்கு புரியவில்லை.

236
00:18:28,525 --> 00:18:31,320
இது சாதாரண களை, எளிதாக பிடுங்கிவிடலாம்.

237
00:18:32,571 --> 00:18:34,281
கவலைப்படாதே, சார்லி பிரவுன்.

238
00:18:34,364 --> 00:18:35,699
இதை நான் பார்த்துக்கொள்கிறேன்.

239
00:18:39,286 --> 00:18:41,038
லூசி பேசியே கவிழ்த்துவிடுவாள்.

240
00:18:41,121 --> 00:18:42,915
இது கண்டிப்பாக வேலை செய்யும்.

241
00:18:45,501 --> 00:18:47,753
இது வேலை செய்கிறது.

242
00:18:47,836 --> 00:18:49,338
சாலி நிற்கிறாள்.

243
00:18:49,421 --> 00:18:51,590
எப்போது வேண்டுமானால் அவள் நகரலாம்.

244
00:18:53,884 --> 00:18:54,927
அவள் உட்காருகிறாள்!

245
00:18:55,552 --> 00:18:56,720
உட்காராதே!

246
00:18:57,721 --> 00:18:59,097
இப்போது லூசியும் உட்காருகிறாளா?

247
00:18:59,890 --> 00:19:01,558
நீ உட்காரக் கூடாதே!

248
00:19:01,642 --> 00:19:03,477
நீ நகர்ந்துக் கொண்டே இருக்க வேண்டும்!

249
00:19:04,436 --> 00:19:05,854
நான் கொடுத்த காசைத் திருப்பிக் கொடு.

250
00:19:06,355 --> 00:19:08,190
கவலைப்படாதே, சிறிய மலரே.

251
00:19:08,273 --> 00:19:11,026
சார்லி பிரவுன் ஹலோ
சொல்ல தான் வந்திருக்கிறான்.

252
00:19:11,527 --> 00:19:12,653
நானா?

253
00:19:12,736 --> 00:19:14,279
அவன் உன்னை கஷ்டப்படுத்த
நாங்கள் விடமாட்டோம்.

254
00:19:14,780 --> 00:19:16,740
நாங்களா? யார் அந்த நாங்கள்?

255
00:19:16,823 --> 00:19:18,450
சரி, விளையாட்டின் கதி?

256
00:19:18,534 --> 00:19:20,035
நம்மால் இப்போது விளையாட முடியாது.

257
00:19:20,118 --> 00:19:21,870
உனக்குத் தெரியவில்லையா, சார்லி பிரவுன்?

258
00:19:21,954 --> 00:19:26,875
சாலி தனியாக செயல்படக் கூடியவள், இக்கட்டான
நேரங்களில் கூட தன் நம்பிக்கைகளுக்காக நிற்பவள்.

259
00:19:26,959 --> 00:19:31,088
அவள் திடமானவள், சக்தி வாய்ந்தவள்,
பலருக்கு எடுத்துக்காட்டாக இருப்பவள்.

260
00:19:31,588 --> 00:19:34,883
யோசித்தால், அவள் யாரை எனக்கு நினைவூட்டுகிறாள்
தெரியுமா, சார்லி பிரவுன்?

261
00:19:34,967 --> 00:19:35,884
யாரை நினைவூட்டுகிறாள்...

262
00:19:36,385 --> 00:19:37,553
என்னைத்தான்!

263
00:19:38,679 --> 00:19:40,764
நான் பெரிய தவறு செய்துவிட்டேன் போலும்.

264
00:19:41,515 --> 00:19:43,767
குறைந்த - அதிக அளவு
சத்தம்

265
00:19:44,685 --> 00:19:46,895
கேளுங்கள், குடிமக்களே.

266
00:19:46,979 --> 00:19:52,150
சாலி பிரவுன் ஒரு சிறிய கேட்பாரற்ற பூவிற்கு
துணை நிற்கிறாள்.

267
00:19:52,234 --> 00:19:55,070
அவளது கருத்தை நீங்கள் கேட்க வேண்டும்.

268
00:19:55,153 --> 00:19:57,573
அடக்க முடியாத அளவிற்கு
அவளிடம் ஒரு குரல் உள்ளது.

