1
00:00:02,000 --> 00:00:07,000
Downloaded from
YTS.MX

2
00:00:08,000 --> 00:00:13,000
Official YIFY movies site:
YTS.MX

3
00:00:15,265 --> 00:00:16,767
நாம் ஒரு கட்டுரை எழுத வேண்டுமா?

4
00:00:18,810 --> 00:00:21,438
நாம் யார் என்பதைப் பற்றி
ஐநூறு வார்த்தைகள் எழுத வேண்டுமா?

5
00:00:21,522 --> 00:00:26,068
நான் யார் என்று எனக்கே தெரியாது.
எப்படி ஐநூறு வார்த்தைகள் எழுதப் போகிறேன்?

6
00:00:26,652 --> 00:00:28,278
அது நிறைய நேரம் எடுக்கும்.

7
00:00:30,155 --> 00:00:33,116
ஒரு வாரத்திற்குள் எழுத வேண்டுமா?
கடவுளே.

8
00:00:33,200 --> 00:00:36,787
இதைத்தவிர ஒரு மோசமான தலைப்பு
இருக்க முடியாது, அதாவது: நான்.

9
00:00:37,871 --> 00:00:40,624
நீ ரொம்பவும் கவலைப்படுகிறாய்,
சார்லி பிரவுன்.

10
00:00:42,709 --> 00:00:44,795
அன்பான சார்லி பிரவுன்,

11
00:00:44,878 --> 00:00:48,507
அன்பான சுட்டி பையன் எப்போதும்
பிரச்சினைகளோடு இருக்கக் கூடியவன்.

12
00:00:49,216 --> 00:00:53,220
அவனைப் பற்றி கேள்விப்பட்டிருக்கலாம்.
அவனை கண்டிப்பாக பார்த்திருக்கலாம்.

13
00:00:54,137 --> 00:00:55,639
அவன் எல்லா இடத்திலும் இருக்கிறான்.

14
00:00:56,640 --> 00:01:01,103
செய்தித்தாள், புத்தகங்கள், திரைப்படங்கள்,
மற்றும் தொலைக்காட்சி அனைத்திலும் இருப்பான்

15
00:01:01,186 --> 00:01:04,565
அவன் உலகம் முழுவதும் இருக்கிறான்,
மேலே காற்றிலும் கூட இருப்பான்.

16
00:01:05,147 --> 00:01:08,485
-அவன் நிலவுக்கு கூட சென்றிருக்கிறான்.
-கடவுளே, சார்லி பிரவுன்.

17
00:01:08,569 --> 00:01:11,864
சார்லி பிரவுன்,
அவனது நாய், ஸ்நூப்பி, மற்றும்

18
00:01:11,947 --> 00:01:15,868
அந்த பீனட்ஸ் குழு முழுவதும் எப்போதுமே
இருப்பது போல தோன்றுகிறது.

19
00:01:16,869 --> 00:01:19,121
எனக்கு ரொம்ப நெருக்கமான
கதாபாத்திரம், லைனஸ்.

20
00:01:19,204 --> 00:01:22,499
-எனக்கு பிடித்த கதாபாத்திரம், லைனஸ்.
-நான் வுட்ஸ்டாக்-இன் ரசிகை.

21
00:01:22,583 --> 00:01:24,960
எனக்கு ஃபிராங்க்ளின் மிகவும் பிடித்தது
ஆச்சரியமாக இருந்தது.

22
00:01:25,043 --> 00:01:27,880
எனக்கு பிடித்த பீனட்ஸ் கதாபாத்திரம்
பெப்பெர்மின்ட் பேட்டி.

23
00:01:28,463 --> 00:01:31,383
-ஆமாம், மற்றும் ஸ்நூப்பி.
-கண்டிப்பாக, ஸ்நூப்பி-ஐ ரொம்ப பிடிக்கும்.

24
00:01:31,466 --> 00:01:35,512
70 வருட காலமாக பீனட்ஸ் நமது
வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்கிறது.

25
00:01:35,596 --> 00:01:38,515
வந்து, பீனட்ஸ் ஒரு தனி கிரகமாக இருக்கிறது.

26
00:01:38,599 --> 00:01:40,392
இந்த உலகம் தான் அதன் பார்வையாளர்கள்.

27
00:01:40,475 --> 00:01:43,854
அது எல்லோருக்கும் பிடித்திருப்பதால் தான்,
இவ்வளவு பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது.

28
00:01:43,937 --> 00:01:47,024
பீனட்ஸ் ஒரு உலக அடையாளமாக இருக்கிறது,

29
00:01:47,107 --> 00:01:51,236
ஆனால் அதற்கு மையமாக இருப்பது
இனிமையான சார்லி பிரவுன் தான்.

30
00:01:51,320 --> 00:01:54,031
நான் பீனட்ஸ் மற்றும்
நான் சார்லி பிரவுன்-ஐ நேசிக்கிறேன்.

31
00:01:54,114 --> 00:01:55,991
எனக்கு சார்லி பிரவுன் ரொம்ப பிடிக்கும்.

32
00:01:56,074 --> 00:01:58,535
எனக்கும் சார்லி பிரவுனுக்கும்
நிறைய ஒற்றுமை இருக்கிறது.

33
00:01:59,244 --> 00:02:01,663
ஆனால் உண்மையில்
சார்லி பிரவுன் எப்படிப்பட்டவன்?

34
00:02:01,747 --> 00:02:03,373
அவன் எங்கிருந்து வந்தான்?

35
00:02:03,457 --> 00:02:07,628
நான் யார் என்பதை பற்றி யாருக்கு என்ன கவலை?
நான் ஒன்றும் சிறப்பானவன் கிடையாது.

36
00:02:18,931 --> 00:02:22,142
வர்ணனையாளர் லுபிட்டா நியோங்'ஓ

37
00:02:23,435 --> 00:02:26,772
ரொம்ப காலத்திற்கு முன்,
சார்லி பிரவுன் என்ற ஒரு பையன் இருந்தான்,

38
00:02:26,855 --> 00:02:32,110
சார்லஸ் ஷுல்ஸ் என்ற ஒருவர், கேலி
சித்திரம் வரைபவராக உருவாக கனவு கண்டார்.

39
00:02:32,194 --> 00:02:34,655
நகைச்சுவை சித்திரம் வரைய
வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு.

40
00:02:34,738 --> 00:02:38,492
நான் என்னுடைய ஆறு வயதில் இருந்தே
இதைப் பற்றி கனவு கண்டிருக்கிறேன்.

41
00:02:38,575 --> 00:02:40,786
சார்லஸ் ஷுல்ஸ் பிறந்த கணத்தில் இருந்தே,

42
00:02:40,869 --> 00:02:44,331
இந்த நகைச்சுவை சித்திர உலகத்தில் அவர்
இருக்க வேண்டும் என்பது விதியாக இருந்தது.

43
00:02:44,414 --> 00:02:45,916
அவர் குழந்தையாக இருந்தபோது...

44
00:02:45,999 --> 00:02:47,000
லின் ஜான்ஸ்டன் - கேலி சித்திரம்
வரைபவர், ஃபார் பெட்டர் ஆர் ஃபார் வொர்ஸ்

45
00:02:47,084 --> 00:02:48,377
...அவருடைய உறவினர் அவரை
ஸ்பார்க் பிளக்

46
00:02:48,460 --> 00:02:51,755
என அழைத்தார், இது நகைச்சுவை சித்திர
கதாபாத்திரமாகிய ஒரு குதிரையின் பெயர்.

47
00:02:52,422 --> 00:02:54,883
எனவே, எல்லோரும் அவரை
ஸ்பார்க்கி என்று அழைத்தார்கள்.

48
00:02:54,967 --> 00:02:56,885
அவர் ஒரே குழந்தை என்பதாலும்,

49
00:02:56,969 --> 00:03:01,181
சிறுவனாக இருந்ததாலும்
யாரும் அவரோடு பேசவில்லை.

50
00:03:01,265 --> 00:03:02,891
அவர் மிகவும் கூச்ச சுபாவம் உடையவர்...

51
00:03:02,975 --> 00:03:04,184
கேரன் ஜான்சன் - முன்னாள் இயக்குநர்,
சார்லஸ் எம்.ஷுல்ஸ் அருங்காட்சியகம்

52
00:03:04,268 --> 00:03:06,812
...அதனால் அவரும், அவருடைய அம்மாவும்
செயின்ட் பால் தெருவில் நடக்கும்போது,

53
00:03:06,895 --> 00:03:08,063
தலை குனிந்தே நடப்பார்கள்.

54
00:03:08,146 --> 00:03:10,524
கூச்ச சுபாவம் கொண்ட குட்டி
ஸ்பார்க்கி பள்ளியில் நன்றாக படித்ததார்

55
00:03:10,607 --> 00:03:11,984
ஒரு வகுப்பு அதிகமாகவே படித்தார்.

56
00:03:12,067 --> 00:03:14,778
ஆனால் அது நினைத்தது போல
நன்மையாக இருக்கவில்லை.

57
00:03:14,862 --> 00:03:19,324
அந்த வகுப்பில், அந்த வருட கடைசியில்
அவர் தான் இளையவராக இருந்தார்,

58
00:03:19,408 --> 00:03:21,660
சிறுவனாக இருந்த போது,
அது அவருக்கு கஷ்டமாக இருந்தது.

59
00:03:21,743 --> 00:03:22,744
சிப் கிட்
எழுத்தாளர் / வரைகலை வடிவமைப்பாளர்

60
00:03:22,828 --> 00:03:26,957
வயது மூத்த மாணவர்களோடு பழகுவது, அவருக்கு
கடினமாகவும், வருத்தமாகவும் இருந்தது.

61
00:03:27,040 --> 00:03:30,544
அந்த பள்ளியின் மற்ற குழந்தைகளுக்கு
இவர் மீது நட்பு இல்லை என நினைத்தார்.