269
00:19:59,074 --> 00:20:01,577
சாலி பிரவுன் என்ன செய்கிறாள்
என கேள்விப்பட்டாயா?

270
00:20:01,660 --> 00:20:04,538
அந்த பூவை பாதுகாக்க இரவு முழுவதும் அதன்
அருகே அமர்ந்திருந்தாள் என கேள்விப்பட்டேன்.

271
00:20:04,621 --> 00:20:08,083
அவள் ஒரு போராளி என எனக்குத் தெரியும்.
அதோடு அவள் என்னோடு தான் படிக்கிறாள்.

272
00:20:08,166 --> 00:20:10,377
அது மிகச் சிறப்பான பூவாக இருக்க வேண்டும்.

273
00:20:10,460 --> 00:20:13,130
-நீ போகிறாயா?
-உனக்கு தட்டு நிறைய பர்கர் கொண்டு வருகிறேன்.

274
00:20:13,213 --> 00:20:15,215
உன்னை அங்கு சந்திக்கிறேன்.
இதை நன்றாக பரப்பு!

275
00:20:15,299 --> 00:20:17,843
அவளிடம் உங்கள் ஆதரவு மட்டும் தான் இல்லை!

276
00:20:17,926 --> 00:20:20,888
அதே தான், அவளுக்கு உங்கள் உதவி தேவை.

277
00:20:20,971 --> 00:20:24,600
பாவம், பூக்களால் தங்களை
காப்பாற்றிக்கொள்ள முடியாது அல்லவா?

278
00:20:24,683 --> 00:20:28,061
எனவே சாலி போல இருங்கள்,
பூவிற்கு துணையாக நில்லுங்கள்!

279
00:20:28,145 --> 00:20:30,439
இந்த மேட்டில் எங்களோடு வந்து உட்காருங்கள்.

280
00:20:30,522 --> 00:20:32,900
இதை உங்கள் நண்பர்களிடம் சொல்லி, பரப்புங்கள்!

281
00:20:32,983 --> 00:20:36,403
உங்களுடைய உரிமைகளைப் பயன்படுத்துங்கள்!

282
00:20:48,749 --> 00:20:51,126
என்ன தான் நடக்கிறது?

283
00:20:51,210 --> 00:20:53,337
இந்நேரம், நீ உன் தங்கையை
அனுப்பி இருக்க வேண்டும்.

284
00:20:53,420 --> 00:20:56,423
ஆமாம்! எரிகிற தீயில் எண்ணெயை ஊற்றக் கூடாது!

285
00:20:56,507 --> 00:20:59,468
என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள், கோச்?

286
00:20:59,551 --> 00:21:01,011
வந்து, நான்...

287
00:21:02,262 --> 00:21:04,681
எப்படி இருக்கிறாய், சிறிய மலரே?

288
00:21:04,765 --> 00:21:06,934
நான் என் வானொலியை கொண்டு வந்திருக்கலாம்.

289
00:21:07,017 --> 00:21:09,228
பூக்களுக்கு இசை பிடிக்கும் என
கேள்விப்பட்டிருக்கிறேன்.

290
00:21:10,062 --> 00:21:11,563
அப்படியென்றால் நான் உதவுகிறேன்.

291
00:21:11,647 --> 00:21:14,399
ஓ, ஷ்ரோடெர்!

292
00:21:14,483 --> 00:21:16,401
உன் உதவி எங்களுக்குத் தேவை!

293
00:21:16,902 --> 00:21:19,404
பூக்களுக்கு பாரம்பரிய இசை பிடிக்கும்.

294
00:21:25,327 --> 00:21:27,079
விளையாட்டின் கதி என்ன?

295
00:21:27,162 --> 00:21:30,207
பேஸ்பால் விளையாட்டு, வரும் போகும்,
சார்லி பிரவுன்.

296
00:21:30,290 --> 00:21:33,877
ஆனால் இப்படி ஆர்வமுள்ள பார்வையாளர்களை
வைத்துக் கொண்டு, என்னால் சும்மா இருக்க முடியாது.

297
00:21:38,841 --> 00:21:42,386
ஹேய், சிறிய மலரே.
உன் புதிய நண்பர்களைப் பார்.

298
00:21:42,469 --> 00:21:44,763
இனி நீ தனிமையாக உணரவே மாட்டாய்.

299
00:21:46,390 --> 00:21:48,016
உன்னால் நம்ப முடிகிறதா?

300
00:21:48,100 --> 00:21:53,146
இது போன்ற ஒரு நிலத்தில், பாதுகாக்கும்படி அழகான
விஷயத்தை சாலி கண்டுப்பிடித்து இருக்கிறாள்.

301
00:21:54,189 --> 00:21:55,899
சாலி ஒரு பூவிற்காக கவலைப்படுவது போல

302
00:21:55,983 --> 00:21:59,611
ஏதாவது ஒரு விஷயத்திற்காக கவலைப்படுவது எப்படி
இருக்கும் என நான் தெரிந்துக்கொள்ள வேண்டும்.

303
00:22:02,281 --> 00:22:03,824
ஹேய்! எங்கே போகிறீர்கள்?

304
00:22:04,658 --> 00:22:07,119
பொறுங்கள், அவசரமாக
எந்த முடிவும் எடுக்க வேண்டாம்.

305
00:22:07,202 --> 00:22:08,912
வெற்றிக் கொடி என்னாவது?

306
00:22:08,996 --> 00:22:10,497
பெருமை என்னாவது?

307
00:22:10,581 --> 00:22:12,124
என்னுடைய சாம்பியன்ஷிப் என்னாவது?

308
00:22:18,755 --> 00:22:20,507
நீயாவது என்னோடு இருக்கிறாயே.

309
00:22:20,591 --> 00:22:21,884
இருக்கிறாய் தானே, ஸ்நூப்பி?

310
00:22:26,805 --> 00:22:28,182
நீ கூட இல்லையா!

311
00:22:28,265 --> 00:22:30,642
கடவுளே. அடுத்து என்ன நடக்கும்?

312
00:23:10,891 --> 00:23:13,227
இது எல்லை மீறி போய்க் கொண்டிருக்கிறது.

313
00:23:13,310 --> 00:23:17,147
சாம்பியன்ஷிப் விளையாட்டைப் பற்றி
யாருக்குமே கவலை இல்லையா?

314
00:23:17,231 --> 00:23:18,607
உனக்குக் கேட்கிறதா?

315
00:23:20,359 --> 00:23:25,322
இல்லை, இல்லை, நீ கவனமாக கேட்க வேண்டும்

316
00:23:26,865 --> 00:23:29,826
ஒரு டாண்டேலியன் பேசுகிறது

317
00:23:29,910 --> 00:23:35,123
சிரிக்காதீர்கள், அவளிடமிருந்து
நாம் சிலவற்றை கற்றுக்கொள்ள வேண்டும்

318
00:23:36,124 --> 00:23:39,294
நம்மைப் போன்ற
சிறிய விஷயங்கள் தான் அவை

319
00:23:39,378 --> 00:23:44,925
நாம் ஒன்று சேர்ந்து,
பெரிய காரியங்களைச் செய்வோம்

320
00:23:45,634 --> 00:23:47,678
பேஸ்பால் கேமைப் போல

321
00:23:48,887 --> 00:23:51,098
இது ஒருவருக்காக மட்டுமல்ல

322
00:23:51,598 --> 00:23:53,475
அனைவருக்காகவும் தான்

323
00:23:53,976 --> 00:23:55,894
உண்மையை சொல்லப் போனால்

324
00:23:56,603 --> 00:24:01,275
இந்த நிலம் நமக்குச் சொந்தமில்லை,
சார்லி பிரவுன்

325
00:24:02,860 --> 00:24:04,278
நாம் இதை பகிர்ந்துக்கொள்கிறோம்

326
00:24:05,112 --> 00:24:07,823
எனவே, தயவுசெய்து, பொறுமையாக இரு!

327
00:24:07,906 --> 00:24:09,908
இந்த மேட்டில் ஒரு உயிர் உள்ளது

328
00:24:09,992 --> 00:24:12,828
உனக்கு அந்த சத்தம் கேட்கிறதா?

329
00:24:13,620 --> 00:24:17,249
இவை சிறிய விஷயங்கள், சார்லி பிரவுன்

330
00:24:18,834 --> 00:24:22,171
அங்கே, உன்னால்
அதைப் பார்க்க முடியவில்லையா?