62
00:03:30,627 --> 00:03:31,628
ஜீன் ஷுல்ஸ்
சார்லஸ் ஷுல்ஸின் விதவை

63
00:03:31,712 --> 00:03:35,799
பள்ளி முடிந்ததும், தன் அப்பாவின்
சிகை அலங்கார நிலையத்தில் நேரம் கழித்தார்.

64
00:03:36,550 --> 00:03:40,220
"நான் தனிமையாக உணரும் போது, என் அப்பாவின்
சிகை அலங்கார நிலையத்திற்குச் செல்வேன்.

65
00:03:40,721 --> 00:03:43,390
எப்போதும் நான் சிகை அலங்காரம் செய்ய
வந்திருக்கிறேனா என கேட்பார்கள்."

66
00:03:44,391 --> 00:03:46,185
அதற்கும் ஒரு எதிர் பலன் இருந்தது.

67
00:03:46,268 --> 00:03:49,605
நான் கடைக்குள் சென்று,
அவர் எனக்கு முடி திருத்தும் போது,

68
00:03:49,688 --> 00:03:54,026
மிகவும் சங்கடமான விஷயம் என்னவென்றால்
எனக்கு பாதி முடி திருத்தும் போது,

69
00:03:54,109 --> 00:03:56,320
ஒரு உண்மையான நல்ல வாடிக்கையாளர்
உள்ளே வருவார்,

70
00:03:56,403 --> 00:03:59,072
அப்போது அவர் என்னிடம்,
"நீ அங்கே அமர்ந்து, கொஞ்ச நேரம் காத்திரு

71
00:03:59,156 --> 00:04:02,034
ஏனென்றால் நான் இவருக்கு
முடி திருத்தம் செய்ய வேண்டும்" என்பார்.

72
00:04:02,117 --> 00:04:05,996
பாதி முடி திருத்தம் செய்து, இருக்கையில்
உட்கார்ந்திருப்பது சங்கடமாக இருக்கும்.

73
00:04:06,079 --> 00:04:08,332
அவர் நடுநிலைப் பள்ளி படிக்கும் சமயத்தில்,

74
00:04:08,415 --> 00:04:11,001
ஸ்பார்க்கியின் படிக்கும் திறமை
சிறிது குறைந்தது,

75
00:04:11,084 --> 00:04:13,212
அதனால் அவர் மிகவும் மனம் தளர்ந்துவிட்டார்.

76
00:04:13,295 --> 00:04:16,339
எட்டாவது வகுப்பில் தான்
பெரிய பிரச்சினை ஏற்பட்டது என நினைக்கிறேன்.

77
00:04:16,423 --> 00:04:18,800
நான் எல்லாவற்றிலும்
தோல்வி அடைய ஆரம்பித்தேன்.

78
00:04:19,301 --> 00:04:21,720
ஸ்பார்க்கிக்கு மகிழ்ச்சி தரும் ஒரே இடம்

79
00:04:21,803 --> 00:04:23,347
அவருடைய படங்கள் வரையும் புத்தகம்தான்.

80
00:04:23,430 --> 00:04:27,392
அவர் எப்போதும் வரைந்து கொண்டிருந்தார்,
என்றாவது ஒருநாள் செய்தித்தாள்களில் படித்த

81
00:04:27,476 --> 00:04:29,603
நகைச்சுவை சித்திரம் போல தானும்
வரைவோம் என கனவு கண்டார்.

82
00:04:29,686 --> 00:04:33,148
செயின்ட் பாலில் நாங்கள் இரண்டு
செய்தித்தாள்களை வாங்குவோம்,

83
00:04:33,232 --> 00:04:35,817
சனிக்கிழமை இரவில், என் அப்பா அந்த உள்ளூர்
மருந்து கடைக்கு சென்று இரண்டு மினியாபோலிஸ்

84
00:04:35,901 --> 00:04:40,072
செய்தித்தாள்கள் வாங்குவார், எனவே நான்கு
நகைச்சுவை சித்திரங்கள் படிக்க முடிந்தது.

85
00:04:40,864 --> 00:04:43,075
அதுதான் எனக்கு வாழ்க்கையாக இருந்தது.

86
00:04:53,460 --> 00:04:57,714
நான் யார் என்பதை பற்றி ஐநூறு வார்த்தைகள்.
நான் யார், ஸ்நூப்பி?

87
00:04:57,798 --> 00:04:59,299
நான் சிகை அலங்காரம் செய்பவரின் மகன்.

88
00:04:59,800 --> 00:05:04,972
பேஸ்பால் பிடிக்கும். பள்ளிக்குப் போகிறேன்.
ஒவ்வொரு நாளையும் கடத்த முயற்சிக்கிறேன்.

89
00:05:05,597 --> 00:05:07,808
இந்த வீட்டுப்பாடம் எழுத முடியாதது.

90
00:05:11,019 --> 00:05:15,065
உனக்கு புரியாது, ஸ்நூப்பி. நீ எப்போதுமே
கடினமான விஷயங்கள் செய்ய நேரிட்டது இல்லை.

91
00:05:15,566 --> 00:05:18,402
உட்கார், அப்படியே இரு, உருண்டு போ.

92
00:05:19,319 --> 00:05:20,988
ஒரு நாயின் வாழ்க்கை மிகவும் சுலபமானது.

93
00:06:25,886 --> 00:06:27,888
பொத் பொத்
பொத் பொத்

94
00:06:28,805 --> 00:06:30,057
பொத் பொத்
பொத் பொத்

95
00:06:30,140 --> 00:06:32,017
பொத் பொத்
பொத் பொத்

96
00:06:32,100 --> 00:06:34,978
"ஸ்பார்க்கி போருக்கு செல்கிறார்!"

97
00:06:35,979 --> 00:06:39,983
1942-இல்,
ஸ்பார்க்கி போர்ப்படையில் சேர்க்கப்பட்டார்.

98
00:06:40,734 --> 00:06:43,070
"படையில் சேர்க்கப்பட்டால் என்னவாகும்?"

99
00:06:43,153 --> 00:06:45,197
"உன்னை அவர்கள் எங்காவது அனுப்புவார்கள்."

100
00:06:45,280 --> 00:06:47,282
"என் பயமே அது தான்."

101
00:06:51,995 --> 00:06:55,123
வீட்டை விட்டு போவது
ஸ்பார்க்கிக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.

102
00:06:55,207 --> 00:06:59,586
பல காலமாக நோய்வாய்ப்பட்டு இருந்த
தன் அம்மாவோடு ரொம்ப நெருக்கமாக இருந்தார்.

103
00:07:00,087 --> 00:07:03,590
தனது அம்மா மோசமான உடல்நிலையில் இருந்தார்
என்பது ஸ்பார்க்கிக்கு சொல்லப்படவில்லை.

104
00:07:04,424 --> 00:07:08,804
அவர் ரொம்ப காலம் வாழ மாட்டார் என்பதும்.

105
00:07:09,388 --> 00:07:15,102
இதனால் அவருக்கு மிகவும் தனிமையாகவும்,
வருத்தமாகவும் இருந்தது.

106
00:07:15,686 --> 00:07:18,814
ஃபோர்ட் ஸ்நெல்லிங்கிற்கு
நான் திரும்பப் போக வேண்டிய அந்த இரவு,

107
00:07:18,897 --> 00:07:21,650
மின்னெசோட்டாவில், அவர்,
"நாம் விடை பெற்றுக்கொள்ள வேண்டும்

108
00:07:21,733 --> 00:07:25,362
ஏனென்றால் நாம் இனிமேல் ஒருவரை ஒருவர்
சந்திக்காமல் போகலாம்" என்று சொன்னார்.

109
00:07:25,445 --> 00:07:27,072
பிறகு நான் சென்றுவிட்டேன்.

110
00:07:27,155 --> 00:07:29,700
தனது அம்மாவின் இழப்பைப் பற்றி,
பேசும் போது அவர்,

111
00:07:29,783 --> 00:07:31,785
மிகவும் வருத்தமும்,
மன உளைச்சலும் அடைவார்.

112
00:07:31,869 --> 00:07:34,204
சில நேரங்களில், அழுது கூட விடுவார்.

113
00:07:34,788 --> 00:07:41,211
அது, அவர் வாழ்நாள் முழுவதும் நினைத்த ஒன்றை
அவருக்கு விட்டுச் சென்றது.

114
00:07:42,045 --> 00:07:44,131
"இது எல்லாமே விசித்திரமாக இருந்தது.

115
00:07:44,631 --> 00:07:48,260
எதைப் பற்றியும் குறிப்பாக நினைக்காமல்,
நம்மால் நடந்து செல்ல முடியும்.

116
00:07:48,760 --> 00:07:51,263
திடீரென்று, நாம் இழந்த
அன்பானவர் ஞாபகத்திற்கு வருவர்..."

117
00:07:52,139 --> 00:07:53,140
கவனம்-செலுத்தவும்!

118
00:07:53,223 --> 00:07:56,268
அந்த நாட்களை எப்படி
கடந்தேன் என்றே எனக்குப் புரியவில்லை.

119
00:07:56,351 --> 00:07:57,603
அது பல காலத்திற்கு முன்நடந்தது,

120
00:07:57,686 --> 00:08:00,647
என்றாலும் அவை நம்மால் மறக்க முடியாத
சில விஷயங்கள்.

121
00:08:10,199 --> 00:08:14,203
இளம் ஸ்பார்க்கி ஒரு இரவு கூட
வீட்டை விட்டு வெளியே தங்கியது கிடையாது.

122
00:08:14,286 --> 00:08:15,537
ஆனால் போரின் போது,

123
00:08:15,621 --> 00:08:18,707
அவர் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனிக்கு
நெடுந்தூரம் பயணித்தார்.

124
00:08:19,291 --> 00:08:23,754
பணிக்காலம் முழுவதும், தன் வீட்டைப் பற்றி
நினைத்துக் கொண்டு, தனிமையாக இருந்தார்,

125
00:08:23,837 --> 00:08:27,508
அதனால் தன் சிறு வயதில் செய்தது போல,
சித்திரங்கள் வரைந்து கொண்டே இருந்தார்.

126
00:08:27,591 --> 00:08:29,635
செல்லும் இடமெல்லாம் தன் சித்திரம் வரையும்
புத்தகத்தை எடுத்துச் சென்றார்.

127
00:08:29,718 --> 00:08:30,719
"நாங்கள் இருந்தது போல"
உருவாக்கியவர் ஸ்பார்க்கி

128
00:08:30,802 --> 00:08:33,804
போர் முடிந்த பிறகு, தான் கேலி சித்திரம்
வரைபவராக ஆக வேண்டும் என்ற

129
00:08:33,889 --> 00:08:35,765
திடமான முடிவுடன் வீட்டிற்கு வந்தார்.

130
00:08:40,604 --> 00:08:43,815
அண்ணா, என் கணக்கு வீட்டு பாடத்தை
எழுத எனக்கு உதவி தேவை.

131
00:08:44,316 --> 00:08:46,652
என் கட்டுரையை எழுதிக்கொண்டிருப்பது
உனக்குத் தெரியவில்லையா?

132
00:08:46,735 --> 00:08:48,195
அது எதைப் பற்றியது?

133
00:08:48,278 --> 00:08:49,988
நான் யார் என்பதைப் பற்றியது.

134
00:08:50,489 --> 00:08:52,950
நீங்கள் யார்?
நீங்கள் யார் என்று நான் சொல்கிறேன்.

135
00:08:53,033 --> 00:08:54,743
நீங்கள் என்னுடைய அண்ணன்.

136
00:08:54,826 --> 00:08:56,620
என் கணக்கு வீட்டுப்பாடத்தை எழுத

137
00:08:56,703 --> 00:08:59,206
உதவி செய்யவில்லை என்றால்
நீங்கள் ஒரு மோசமான அண்ணன்.

138
00:08:59,915 --> 00:09:01,917
இதோ, இதைப் பாருங்கள்.

139
00:09:02,876 --> 00:09:04,086
கடவுளே.

140
00:09:04,753 --> 00:09:09,508
சரி, உன்னிடம் இரண்டு ஆப்பிள்கள் இருந்து,
நான் மேலும் மூன்று ஆப்பிள்கள் கொடுத்தால்,

141
00:09:09,591 --> 00:09:11,426
உன்னிடம் எத்தனை ஆப்பிள்கள் இருக்கும்?

142
00:09:12,594 --> 00:09:13,595
யாருக்குத் தெரியும்?

143
00:09:13,679 --> 00:09:16,473
நான் ஒரே சமயத்தில் ஒரு ஆப்பிளைத் தவிர
அதிகம் சாப்பிட்டதே இல்லை.

144
00:09:16,557 --> 00:09:19,184
இந்த ஆப்பிள்களை
யார் கொடுக்கிறார்கள்?

145
00:09:20,394 --> 00:09:22,855
என்னுடைய கட்டுரையை நான்
பிறகு தான் எழுத வேண்டும் போல் இருக்கிறது.

146
00:09:27,734 --> 00:09:31,488
எல்லாவற்றையும் விட, ஸ்பார்க்கி
கேலி சித்திரம் வரைபவராக ஆக ஆசைப்பட்டார்.

147
00:09:32,364 --> 00:09:35,075
சார்லி பிரவுன் போலவே,
அவரும் தொடர்ந்து முயற்சித்தார்.

148
00:09:35,576 --> 00:09:39,037
சார்லி பிரவுன் போலவே,
அவரும் தோற்றுக் கொண்டே இருந்தார்.

149
00:09:40,038 --> 00:09:43,500
'த சாட்டர்டே ஈவினிங் போஸ்ட்'-க்கு
நான் பத்து கார்ட்டூன்கள் அனுப்புவேன்.

150
00:09:43,584 --> 00:09:46,295
அவை வெளியாகும் போது, என் நகைச்சுவை
சித்திரங்களை வரைந்து கொண்டிருப்பேன்.

151
00:09:46,378 --> 00:09:49,798
அந்த வரைபடங்களை தபாலில் அனுப்பி விட்டு,
வேறு ஒரு வேலை செய்து கொண்டிருப்பேன்.

152
00:09:49,882 --> 00:09:53,093
ஸ்பார்க்கி தன்னுடைய
சில கார்ட்டூன்களை வெளியிட முடிந்தது,

153
00:09:53,177 --> 00:09:56,263
ஆனால் அவற்றில் சார்லி பிரவுன்
அல்லது ஸ்நூப்பி இன்னும் இடம்பெறவில்லை.

154
00:09:56,346 --> 00:09:59,099
நாம் எப்போதுமே
நமது முதல் விற்பனை அனைத்தும்

155
00:09:59,183 --> 00:10:02,102
நமக்கு வெற்றியாக அமையும் என நினைப்போம்,
ஆனால் அது அப்படி நடப்பதில்லை.

156
00:10:02,186 --> 00:10:05,606
நான் இரண்டு அல்லது மூன்று விற்றேன், பிறகு,
பல மாதங்களுக்கு எதுவும் விற்க முடியவில்லை.

157
00:10:05,689 --> 00:10:09,318
ஸ்பார்க்கி, ஐந்து வருடங்களாக
முயற்சித்து தோற்றுப் போனார்.

158
00:10:09,401 --> 00:10:12,112
பிறகு அவர் ஒன்றை உணர்ந்தார்.

159
00:10:12,196 --> 00:10:15,073
சார்லி பிரவுன் என்ற
ஒரு கதாபாத்திரம் இடம் பெற்ற

160
00:10:15,574 --> 00:10:17,784
லில் ஃபோக்ஸ் என்ற ஒரு நகைச்சுவை தொடரை
வரைந்தார்...

161
00:10:17,868 --> 00:10:18,869
கெவின் ஸ்மித்
திரைப்பட தயாரிப்பாளர்

162
00:10:18,952 --> 00:10:22,456
...மற்றும் அதில் ஸ்நூப்பி போன்ற
ஒரு நாயும் பங்கு பெற்றது.

163
00:10:23,415 --> 00:10:27,127
நான் கொஞ்சம் கொஞ்சமாக,
புரிந்து கொண்டது என்னவென்றால், நான் வரைந்த

164
00:10:27,211 --> 00:10:31,632
சிறு குழந்தைகளின் கார்ட்டூன்களை தான்
பதிப்பாசிரியர்கள் ரொம்ப விரும்பினார்கள்.

165
00:10:31,715 --> 00:10:34,176
அவருடைய கருத்துக்கள் மெதுவாக பிரபலமாகின.

166
00:10:34,259 --> 00:10:36,637
1950-இல் ஒரு நாள்,

167
00:10:36,720 --> 00:10:39,389
ஸ்பார்க்கி தனது முதல்
பீனட்ஸ் நகைச்சுவை தொடரை வெளியிட்டார்.

168
00:10:39,473 --> 00:10:40,474
இன்று தொடங்குகிறது
பீனட்ஸ்

169
00:10:40,557 --> 00:10:44,228
முதன்முதலில் தோன்றிய தொடரில்
மூன்று கதாபாத்திரங்கள் தான் இருந்தன.

170
00:10:44,311 --> 00:10:49,149
ஒன்று பேட்டி என்ற பெயர் கொண்ட சிறுமி,
மற்றொன்று ஷெர்மி என்ற பெயர் கொண்ட சிறுவன்.

171
00:10:49,233 --> 00:10:52,945
சார்லி பிரவுன் அந்த தொடரில் இருந்தான்,
அவன் அவர்களுக்கு முன்னே நடந்து சென்றான்.

172
00:10:53,028 --> 00:10:56,823
இதோ. சார்லி பிரவுன் வந்துவிட்டான்.
"இனிமையான சார்லி பிரவுன்."

173
00:10:56,907 --> 00:10:59,743
அவன் போனதும், " ஐயோ,
நான் அவனை வெறுக்கிறேன்" என நினைப்பான்.

174
00:11:00,619 --> 00:11:02,913
வந்து...

175
00:11:02,996 --> 00:11:04,665
அது மோசம், இல்லையா?

176
00:11:04,748 --> 00:11:05,958
ராப் ஆர்ம்ஸ்ட்ராங் - கேலி சித்திரம்
வரைபவர், ஜம்ப்ஸ்டார்ட்

177
00:11:06,041 --> 00:11:07,876
ஆனால் அது தான் குழந்தைப் பருவம்.

178
00:11:07,960 --> 00:11:10,629
குழந்தைகள் அப்படித்தான். குழந்தைகள்,
ஒருவரை ஒருவர், நடத்திக் கொள்வது...

179
00:11:10,712 --> 00:11:11,922
ட்ரூ பேரிமோர்
நடிகர்/தயாரிப்பாளர்

180
00:11:12,005 --> 00:11:15,717
...என்பது தான் நமது பாதுகாப்பு விஷயங்களை
புரிந்து கொள்வதற்கு நமக்கு உதவி செய்யும்.

181
00:11:15,801 --> 00:11:18,136
பிறகு நம்முடைய எஞ்சிய வாழ்க்கையில்
அந்த பாதுகாப்பு கவசத்தை

182
00:11:18,220 --> 00:11:20,180
எடுக்க வேண்டும் என்பதை ஞாபகம்
வைத்துக் கொள்வதிலேயே நேரம் கழிந்துவிடும்.

183
00:11:20,264 --> 00:11:23,308
விரைவிலேயே, அமெரிக்கா முழுவதும்

184
00:11:23,392 --> 00:11:26,103
மக்கள் சார்லி பிரவுனை
நேசிக்க ஆரம்பித்தார்கள்.

185
00:11:26,186 --> 00:11:28,522
என்னைப் போன்றே இருக்கும்
ஒரு கதாபாத்திரம்...

186
00:11:28,605 --> 00:11:29,606
பால் ஃபீக்
திரைப்பட தயாரிப்பாளர்

187
00:11:29,690 --> 00:11:33,402
...என்னைப் போலவே, விசித்திரமாகவும்,
எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படாமலும்,

188
00:11:33,485 --> 00:11:36,864
நான் நம்பியது போல இருந்தான்.
அது எனக்கு ஒரு பெரிய விஷயமாக இருந்தது.