331
00:24:22,254 --> 00:24:27,050
அது நீ தான், தனிமையான மலரே

332
00:24:28,427 --> 00:24:31,054
அது நம்மால் உருவான ஒரு நிலம்

333
00:24:31,638 --> 00:24:36,810
நாம் ஒரு குழுவாக இணைகிறோம்
மற்றும் அது தான் நம் பலம்

334
00:24:36,894 --> 00:24:38,979
எனவே அறிந்துக்கொள்

335
00:24:39,771 --> 00:24:42,274
நீ எங்கே கால் வைக்கிறாயோ

336
00:24:42,357 --> 00:24:48,197
எதன் மீது அல்லது யார் மீது
கால் பதிக்கப் போகிறாயோ

337
00:24:48,280 --> 00:24:50,532
இப்போதே, மேலே பார்

338
00:24:50,616 --> 00:24:52,618
மிகப் பெரிய, அற்புதமான

339
00:24:52,701 --> 00:24:55,412
சரி, நானே சொல்கிறேன்

340
00:24:56,413 --> 00:25:00,501
சிறு துளிகள் தானே மேகமாகின்றன

341
00:25:01,043 --> 00:25:05,088
இவை சிறிய விஷயங்கள், சார்லி பிரவுன்

342
00:25:06,715 --> 00:25:10,552
அதிகமான சிறு புள்ளிகளால் கூட

343
00:25:10,636 --> 00:25:16,934
வடிவங்களாக முடியும், தொலைவில் இருந்து
பார்த்தால் முகம் போலத் தெரியும்

344
00:25:17,726 --> 00:25:20,187
மற்றும் மெல்லிய குரலால்

345
00:25:20,270 --> 00:25:24,733
மிகப் பெரிய இரைச்சலை அமைதியாக்க முடியும்

346
00:25:24,816 --> 00:25:28,570
உண்மையை

347
00:25:29,863 --> 00:25:31,031
உண்மையை பேசும் போது

348
00:25:35,786 --> 00:25:37,829
மேலே பார், கீழே பார்

349
00:25:37,913 --> 00:25:42,709
வானம் மற்றும் பூமியின்
சத்தம் அதிகரிக்கிறது

350
00:25:44,169 --> 00:25:47,840
மிகவும் துணிச்சல் வாய்ந்த மலரின் குரல்

351
00:25:48,632 --> 00:25:52,845
சரியான கோணத்தில் இல்லாவிட்டால்

352
00:25:53,345 --> 00:25:57,558
அந்த சத்தத்தைக் கேட்க இயலாது, சார்லி பிரவுன்

353
00:25:58,141 --> 00:26:04,648
சரியானதைச் செய்
கவனிக்கிறாயா, சார்லி பிரவுன்?

354
00:26:12,948 --> 00:26:14,867
இதற்கு மேல் எப்படி மோசமடைய முடியும்?

355
00:26:30,090 --> 00:26:31,717
ஹே, என் அருமை நண்பா, சக்.

356
00:26:31,800 --> 00:26:33,468
போட்டிக்குத் தயாரா?

357
00:26:33,552 --> 00:26:36,471
ஒன்பது நீண்ட இன்னிங்ஸில்,
போட்டி போடத் தயாரா?

358
00:26:36,555 --> 00:26:39,766
எந்த அணி வெல்லப் போகிறது
என்பதை பார்க்கத் தயாரா?

359
00:26:45,397 --> 00:26:48,609
என்ன கொண்டாட்டம்? நாம்
பேஸ்பால் விளையாடுகிறோம் என நினைத்தேன்.

360
00:26:51,945 --> 00:26:54,239
இங்கு என்ன நடக்கிறது என புரிகிறது.

361
00:26:54,323 --> 00:26:57,201
உட்கார்ந்து போராட்டம் செய்யும்
சூழ்ச்சி எல்லாம் ரொம்ப பழையது.

362
00:26:57,284 --> 00:27:00,954
நல்ல முயற்சி, சக், ஆனால் இது வேலைக்காகாது.

363
00:27:01,038 --> 00:27:02,039
ஆமாம்!

364
00:27:03,081 --> 00:27:06,376
ஆட்டத்தில் நாங்கள் உன்னை
கடுமையாக தாக்கக் கூடாதென்று,

365
00:27:06,460 --> 00:27:08,921
பந்து எறியும் இடத்தில் உன் தங்கையையே
உட்கார வைத்துவிட்டாயா?

366
00:27:09,004 --> 00:27:12,090
நாம் விளையாடாவிட்டால்,
நீ தோற்க மாட்டாய் என நினைக்கிறாயா?

367
00:27:12,591 --> 00:27:13,884
அப்படித்தானே, சக்?

368
00:27:13,967 --> 00:27:15,844
இல்லை. நான் விளையாட விரும்புகிறேன்.

369
00:27:15,928 --> 00:27:20,224
இந்த டாண்டேலியன் மீது தான்
பலர் கவலைப்படுகிறார்கள்.

370
00:27:20,807 --> 00:27:22,643
குறிப்பாக என் தங்கை.

371
00:27:22,726 --> 00:27:26,980
புரிந்துவிட்டது.
ஒரு பழைய காரணம் சொல்லி தப்பிப்பது.

372
00:27:27,064 --> 00:27:30,067
ஓராயிரம் முறை கேட்டுவிட்டேன், சக்.

373
00:27:30,651 --> 00:27:34,404
நீ செய்ததற்கு தண்டனையாக இந்த விளையாட்டில்
நீ தோற்றுவிட்டாய் என நாங்கள் குறிக்கப் போகிறோம்.

374
00:27:34,488 --> 00:27:37,950
-ஹே!
-மீண்டும் வெற்றி பெற்றுவிட்டோம்!

375
00:27:38,033 --> 00:27:41,411
தன் அணியை கூட ஒழுங்காக வைத்துக்கொள்ள
முடிவயதாவன் எல்லாம் என்ன மேலாளரோ?

376
00:27:41,912 --> 00:27:43,705
அதை எல்லாம் கண்டுகொள்ளாதே, சக்.

377
00:27:43,789 --> 00:27:46,166
ஐந்து வயது சிறுமியை சமாளிப்பது
கடினம் என எல்லோருக்கும் தெரியும்.

378
00:27:46,667 --> 00:27:49,461
தங்கைகள் எப்போதுமே
அண்ணன்களை வென்றுவிடுவார்கள்.

379
00:27:49,962 --> 00:27:53,048
அப்புறம், நினைவில் கொள்,
எப்போதுமே அடுத்த வருட வாய்ப்பு இருக்கும்.

380
00:27:55,884 --> 00:27:56,927
அடுத்த வருடமா?

381
00:28:02,015 --> 00:28:06,520
சார்லி பிரவுன்!
சார்லி பிரவுன்! சார்லி பிரவுன்!

382
00:28:06,603 --> 00:28:07,980
அங்கேயே இருங்கள்.

383
00:28:08,939 --> 00:28:10,649
விளையாட்டு இன்னும் முடியவில்லை.

384
00:28:11,400 --> 00:28:14,069
நீங்கள் எல்லோரும் போக வேண்டாம்.

385
00:28:14,152 --> 00:28:16,154
அந்த டாண்டேலியன் மட்டும் போனால் போதும்.

386
00:28:16,238 --> 00:28:18,156
பிறகு எல்லோரும் அதை பின்தொடர்வார்கள்.

387
00:28:37,426 --> 00:28:38,760
தள்ளிப் போ, சாலி.

388
00:28:42,472 --> 00:28:44,766
மன்னித்துவிடு, இதை செய்தாக வேண்டும்.

389
00:28:44,850 --> 00:28:46,643
வாய்ப்பில்லை, அண்ணா.

390
00:28:46,727 --> 00:28:48,979
நீங்கள் என் மலரைக் காயப்படுத்த
நான் விடமாட்டேன்.

391
00:28:50,314 --> 00:28:52,983
நான் அதைக் காயப்படுத்தப் போவதில்லை, சாலி.

392
00:28:53,066 --> 00:28:54,401
நீ என்னை நம்பித்தான் ஆக வேண்டும்.

393
00:28:54,902 --> 00:28:56,737
அனுமதி மறுக்கப்பட்டது!

394
00:29:02,618 --> 00:29:03,744
வழிவிடு, சாலி.

395
00:29:03,827 --> 00:29:05,704
-முடியாது!
-தள்ளிப் போ.