189
00:11:36,947 --> 00:11:38,365
ஜெனிஃபர் ஃபின்னி பாய்லன்
எழுத்தாளர்

190
00:11:38,448 --> 00:11:40,576
சார்லி பிரவுன் பிறரால்
கேலி செய்யப்படுவதை நாம் பார்த்தோம்.

191
00:11:40,659 --> 00:11:45,622
சார்லி பிரவுன் மிகுந்த மனிதத்தன்மையோடு
இருந்ததால் அவனுக்காக நாம் ஆதரவளித்தோம்.

192
00:11:45,706 --> 00:11:46,707
கஷ்டங்கள் வந்தாலும் கடந்துவிடுவான்.

193
00:11:46,790 --> 00:11:47,624
மியா செக்
நடிகர்

194
00:11:47,708 --> 00:11:50,669
அவன் மறுபடியும் முயற்சி செய்கிறான். என்னை
பொறுத்தவரை, அது மிகவும் ஆச்சரியமான விஷயம்.

195
00:11:50,752 --> 00:11:51,587
கீத் எல். வில்லியம்ஸ்
நடிகர்

196
00:11:51,670 --> 00:11:54,882
தானாகவே இருப்பதை முயற்சி செய்ததால்,

197
00:11:54,965 --> 00:11:57,384
ஸ்பார்க்கியின் கனவு நனவாகி கொண்டிருந்தது.

198
00:11:57,467 --> 00:11:59,344
சார்லி பிரவுன் பற்றிய
இந்த முழு விஷயமும் அப்படி ஆகியது.

199
00:11:59,428 --> 00:12:02,264
இவை என்னுடைய மோசமான நாட்களின்
நினைவுகள் தான்.

200
00:12:02,347 --> 00:12:08,562
நமக்குள்ளே உள்ள ஒரு சிறிய பகுதி தான்,
சார்லி பிரவுன் என்று நான் நினைக்கிறேன்.

201
00:12:08,645 --> 00:12:11,523
முக்கியமாக எனக்கு.
நான் தான் சார்லி பிரவுன்.

202
00:12:17,029 --> 00:12:18,071
லைனஸ்,

203
00:12:18,155 --> 00:12:21,700
என்னைப் பற்றி நானே எப்படி
500 வார்த்தைகள் எழுத முடியும்?

204
00:12:22,201 --> 00:12:25,162
என்னைப் பற்றி எழுதுவதற்கு
எந்த வித நல்ல விஷயமும் இல்லையே.

205
00:12:25,245 --> 00:12:28,165
இந்த கட்டுரை எழுதுவது
உனக்கு ஒரு நல்ல வாய்ப்பு,

206
00:12:28,248 --> 00:12:29,458
சார்லி பிரவுன்.

207
00:12:29,541 --> 00:12:31,168
எதற்கான வாய்ப்பு?

208
00:12:31,710 --> 00:12:36,089
வாழ்க்கையின் மிக முக்கியமான கேள்விகளை
உன்னிடமே கேட்டு கொள்வதற்கான ஒரு வாய்ப்பு.

209
00:12:36,173 --> 00:12:40,552
நான் யார்? எதற்காக இங்கே இருக்கிறேன்?
இந்த உலகத்தில் என்னுடைய நோக்கம் என்ன?

210
00:12:40,636 --> 00:12:44,431
கடவுளே. இவை எல்லாவற்றையும்
நான் எப்படி தெரிந்துகொள்வது?

211
00:12:44,515 --> 00:12:48,143
சரி, சார்லி பிரவுன்,
கடினமான கேள்விகளை நான் சந்திக்கும் போது,

212
00:12:48,227 --> 00:12:50,729
வரலாற்றின் முக்கியமான
மனிதர்களைப் பற்றி படிப்பேன்.

213
00:12:50,812 --> 00:12:54,608
ஸ்பெயினை சேர்ந்த நாவல் எழுத்தாளர்,
மிகுவல் டி செர்வான்டிஸ், ஒரு முறை,

214
00:12:54,691 --> 00:12:58,362
"உன்னை சுற்றி இருப்பவர்களைப் பற்றி சொல்,
நீ யார் என்று சொல்கிறேன்" என எழுதினார்.

215
00:12:59,279 --> 00:13:02,908
என்னை சுற்றி இருப்பவர்களா?
அப்படி என்றால் என்ன?

216
00:13:02,991 --> 00:13:05,661
உன்னுடைய நண்பர்கள் என்று அர்த்தம்,
சார்லி பிரவுன்.

217
00:13:05,744 --> 00:13:09,122
உன்னுடைய நேரத்தை நீ கழிக்கக் கூடிய மக்கள்.
அவர்கள் உனக்கு உதவக்கூடும்.

218
00:13:09,623 --> 00:13:13,418
எனக்கு தெரியவில்லை, லைனஸ்.
அது சாத்தியமற்றது போல தோன்றுகிறது.

219
00:13:13,502 --> 00:13:15,045
வருத்தப்படாதே, சார்லி பிரவுன்.

220
00:13:15,128 --> 00:13:19,758
வாழ்க்கையின் அடிப்படையான கேள்விகளுக்கு
பதில் தேட உனக்கு ஒரு வாரம் அவகாசமிருக்கு.

221
00:13:23,428 --> 00:13:26,640
தான் சார்லி பிரவுன் போல
இருப்பதாக ஸ்பார்க்கி எப்போதும் சொல்வார்,

222
00:13:26,723 --> 00:13:30,978
பெரும்பாலான பீனட்ஸ் கதாபாத்திரங்களில்
ஸ்பார்க்கியின் ஒரு சிறு அம்சம் இருக்கிறது.

223
00:13:32,896 --> 00:13:34,314
பீனட்ஸின் படைப்பாளர் எப்படி இருப்பார்...

224
00:13:34,398 --> 00:13:35,607
பெய்ஜ் ப்ராட்டாக் - கேலி சித்திரம் வரைபவர்
படைப்பு குழுவின் இயக்குனர்

225
00:13:35,691 --> 00:13:37,693
...என்று நாம் யோசிப்போமோ அதே போல் தான்
அவரும் இருந்தார்.

226
00:13:37,776 --> 00:13:40,153
எல்லா கதாபாத்திரங்களும் அடங்கிய
ஒரு நபர் அவர்.

227
00:13:40,237 --> 00:13:43,156
திரு. ஷுல்ஸின் தத்துவ ஞானம் கொண்ட
படைப்பு, லைனஸ் தான்.

228
00:13:43,240 --> 00:13:46,535
அவன் எப்போதும் ஏதாவதொரு தத்துவம் சொல்வான்.

229
00:13:46,618 --> 00:13:49,997
அவன் அமைதியான தத்துவ ஞானி.
ஸ்பார்க்கியும் அப்படித்தான் இருந்தார்.

230
00:13:50,080 --> 00:13:53,458
லைனஸ் எப்பொழுதுமே பெரிய கேள்விகளான,
நமது வாழ்க்கையின் அர்த்தம் என்ன,

231
00:13:53,542 --> 00:13:58,130
இந்த பிரபஞ்சத்தில் நமது இடம் என்ன, எல்லாம்
எப்படி இணைந்திருக்கின்றன என கேட்பான்.

232
00:13:58,213 --> 00:14:01,133
"வாழ்க்கை கடினமானது, இல்லையா,
சார்லி பிரவுன்?"

233
00:14:01,216 --> 00:14:06,221
நான் லைனஸோடு ஒத்துப் போவேன்... நானும்
பாதுகாப்பிற்காக போர்வை வைத்திருந்தேன்.

234
00:14:06,305 --> 00:14:09,266
அவனைப் போலவே, நானும், ஒரு நீல நிற
போர்வையை எடுத்துச் செல்வேன் என்பதால்

235
00:14:09,349 --> 00:14:11,435
நான் அவனோடு ஒத்துப் போவேன்.

236
00:14:12,102 --> 00:14:14,438
நானும் கூட,
ஒரு போர்வை வைத்திருப்பேன்.

237
00:14:15,189 --> 00:14:18,150
என் அம்மா சென்ற துணி துவைக்கும் இடத்திற்கு
நானும் சென்று அந்த இயந்திரத்தின் முன்னால்

238
00:14:18,233 --> 00:14:20,652
நின்று கொண்டு,
துணி துவைக்கும் போதும் அழுவேன்,

239
00:14:20,736 --> 00:14:25,532
துணி காய வைக்கப்படும் போதும் அழுவேன்.

240
00:14:25,616 --> 00:14:27,826
அதனால் எல்லோரும் என்னை
லைனஸ் என்று அழைத்தார்கள்.

241
00:14:27,910 --> 00:14:28,911
டமால்!

242
00:14:28,994 --> 00:14:31,371
லைனஸ் ரொம்ப புத்திசாலி.
முட்டாளாகவும் இருப்பான்.

243
00:14:31,455 --> 00:14:33,498
வெகுளியாக இருப்பான்.
எல்லாம் தெரிந்தவனாக இருப்பான்.

244
00:14:34,166 --> 00:14:38,504
அவனுடைய குணாதிசயம் எல்லா விதமான
யோசனைகளுக்கும் ஈடுகொடுக்கும்.

245
00:14:38,587 --> 00:14:42,674
ஸ்பார்க்கியின் குணத்தை லைனஸ்,
மற்றும் சார்லி பிரவுன், வெளிப்படுத்தினர்.

246
00:14:43,342 --> 00:14:46,595
ஆனால், மறு பக்கம் பார்த்தால்,
லைனஸின் அக்கா, லூசியோ...

247
00:14:46,678 --> 00:14:48,347
மிகவும் மோசமானவள்.

248
00:14:48,430 --> 00:14:51,475
"நீ சுவாரஸ்யமில்லாதவன், சார்லி பிரவுன்."

249
00:14:51,558 --> 00:14:54,228
உரக்க பேசிக்கொண்டு பயமுறுத்துவாள்.

250
00:14:54,311 --> 00:14:57,397
வேடிக்கையாக பேசுவாள்,
ஆனால் ரொம்ப மோசமானவள்.