396
00:29:05,787 --> 00:29:07,039
நான் முடியாது என்றேன்!

397
00:29:07,122 --> 00:29:09,666
-உனக்குப் புரியவில்லை.
-தள்ளிப் போங்கள்!

398
00:29:10,250 --> 00:29:11,877
எங்களை தனியாக விடுங்கள்!

399
00:29:17,883 --> 00:29:20,260
நான் அதை நகர்த்த தான் போகிறேன், சாலி!

400
00:29:20,344 --> 00:29:22,888
ஆனால் நான் அவளுக்கு சத்தியம் செய்துள்ளேனே!

401
00:29:29,144 --> 00:29:30,646
சிறிய மலரே?

402
00:29:32,689 --> 00:29:34,274
உனக்கு ஒன்றுமில்லையே?

403
00:29:46,161 --> 00:29:47,829
என்ன செய்துவிட்டீர்கள் என்று பாருங்கள்!

404
00:29:48,997 --> 00:29:50,207
அதைக் கொன்றுவிட்டீர்கள்.

405
00:29:50,999 --> 00:29:52,793
சாலி? நான்...

406
00:29:52,876 --> 00:29:54,461
நீங்கள் வென்றுவிட்டாய் என நினைக்கிறேன்.

407
00:29:56,672 --> 00:29:58,131
பேஸ்பால் போட்டியை நன்றாக விளையாடுங்கள்.

408
00:30:11,478 --> 00:30:12,521
சரி, சக்,

409
00:30:13,522 --> 00:30:15,732
இந்த மலர் கண்காட்சி முடிந்துவிட்டதே,

410
00:30:16,233 --> 00:30:18,610
இப்போது இந்த வெற்றிக்கொடிக்காக
விளையாட விரும்புகிறாயா?

411
00:30:20,487 --> 00:30:21,488
திடீரென இது,

412
00:30:21,989 --> 00:30:24,241
அந்த அளவுக்கு முக்கியம் இல்லை
என தோன்ற ஆரம்பித்துவிட்டது.

413
00:30:57,524 --> 00:30:58,525
ஆஹா!

414
00:31:46,573 --> 00:31:48,283
சாலி, நில்லு!

415
00:31:54,414 --> 00:31:57,167
நில்லு, சாலி. நான் சொல்வதைக் கொஞ்சம் கேள்.

416
00:31:57,668 --> 00:31:58,961
போய் விடுங்கள்.

417
00:32:00,963 --> 00:32:03,298
உன் பூவுக்கு அப்படி நடக்கும் என
நான் நினைக்கவில்லை.

418
00:32:03,382 --> 00:32:05,217
நீ என்னை நம்ப வேண்டும்.

419
00:32:05,300 --> 00:32:07,302
உங்கள் அவள் மீது அக்கைறையே இல்லையே.

420
00:32:10,430 --> 00:32:12,349
ஆனால் உன் மீது அக்கறை உண்டு.

421
00:32:13,725 --> 00:32:16,395
பேஸ்பாலின் மீது கவனம் செலுத்தியதற்கு
பதிலாக அந்த மலர் உனக்கு

422
00:32:17,020 --> 00:32:19,398
எவ்வளவு முக்கியம் என்பதை
நான் புரிந்திருக்க வேண்டும்.

423
00:32:27,656 --> 00:32:28,740
அது வெறும்...

424
00:32:29,825 --> 00:32:32,703
உண்மையாகவே, நான் அந்த மலர் மீது
அக்கறைக் கொண்டிருந்தேன்.

425
00:32:35,706 --> 00:32:36,748
எனக்குத் தெரியும்.

426
00:32:41,170 --> 00:32:42,254
சாலி?

427
00:32:43,755 --> 00:32:44,923
என்னை மன்னித்துவிடு.

428
00:32:53,140 --> 00:32:54,224
எனக்குத் தெரியும்.

429
00:32:57,561 --> 00:32:59,146
நீ ஒன்றைப் பார்க்க வேண்டும்.

430
00:33:18,665 --> 00:33:20,959
நீயும், உன்னுடைய மலரும்,
பெரிய மாற்றத்தைச் செய்துள்ளீர்கள்.

431
00:33:26,507 --> 00:33:28,383
அது அழகாக இருக்கு.

432
00:33:29,468 --> 00:33:30,802
நானா அப்படி செய்தேன்?