251
00:14:57,481 --> 00:15:00,359
லூசி மோசமானவள் என்பதால்
நம்மில் பலருக்கு அவளைப் பிடிக்காது.

252
00:15:00,442 --> 00:15:01,610
அதே சமயத்தில்,

253
00:15:01,693 --> 00:15:05,280
அவள் மிகவும் மோசமாக இருப்பதால்,
அது வேடிக்கையாக இருக்கும்.

254
00:15:05,364 --> 00:15:07,950
கால்பந்து வைத்திருக்கும் லூசி பற்றி
எல்லோருக்கும் தெரியும்.

255
00:15:08,033 --> 00:15:10,494
சார்லி பிரவுன், ஓடி வரும் போது,
லூசி கால்பந்தை நகர்த்தி விடுவாள்...

256
00:15:10,577 --> 00:15:11,411
நோவா ஷ்நாப்
நடிகர்

257
00:15:11,495 --> 00:15:12,955
...அதனால் அவன் அலறி
கீழே விழுந்துவிடுவான்.

258
00:15:13,038 --> 00:15:13,872
அவள் மறுபடியும் அப்படி செய்தாள்!

259
00:15:13,956 --> 00:15:14,957
மறக்க முடியாது.

260
00:15:15,040 --> 00:15:16,083
-ஆ!
-ஹா!

261
00:15:17,251 --> 00:15:18,210
தடால்!

262
00:15:18,293 --> 00:15:21,338
நான் ரொம்பவும் பரிதாபப்படும்
கதாபாத்திரம் எது தெரியுமா?

263
00:15:21,421 --> 00:15:24,466
அவை எல்லாமே என்னில் ஒரு அங்கம் என்பதால்
எனக்கு எல்லாவற்றையுமே பிடிக்கும்.

264
00:15:24,550 --> 00:15:27,678
பிறரை பரிகாசம் செய்யும் என்னுடைய
ஒரு பகுதியை லூசி பிரதிபலிக்கிறாள்.

265
00:15:27,761 --> 00:15:30,055
எல்லாவற்றையும் குழப்பக் கூடிய பகுதியை
சார்லி பிரதிபலிக்கிறான்.

266
00:15:30,138 --> 00:15:30,973
என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை

267
00:15:31,056 --> 00:15:33,350
கனவு காணும் என்னுடைய பகுதியை
ஸ்நூப்பி பிரதிபலிக்கிறது.

268
00:15:36,687 --> 00:15:38,021
ஸ்நூப்பி.

269
00:15:38,522 --> 00:15:42,234
சார்லி பிரவுனும் மற்றவர்களும்
ஸ்பார்க்கி போல சிறிது இருந்தாலும்,

270
00:15:42,317 --> 00:15:44,987
ஸ்நூப்பிக்கு வானமே எல்லையாக இருந்தது.

271
00:15:45,070 --> 00:15:48,532
ஸ்நூப்பி நாயாக இருக்க மறுத்த ஒரு நாய்,

272
00:15:48,615 --> 00:15:50,993
மற்றும் நிறைய குறிக்கோள் வைத்திருந்தது,
சரிதானே?

273
00:15:51,076 --> 00:15:56,081
கடவுளே. எனக்கு ஸ்நூப்பியை பிடிக்கும்.
அவன் அழகானவன், வேடிக்கையானவன்.

274
00:15:56,164 --> 00:15:58,375
நாம் எப்படி இருக்க விரும்பினோமோ
அதை ஸ்நூப்பி பிரதிபலித்ததால்

275
00:15:58,458 --> 00:16:00,252
எல்லோருக்கும் அவனை பிடித்தது.

276
00:16:00,335 --> 00:16:03,255
அதாவது, "சரி, இன்று நான் உலகப் போர் விமான
படை வீரராக கற்பனை செய்து கொள்ளப்போகிறேன்.

277
00:16:03,338 --> 00:16:06,967
நாளை நான் ஒரு திரைப்பட நட்சத்திரமாக கற்பனை
செய்துகொள்ளப் போகிறேன்" இது போல ஏதோ ஒன்று.

278
00:16:07,050 --> 00:16:09,678
ஸ்நூப்பி தான் இஷ்டப்பட்ட வாழ்க்கையை
தன் கற்பனைகளின் துணையோடு வாழ்கிறான்.

279
00:16:09,761 --> 00:16:14,057
ஸ்நூப்பி கூட ஸ்பார்க்கியின்
வாழ்வின் ஒரு பகுதியிலிருந்து வந்தவன் தான்.

280
00:16:14,141 --> 00:16:16,643
எனக்கு 13 வயதாக இருந்த போது
என்னிடம் இருந்த ஒரு நாய் போல தான்

281
00:16:16,727 --> 00:16:18,604
ஸ்நூப்பி உருவாக்கப்பட்டது.

282
00:16:18,687 --> 00:16:22,482
ஸ்நூப்பி ஹாக்கியும், பனி-சருக்கும் விளையாட
காரணம், ஷுல்ஸும் அதை செய்ததால் தான்.

283
00:16:22,566 --> 00:16:23,400
அபராத
பெட்டி

284
00:16:23,483 --> 00:16:24,943
ஆக, எல்லா சிறந்த படைப்பாளர்கள் போலவும்,

285
00:16:25,027 --> 00:16:26,862
அவருடைய படைப்பில் அவருடைய
குணாதிசயங்கள் நிறைய இருக்கின்றன,

286
00:16:26,945 --> 00:16:30,282
அந்த கதாபாத்திரங்கள்
பேசக் கூடிய விஷயங்கள்

287
00:16:30,365 --> 00:16:32,284
விரும்பக்கூடிய விஷயங்கள்
ஆகியவற்றில் அதைப் பார்க்கலாம்.

288
00:16:41,752 --> 00:16:44,171
இந்த கட்டுரைக்கு
எனக்கு சிறந்த மதிப்பெண் வேண்டும்.

289
00:16:45,005 --> 00:16:47,174
நான் ஒரு தொழில் சார்ந்த நிபுனரிடம்
பேச வேண்டும்.

290
00:16:48,717 --> 00:16:50,719
மன உளைச்சலுக்கான உதவி 5 சென்ட்
மருத்துவர் உள்ளே இருக்கிறார்

291
00:16:50,802 --> 00:16:54,473
ஹாய், சார்லி பிரவுன்.
இன்று உனக்கு என்ன பிரச்சினை?

292
00:16:54,556 --> 00:16:57,392
என்னுடைய கட்டுரையை எழுதுவது
எனக்கு கஷ்டமாக இருக்கிறது, லூசி.

293
00:16:57,476 --> 00:16:58,644
நீ உதவி செய்ய முடியுமா?

294
00:16:58,727 --> 00:17:02,564
நிச்சயம். உன்னைப் பற்றியும், உன் குறைகளை
பற்றியும் நான் நிறைய யோசித்திருக்கிறேன்.

295
00:17:02,648 --> 00:17:06,777
என்னுடைய குறைகளா? அவை என்னுடைய
விஷயத்திற்கு உதவி செய்யுமா என்று...

296
00:17:06,859 --> 00:17:07,861
கேள், சார்லி பிரவுன்.

297
00:17:07,944 --> 00:17:09,780
நீ யார் என்பதைப் பற்றியும்

298
00:17:09,863 --> 00:17:12,657
உன் பல குறைகளைப் பற்றியும் விவரம்
அறிந்தவரிடம் கேட்பதை தவிர வேறு வழி இல்லை.

299
00:17:13,157 --> 00:17:14,576
என்னுடைய பல குறைகளா?

300
00:17:14,660 --> 00:17:15,827
ஆமாம்.

301
00:17:15,911 --> 00:17:20,207
நான் உண்டாக்கி இருக்கும் சில விஷயங்கள்
உனக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்.

302
00:17:23,292 --> 00:17:25,337
சௌகரியமாக அமர்ந்து கொள், சார்லி பிரவுன்.

303
00:17:25,838 --> 00:17:29,591
உன் குறைகள், பிரச்சினைகளை புரிய வைக்க
சில காட்சிப் படங்களை உருவாக்கியுள்ளேன்.

304
00:17:31,343 --> 00:17:32,427
தயவு செய்து, விளக்குகளை அணையுங்கள்.

305
00:17:41,895 --> 00:17:44,189
உன்னுடைய இளமை காலத்தில் இருந்து
தொடங்குவோம்.

306
00:17:44,273 --> 00:17:45,482
இனிமையான சார்லி பிரவுன்...
சரி, சார்!

307
00:17:45,566 --> 00:17:48,110
ஆரம்பத்திலிருந்தே,

308
00:17:48,193 --> 00:17:50,529
உன்னை யாருக்கும் பிடிக்கவில்லை
என்பதை நீயே பார்க்கலாம்.

309
00:17:50,612 --> 00:17:51,613
நான் அவனை வெறுக்கிறேன்!

310
00:17:51,697 --> 00:17:52,948
நீ பிரபலமாகவில்லை.

311
00:17:55,033 --> 00:17:58,036
உன் சக நண்பர்களுடைய எதிர்பார்ப்பிற்கு
ஏற்றவாறு நீ நடந்து கொள்ளவில்லை.

312
00:17:58,954 --> 00:17:59,955
பார்த்தாயா?

313
00:18:00,831 --> 00:18:02,040
இப்போது, கவனி.

314
00:18:03,458 --> 00:18:06,545
நாம் நன்றாக தேடிப் பார்த்தால்,
தொடர் தோல்விகளின்,

315
00:18:06,628 --> 00:18:09,339
ஒரு பட்டியலைப் பார்க்கலாம்.

316
00:18:09,423 --> 00:18:10,883
டமால்!

317
00:18:12,092 --> 00:18:13,552
உன்னுடைய தலைமையில்,

318
00:18:13,635 --> 00:18:17,389
விளையாடிய ஒவ்வொரு ஆட்டத்தையும்
உன் கூடைப்பந்து அணி தோற்றிருக்கிறது.

319
00:18:17,472 --> 00:18:20,100
நாங்கள் சில சமயம்
வெற்றியும் பெற்றிருக்கிறோம்.

320
00:18:20,184 --> 00:18:23,270
ஆமாம், ஆனால் அப்போது
உன் கையில் அடிபட்டிருந்தது.

321
00:18:25,772 --> 00:18:27,941
விளையாட்டுகளைப் பற்றி
மேலும் பார்க்கும் போது,

322
00:18:28,775 --> 00:18:32,112
நீ எப்போதுமே, ஒரு முறை கூட
கால் பந்தை உதைத்தே கிடையாது.

323
00:18:33,614 --> 00:18:34,615
பார்த்தாயா?

324
00:18:35,407 --> 00:18:39,077
நீ குழுவோடு விளையாடாத போது கூட,
நீ தோல்வி அடைந்தாய்.

325
00:18:41,038 --> 00:18:43,290
நீ தனியாகவும், மற்றவர்களோடு சேர்ந்தும்
தோல்வி அடைகிறாய்.

326
00:18:44,333 --> 00:18:47,044
இப்போது,
காதலர் தினத்தைப் பற்றி பார்ப்போம்.

327
00:18:48,962 --> 00:18:50,380
கொடுமை!

328
00:18:50,464 --> 00:18:53,300
போதும்! இதற்கு மேல்
என்னால் பொறுக்க முடியாது.

329
00:18:56,720 --> 00:19:01,475
உன் கட்டுரையை எழுத உதவியதாக நம்புகிறேன்!
சில நாட்களில் கட்டண சீட்டை அனுப்புகிறேன்!

330
00:19:03,769 --> 00:19:07,940
தோல்வி, தோல்வி, தோல்வி.

331
00:19:08,023 --> 00:19:09,191
பெருமூச்சு

332
00:19:09,274 --> 00:19:12,945
சார்லி பிரவுனிற்கான பல யோசனைகள்
ஸ்பார்க்கியின் குழந்தை பருவத்தை சார்ந்தவை.

333
00:19:15,072 --> 00:19:16,657
ஆனால் அவருக்கு குழந்தைகள் பிறந்த பிறகு,

334
00:19:16,740 --> 00:19:19,868
அவர்களுடைய குழந்தைப் பருவம்
மெதுவாக பீனட்ஸிற்குள் வர ஆரம்பித்தன.

335
00:19:19,952 --> 00:19:24,373
என் குழந்தைகளை கவனிப்பதிலிருந்து
எனக்கு நிறைய யோசனைகள் கிடைக்கின்றன என்பதை,

336
00:19:24,456 --> 00:19:28,377
நான் கண்டிப்பாக
ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

337
00:19:28,460 --> 00:19:32,005
அவர்களுக்கிடையே ஏற்படக்கூடிய
சிறு சிறு விவாதங்கள் எல்லாம்

338
00:19:32,089 --> 00:19:34,091
எனக்கு சில யோசனைகளை தந்திருக்கின்றன.

339
00:19:34,174 --> 00:19:38,846
பொழுதுபோக்கு விஷயத்தில் தாக்கம்
ஏற்படுத்தக்கூடிய ஒரு விஷயம், என்னவென்றால்,

340
00:19:38,929 --> 00:19:42,224
அது ஒரு பிரத்தியேகமான பார்வை
கொண்ட நபரிடம் இருந்து வருவது தான்.

341
00:19:42,307 --> 00:19:47,521
ஒவ்வொரு படைப்பாளரும் தன் சொந்த
கண்ணோட்டத்தைத் தான் வெளிப்படுத்துவார்கள்.

342
00:19:47,604 --> 00:19:51,567
என் சிறுவயதில் கூட, அமெரிக்காவில் ஏதொவொரு
இடத்தில், ஒரு பெரிய மேஜைக்கு முன்

343
00:19:51,650 --> 00:19:54,111
அமர்ந்திருக்கும் ஒருவருக்கு மனைவியும்,

344
00:19:54,194 --> 00:19:58,782
குழந்தைகளும் இருக்கிறார்கள் என்ற
விஷயத்தை பற்றி நன்றாக உணர்ந்திருந்தேன்.

345
00:19:58,866 --> 00:20:01,910
பிறகு அவர் எழுந்து, ஸ்நூப்பியை வரைந்து,
பின்பு பனி சறுக்கு விளையாட்டுகிறார்.

346
00:20:01,994 --> 00:20:04,371
அதில் ஒரு சிறுவன்
மாதிரி விமானங்கள் செய்து கொண்டிருந்தான்,

347
00:20:04,454 --> 00:20:06,331
அதிலும் எனக்கு அப்போதைய மாதிரியை
காண்பித்துக் கொண்டிருந்தான்.

348
00:20:06,415 --> 00:20:09,918
அப்போது திடீரென்று எனக்கு, ஸ்நூப்பி
ஏன் நாய்கள் தங்கும் வீட்டில் இருந்து,

349
00:20:10,002 --> 00:20:12,629
முதலாம் உலகப் போர் படை விமானி போல தன்னையே
கற்பனை செய்துகொள்ள கூடாது என தோன்றியது.

350
00:20:12,713 --> 00:20:15,966
அவர் தன்னுடைய இன்னொரு மகன், கிரெய்க்
சொல்வதை, ஒரு நாள் கேட்டுக் கொண்டிருந்தார்,

351
00:20:16,049 --> 00:20:18,260
ஒரு இளைஞன் அந்தப் பக்கமாக நடந்து
போகும் போது, கிரெய்க் அவனைப் பார்த்து,

352
00:20:18,343 --> 00:20:20,679
"அவன் ஜோ கூல் போல நடந்து கொள்கிறான்"
என்று சொன்னான்.

353
00:20:20,762 --> 00:20:22,389
ஜோ கூல் தோன்றியது.

354
00:20:23,390 --> 00:20:27,060
அந்த நகைச்சுவை தொடரில் இருந்த ஒவ்வொரு
விஷயமும் ஸ்பார்க்கியின் சொந்த விஷயம் தான்.

355
00:20:27,144 --> 00:20:31,940
அதில் ஷ்ரோடெர் வாசிக்கக் கூடிய
ஒரு இசையைப் பற்றி அவர் எழுதியிருந்தால்,

356
00:20:32,024 --> 00:20:33,775
அது அவருக்கு பிடித்த
இசையாகத்தான் இருந்திருக்கும்.

357
00:20:33,859 --> 00:20:34,693
கடவுளே!

358
00:20:34,776 --> 00:20:36,236
தன் வாழ்வின் பெரும்பாலானவற்றை
பயன்படுத்தினார்.

359
00:20:36,320 --> 00:20:39,865
அவரோடு இருக்கும் போது அவர் எதையெல்லாம்
கவனிக்கிறார் என்று நான் பார்ப்பேன்.

360
00:20:39,948 --> 00:20:44,661
அவரை நான் என் செல்ல பப்பூ என்று அழைத்தேன்.
உடனேயே அது அந்த தொடரில் இடம் பெற்றது...

361
00:20:44,745 --> 00:20:48,415
"இது மிக பிரத்தியேகமான ஒன்று
என்னுடைய 'செல்ல பப்பூவிற்கு.'"

362
00:20:48,498 --> 00:20:50,584
...அதை சொல்லியே சாலி...

363
00:20:50,667 --> 00:20:52,085
காதலர் தின வாழ்த்துக்கள்,
என் செல்ல பப்பூ!

364
00:20:52,169 --> 00:20:53,378
...லைனஸை துன்புறுத்தினாள்.

365
00:20:53,462 --> 00:20:56,089
"நான் ஒன்றும் உன் செல்ல பப்பூ கிடையாது."

366
00:20:56,173 --> 00:20:58,842
"பிக்பென்." இந்த சொற்றொடர் பற்றி
என்ன நினைக்கிறீர்கள்?

367
00:20:58,926 --> 00:21:03,722
தன் குழந்தைகளை வினோதமான பெயரால் அழைக்கும்
என் நண்பரிடமிருந்து வந்தது தான் "பிக்பென்"

368
00:21:03,805 --> 00:21:06,391
அவருடைய இளைய மகன்,
வரவேற்பறையில் சுற்றி ஓடிக்கொண்டிருந்தான்,

369
00:21:06,475 --> 00:21:07,893
அவனிடம், "போய் தூங்கு, பிக்பென்"
என சொன்னார்.

370
00:21:07,976 --> 00:21:11,313
அந்த பெயர் நகைச்சுவை கதாபாத்திரத்திற்கு,
நன்றாக இருக்கும் என்று நினைத்தேன்.

371
00:21:11,396 --> 00:21:15,275
இந்த கதாபாத்திரம் மற்றவர்களால்
கிண்டல் செய்யப்படுவதை விரும்புகிறான்.

372
00:21:15,359 --> 00:21:16,818
சில சமயங்களில் மற்ற கதாபாத்திரங்களும்,

373
00:21:16,902 --> 00:21:20,197
பிக்பென்னிடம் வந்து, "நீ உன்னை நினைத்து
வெட்கப்பட வேண்டும்" என்று சொல்வார்கள்.

374
00:21:20,781 --> 00:21:23,450
"அவன் பார்ப்பதற்கு
எப்படி இருப்பான் தெரியுமா?" "என்ன?"

375
00:21:23,951 --> 00:21:26,161
"மண் அப்பிய ஒரு மனிதன் போல இருப்பான்."

376
00:21:26,245 --> 00:21:30,582
அவன் எதையும் சகித்துக் கொள்வான்.
பிக்பென்னுக்கு தன்மானம் இருக்கிறது.

377
00:21:30,666 --> 00:21:33,043
ஒரு இளம் திருநங்கையாக இருந்ததால்,

378
00:21:33,126 --> 00:21:35,462
இது தான் எனக்கு அவனிடம் பிடித்திருந்தது.

379
00:21:45,889 --> 00:21:48,267
லூசி பெரிய அளவில் உதவி செய்யவில்லை,

380
00:21:48,350 --> 00:21:50,644
அதனால் எனக்கு
மற்றொருவரின் அபிப்ராயமும் தேவை.