433
00:34:36,784 --> 00:34:38,661
இன்னும் அதிக ஈர வைக்கோல்களை
பயன்படுத்தலாம், பிக்பென்.

434
00:34:42,206 --> 00:34:44,960
செடிகளுக்கு இடையே இடம் விட மறந்துவிடாதே!

435
00:34:45,043 --> 00:34:47,545
அந்த தக்காளிகள் வளர்வதற்கு
நாம் இடம் கொடுக்க வேண்டும்!

436
00:34:49,590 --> 00:34:51,757
அனைவரும், இங்கே வாருங்கள்.

437
00:34:52,759 --> 00:34:56,597
நம் பேஸ்பால் திடலின் பிரம்மாண்ட திறப்பு
விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி.

438
00:34:56,679 --> 00:35:00,475
ஒரு புதிய திடல் மற்றும் ஒரு புதிய துவக்கத்திற்கு
கண்டிப்பாக ஒரு குழு சின்னம் தேவை.

439
00:35:02,102 --> 00:35:03,353
டாண்டேலியன்கள்.

440
00:35:03,437 --> 00:35:05,063
ஏய்!

441
00:35:05,147 --> 00:35:06,607
நீ என்ன நினைக்கிறாய், சாலி?

442
00:35:06,690 --> 00:35:07,733
உனக்கு இது பிடிச்சிருக்கா?

443
00:35:08,817 --> 00:35:09,985
பிடிச்சிருக்காவா?

444
00:35:10,986 --> 00:35:12,154
ரொம்ப பிடிச்சிருக்கு!

445
00:35:12,654 --> 00:35:16,033
என் தோழி, அந்த சிறிய மலரே சந்தோஷப்படுவாள்.

446
00:35:16,116 --> 00:35:18,410
உனக்கு மற்றுமொரு இன்ப அதிர்ச்சி உள்ளது.

447
00:35:23,123 --> 00:35:24,499
அணிக்கு வரவேற்கிறேன்.

448
00:35:26,168 --> 00:35:27,836
துணை மேலாளர்!

449
00:35:28,337 --> 00:35:30,380
நானா? நிஜமாகவா?

450
00:35:34,009 --> 00:35:35,719
இது இனிமையாக உள்ளது,

451
00:35:35,802 --> 00:35:38,013
ஆனால் நாம் எப்போது விளையாட்டை
துவங்கப் போகிறோம்?

452
00:35:41,892 --> 00:35:43,602
எதற்காக இப்படி நிற்கிறீர்கள்?

453
00:35:43,685 --> 00:35:46,063
நாம் விளையாடலாம்!

454
00:35:47,648 --> 00:35:50,067
உங்களால் முடியும்!
நகருங்கள், நகருங்கள், நகருங்கள்!

455
00:35:53,403 --> 00:35:57,157
இந்த நிலத்தை சுத்தம் செய்யும் போது
தான் எனக்கு தோன்றியது.

456
00:35:57,241 --> 00:35:58,951
நாம் இத்தோடு நிறுத்தக் கூடாது.

457
00:35:59,826 --> 00:36:03,664
அறிவான சொற்கள் அமிர்தம்.

458
00:36:17,761 --> 00:36:19,263
வருத்தப்படாதே, சக்.

459
00:36:19,888 --> 00:36:23,600
விளையாடுவதற்கு இப்படி ஒரு அழகான பேஸ்பால் திடல்
இருக்கும் போது ஜெயிப்பது அவ்வளவு முக்கியம் அல்ல.

460
00:36:31,358 --> 00:36:32,401
அவள் சொல்வது சரி தான்.

461
00:36:33,861 --> 00:36:35,529
ஆனால் அது நன்றாக இருந்திருக்கும்!

462
00:36:56,049 --> 00:36:58,510
சார்லஸ் எம்.ஷுல்ஸ் எழுதிய
பீனட்ஸ் படக்கதையின் அடிப்படையில்

463
00:38:14,044 --> 00:38:16,046
தமிழாக்கம் மேனகா மணிகண்டன்

464
00:38:24,137 --> 00:38:26,098
நன்றி, ஸ்பார்க்கி.
என்றும் எங்கள் மனதில் இருக்கிறீர்கள்.