381
00:21:51,562 --> 00:21:56,191
தொண்ணூற்றி ஏழு, 98, 99, 100.

382
00:21:56,275 --> 00:21:57,484
என்னுடைய முறை.

383
00:22:02,447 --> 00:22:03,574
பிக்பென்!

384
00:22:05,701 --> 00:22:07,327
நீ அசுத்தம் செய்கிறாய்.

385
00:22:24,928 --> 00:22:28,348
ஹாய், சார்லி பிரவுன்.
மண் கட்டிகள் செய்வதற்கு எனக்கு உதவுகிறாயா?

386
00:22:28,432 --> 00:22:33,270
என்னால் முடியாது, பிக்பென்.
எனக்கு பள்ளிக்கூட வேலை இருக்கிறது.

387
00:22:33,353 --> 00:22:35,856
ஹேய்! எங்களோடு வந்து
இந்த கையிற்றில் குதித்து விளையாடு!

388
00:22:35,939 --> 00:22:38,734
ஓ, வேண்டாம்.
அந்த சிவப்பு-முடி சிறுமி வருகிறாள்.

389
00:22:41,737 --> 00:22:43,697
என்ன விஷயம், சார்லி பிரவுன்?

390
00:22:43,780 --> 00:22:46,700
-அவள் என்னை பார்க்கக் கூடாது.
-ஏன் பார்க்கக் கூடாது?

391
00:22:47,284 --> 00:22:49,286
அவள் பார்ப்பது
அவளுக்கு பிடிக்கவில்லை என்றால்?

392
00:22:49,828 --> 00:22:53,040
நீ உன்னை எப்படி பார்க்கிறாய் என்பது தான்
மிகவும் முக்கியம்.

393
00:22:53,123 --> 00:22:55,542
யார் என்ன நினைத்தாலும்
எனக்கு என்னைப் பிடிக்கும்.

394
00:22:56,251 --> 00:23:00,631
உண்மையாகவா? நீ மோசம் என்று
அவர்கள்... நினைத்தாலும் கூடவா?

395
00:23:01,131 --> 00:23:06,136
நான் என்னை மோசமானவனாக நினைக்கவில்லை.
பல ஆண்டு கால மண்ணும் அழுக்கும் இருக்கும்

396
00:23:06,220 --> 00:23:09,723
வரலாற்று சிறப்பு மிக்க ஒரு நபராகத் தான்
நான் என்னை நினைக்கிறேன்.

397
00:23:09,806 --> 00:23:12,392
உன்னைப் போல் எனக்கு
தன்னம்பிக்கை இல்லை, பிக்பென்.

398
00:23:13,393 --> 00:23:16,396
இந்த சிவப்பு-முடி சிறுமி என்னை
பார்ப்பதற்கு முன் நான் போய் விடுகிறேன்.

399
00:23:18,982 --> 00:23:20,567
பாவம் சார்லி பிரவுன்.

400
00:23:27,574 --> 00:23:29,117
சார்லி பிரவுன் போலவே,

401
00:23:29,201 --> 00:23:33,205
நிஜ வாழ்க்கையில், ஸ்பார்க்கிக்கும்
ஒரு சிவப்பு தலைமுடி கொண்ட காதலி இருந்தாள்.

402
00:23:33,705 --> 00:23:38,126
இளைஞனாக இருந்த போது, ஸ்பார்க்கி சிகப்பு
தலைமுடி கொண்ட டானா வோல்ட் என்ற

403
00:23:38,710 --> 00:23:41,713
ஒரு பெண்ணை சந்தித்து,
அவள் மீது காதல் கொண்டார்.

404
00:23:41,797 --> 00:23:45,384
டானா ஒரு தீயணைப்பு வீரரை திருமணம்
செய்து கொள்ள நிச்சயிக்கப்பட்டு இருந்தது,

405
00:23:45,467 --> 00:23:49,012
ஆனால் அவள் அது பற்றி உறுதியாக இல்லை.

406
00:23:49,096 --> 00:23:53,058
அவரோடு உறவை முறித்துக்கொண்டு,
அவள் ஸ்பார்க்கியோடு நட்பாக இருந்தாள்.

407
00:23:54,601 --> 00:23:57,187
அவள் என்னை திருமணம் செய்து
கொள்வாள் என மிகவும் நம்பினேன்.

408
00:23:59,106 --> 00:24:00,315
ஆனால் அவள் அப்படி செய்யவில்லை.

409
00:24:00,816 --> 00:24:03,902
"நான் சிறிது கடினமாக உழைத்தால்,
இதுவாக அல்லது அதுவாக இருந்தால்,

410
00:24:03,986 --> 00:24:06,029
அவள் அந்த தீயணைப்பு வீரரை மறந்து விட்டு

411
00:24:06,113 --> 00:24:08,782
என்னோடு தொடர்ந்து உறவில் இருப்பாள்"
என்று அவர் நினைத்தார்.

412
00:24:08,866 --> 00:24:12,494
ஆனால், அவள் முடிவெடுத்து அந்த தீயணைப்பு
வீரரை திருமணம் செய்து கொண்டாள்.

413
00:24:12,578 --> 00:24:18,166
என் இதயத்தையும், அன்பையும்
தந்தேன், அவள் என்னை நிராகரித்து விட்டாள்.

414
00:24:18,250 --> 00:24:19,376
என்னை யாருக்கும் பிடிக்காது...

415
00:24:19,459 --> 00:24:23,463
நான் அது பற்றி ரொம்ப வருந்தினேன்.
நான் அது பற்றி பல காலமாக கனவு கண்டேன்.

416
00:24:24,464 --> 00:24:27,176
அவர் திருமணம் செய்ய
நினைத்த பெண் அவள் தான்.

417
00:24:27,259 --> 00:24:30,429
இந்த கதை சார்லி பிரவுன் பற்றியது
போலவே இருக்கிறது.

418
00:24:30,512 --> 00:24:32,931
-அஞ்சல்
-தலைகீழாக!

419
00:24:36,852 --> 00:24:39,730
பீனட்ஸ் குழுவில் சார்லி பிரவுன் மட்டுமே

420
00:24:39,813 --> 00:24:41,481
காதலில் தோல்வியுற்றவனாக இருக்கவில்லை.

421
00:24:41,565 --> 00:24:44,193
பீனட்ஸ், காதலில் தோல்வியுற்றவர்களின்
உலகமாக இருந்தது.

422
00:24:45,319 --> 00:24:47,863
ஷ்ரோடெருக்காக லூசி ஏங்குகிறாள்.

423
00:24:47,946 --> 00:24:50,866
அவன் எப்போதுமே, "முடியாது" என்று சொல்வது,
எனக்கு வேடிக்கையாக இருக்கும்.

424
00:24:50,949 --> 00:24:52,075
லாலோ அல்காராஸ்
கேலி சித்திரம் வரைபவர், லா குகாராச்சா

425
00:24:52,159 --> 00:24:53,702
சாலி லைனஸிற்காக ஏங்குகிறாள்.

426
00:24:53,785 --> 00:24:56,788
ஒரு கட்டத்தில், பெப்பர்மின்ட் பேட்டி
சார்லி பிரவுனுக்காக ஏங்குகிறாள்.

427
00:24:56,872 --> 00:25:00,876
எனவே மனதில் மிகுந்த காதலை இவர்கள்
சுமந்க்கிறார்கள் ஆனால் அந்த சங்கிலி தொடர்

428
00:25:00,959 --> 00:25:07,174
அப்படியே நீடித்து... அறுபடாமல் திரும்ப
காதலிக்கப்படாமல் இருப்பது போல தோன்றுகிறது.

429
00:25:08,175 --> 00:25:10,302
அந்த சிவப்பு-முடி சிறுமிக்காக
தொடர்ந்த அவனது தேடல்

430
00:25:10,385 --> 00:25:13,514
எனக்கு... மிகுந்த சம்பந்தத்தோடு இருந்தது,

431
00:25:13,597 --> 00:25:15,974
ஏனென்றால் பள்ளியில்
நான் அருகில் கூட போக பயந்த

432
00:25:16,058 --> 00:25:21,188
ஒரு பெண்ணின் மீது
எனக்கு அதிகபட்சமான ஈர்ப்பு இருந்தது.

433
00:25:21,271 --> 00:25:22,272
ஐரா கிளாஸ்
திஸ் அமெரிக்கன் லைஃப்

434
00:25:22,356 --> 00:25:24,942
நிறைய நேரங்களில், "நான் இன்று தைரியமாக
அந்த சிவப்பு-முடி சிறுமியிடம்

435
00:25:25,025 --> 00:25:27,069
பேசப் போகிறேன்"
என்ற எண்ணங்கள் இருந்திருக்கிறது.

436
00:25:27,152 --> 00:25:30,072
வந்து, "இன்று தான் அந்த நாள்" என்ற எண்ணம்.
அந்த நாள் வந்ததே கிடையாது.

437
00:25:30,155 --> 00:25:32,574
காதல் நம்மை விசித்திரமான
விஷயங்களை செய்ய வைக்கும்...

438
00:25:50,342 --> 00:25:52,135
நீ மிகவும் திறமையானவன், ஷ்ரோடெர்.

439
00:25:52,886 --> 00:25:55,889
மக்கள் உன்னை நேசிப்பதற்கு
உன் இசை தான் காரணம் என்று நினைக்கிறாயா?

440
00:25:57,099 --> 00:26:00,769
அது உண்மையாக இருக்கலாம், சார்லி பிரவுன்,
இசை பற்றி எனக்கு பிடித்த விஷயமே

441
00:26:00,853 --> 00:26:05,148
நேரத்தை தனிமையாக கழிக்க முடியும்
என்ற முற்றிலும் மாறுபட்ட ஒரு விஷயம்தான்.

442
00:26:10,028 --> 00:26:12,698
நாம் யார் என்பதை
நமது இசை வெளிக்காட்டும்.

443
00:26:13,574 --> 00:26:16,577
என்னைப் பற்றி இசை என்ன வெளிக்காட்டுகிறது
என்பதைப் பற்றி யோசிக்கிறேன்.

444
00:26:26,044 --> 00:26:30,257
சார்லி பிரவுன், உன் கட்டுரையை எப்படி எழுதி
இருக்கிறாய்? என் படக்காட்சி உதவியதா?

445
00:26:33,760 --> 00:26:36,972
ஹாய், ஷ்ரோடெர். நீ எனக்காக ஏங்கினாயா?

446
00:26:48,775 --> 00:26:53,488
வருடங்கள்ஆக ஆக, ஸ்பார்க்கி
போலவே பீனட்ஸும் வளர்ந்து மாறியது.

447
00:26:53,572 --> 00:26:56,200
அது எப்போதும் நகைச்சுவை பற்றி
மட்டும் இருக்கவில்லை.

448
00:26:56,283 --> 00:27:00,287
என் குழந்தைகள் வளர்ந்த போது,
அந்த தொடர் குழந்தைகள் பற்றி மட்டும் இல்லை.

449
00:27:00,370 --> 00:27:02,873
அந்த தொடர் மிகவும் விளக்க முடியாததாக மாறி,

450
00:27:02,956 --> 00:27:06,502
அதில் வரும் குழந்தைகள், பெரியவர்களின்
அம்சங்களாக சித்தரிக்கப்பட்டு அவர்கள்

451
00:27:06,585 --> 00:27:10,005
எதிர்கொள்ளக்கூடிய பிரச்சினைகளை சந்தித்து
அவர்கள் பேசக்கூடிய விஷயங்களை பேசினார்கள்.

452
00:27:11,215 --> 00:27:14,301
அழகான கதாபாத்திரங்கள், நகைச்சுவை
தருணங்கள் கொண்ட, ஒரு அழகான சித்திரம் அது.

453
00:27:14,384 --> 00:27:17,888
ஆனால் அதற்கு ஆழமான அர்த்தமும் உண்டு.

454
00:27:17,971 --> 00:27:21,600
அந்த கதாபாத்திரங்கள் சிக்கலானவை, மற்றும்
அவர்கள் மனித உணர்வுகள், உணர்ச்சிகள்

455
00:27:21,683 --> 00:27:24,686
மற்றும், மனித நிலைமையை பற்றி,
பேசக் கூடியவர்களாக இருக்கிறார்கள்,

456
00:27:25,270 --> 00:27:32,236
ஒருவருடைய மனநிலையை சித்தரிப்பதில்
அவர் சிறந்தவர்.

457
00:27:32,319 --> 00:27:33,195
அல் ரோகெர்
பத்திரிக்கையாளர்

458
00:27:33,278 --> 00:27:35,864
அவர் இந்த நாட்டின் மனநிலையை
புரிந்து வைத்திருந்தார்.

459
00:27:35,948 --> 00:27:37,658
அவர் எப்போதும் உண்மையைத்
தேடினார் என்றும்...

460
00:27:37,741 --> 00:27:38,742
பில்லி ஜீன் கிங்
டென்னிஸ் சாம்பியன்/ஆர்வலர்

461
00:27:38,825 --> 00:27:40,035
...உண்மையை பேசினார் என்றும் தோன்றியது.

462
00:27:40,118 --> 00:27:45,207
உலகம் எல்லோருக்கும் சமம் என்று ஸ்பார்க்கி
விரும்பினார், அது தான் அவருடைய உண்மை.

463
00:27:46,959 --> 00:27:51,588
1906-களின் இறுதியில்,
ஸ்பார்க்கி சுதந்திரமாக இருக்கும்,

464
00:27:51,672 --> 00:27:54,216
தன் ஒற்றை பெற்றோருடன் வாழக்கூடிய,
செருப்புகளும் அரை டிராயரும் அணிந்து

465
00:27:54,299 --> 00:27:58,178
பள்ளியின் சீருடை விதியை மீறிய ஒரு பெண்ணாக
பெப்பர்மின்ட் பேட்டியை உருவாக்கினார்.

466
00:27:59,054 --> 00:28:01,348
அவள் மிகவும் மாறுபட்டவள்.

467
00:28:01,431 --> 00:28:03,725
ஒரு நகைச்சுவை சித்திர தொடரில்
காணப்படக்கூடிய பொதுவான

468
00:28:03,809 --> 00:28:05,352
பெண் கதாபாத்திரமாக
அவள் சித்தரிக்கப்படவில்லை.

469
00:28:05,435 --> 00:28:07,312
அவள் தனித்துவம் வாய்ந்த ஒருத்தி.

470
00:28:07,396 --> 00:28:10,691
அவள் தனித்துவம் வாய்ந்தவளாக
இருந்து கொண்டு,

471
00:28:10,774 --> 00:28:12,192
அதில் சுகமாகவும் இருந்தாள்.

472
00:28:12,860 --> 00:28:15,362
பெப்பேர்மின்ட் பேட்டி
படிப்பில் ரொம்ப மோசம்.

473
00:28:15,445 --> 00:28:18,240
அவள் வகுப்பில் எப்பொழுதும்
தூங்கிக் கொண்டே இருப்பாள்.

474
00:28:19,324 --> 00:28:20,659
ஆனால் நன்றாக விளையாடுவாள்.

475
00:28:20,742 --> 00:28:24,496
ஒவ்வொரு முறையும்
சக்கின் பேஸ்பால் அணியை தோற்கடிப்பாள்.

476
00:28:24,580 --> 00:28:27,541
சில சமயங்களில், அந்த பாயிண்டுகள்,
100க்கு-1 என்று கூட இருக்கும்.

477
00:28:28,125 --> 00:28:30,002
விளையாட்டுக்களை விரும்பிய
பெப்பர்மின்ட் பேட்டியின் கதாபாத்திரம்

478
00:28:30,085 --> 00:28:33,589
ஸ்பார்க்கியின் தோழியான, தற்காலத்தின்
சிறந்த டென்னிஸ் வீராங்கனையான

479
00:28:33,672 --> 00:28:36,884
பில்லி ஜீன் கிங் என்பவரின் சாயலில்
அமைக்கப்பட்டிருந்தது.

480
00:28:37,634 --> 00:28:40,304
பெண்களைப் பார்க்கும் போது,
விளையாட்டுகளில் இருந்த பெண்களை

481
00:28:40,387 --> 00:28:43,348
பார்க்கும் பொழுது, ஒரு பெண்ணாக,
நான், "அது சிறப்பு" என நினைப்பேன்.

482
00:28:43,432 --> 00:28:45,017
ஸ்பார்க்கி உண்மையில் ஒரு பெண்ணியவாதி.

483
00:28:45,100 --> 00:28:46,935
பீனட்ஸ் உலகில் பெண்கள் எப்போதும்

484
00:28:47,019 --> 00:28:50,230
வலிமையானவர்களாக, பெரும்பாலான நேரங்களில்
ஆண்களை விட வலிமையானவர்களாக,

485
00:28:50,314 --> 00:28:52,399
இருப்பதை ஸ்பார்க்கி உறுதி செய்து கொண்டார்.

486
00:28:52,482 --> 00:28:53,317
தைரியமாக பேசு!!

487
00:28:53,400 --> 00:28:55,736
இந்த நகைச்சுவைத் தொடர்கள்
நமது கலாச்சாரத்தை பிரதிபலித்திருக்கின்றன.

488
00:28:55,819 --> 00:29:01,200
அதில் சுதந்திரமாக, நினைத்ததை பேசக்கூடிய
தற்போதைய குழந்தைகளின் புது கண்ணோட்டத்தை

489
00:29:01,283 --> 00:29:03,493
பெப்பர்மின்ட் பேட்டி
பிரதிபலித்திருக்கிறாள்.

490
00:29:03,577 --> 00:29:07,456
"இதோ நான் வருகிறேன், நண்பா!
முடிந்தால் என்னை தடுத்து நிறுத்து!"

491
00:29:07,539 --> 00:29:08,540
டமால்!

492
00:29:12,794 --> 00:29:13,837
வெளியூர் அணி
12

493
00:29:13,921 --> 00:29:14,922
உள்ளூர் அணி
00

494
00:29:41,698 --> 00:29:42,741
ஆமாம்!

495
00:29:45,410 --> 00:29:46,411
ஆமாம்!

496
00:29:52,960 --> 00:29:54,211
நல்ல ஆட்டம், சக்.

497
00:29:54,294 --> 00:29:56,880
ஆனால் நீ சற்று
கவனம் சிதறியது போலத் தோன்றியது.

498
00:29:56,964 --> 00:30:00,133
உன் அணி மேலாளர் உன்னை விளையாட்டிலிருந்து
அனுப்பாதது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

499
00:30:00,217 --> 00:30:02,302
அவன் தான் அவர்களுடைய மேலாளர், சார்.

500
00:30:02,886 --> 00:30:04,721
நீ நலமாக இருக்கிறாயா, சார்லி பிரவுன்?

501
00:30:04,805 --> 00:30:06,807
இந்த வீட்டுப்பாட வேலை
என்னை கஷ்டப்படுத்துகிறது.

502
00:30:06,890 --> 00:30:09,351
என் வாழ்வின் அர்த்தத்தை
நான் புரிந்துகொள்ள வேண்டுமாம்.

503
00:30:09,434 --> 00:30:12,229
ஐயோ, அது ஒரு பெரிய விஷயம், சக்.

504
00:30:12,312 --> 00:30:15,482
என்னுடைய ஆசிரியர் எந்த வீட்டு பாடமும்
கொடுக்காதது பற்றி எனக்கு மகிழ்ச்சி.

505
00:30:15,566 --> 00:30:18,318
இந்த வாரம் ஒவ்வொரு நாளும் எங்களுக்கு
வீட்டுப்பாடம் கொடுக்கப்பட்டது, சார்.

506
00:30:19,695 --> 00:30:22,614
மக்கள் எப்போதுமே வாழ்க்கையின் அர்த்தத்தைத்
தேடி யோசித்திருக்கிறார்கள்,

507
00:30:22,698 --> 00:30:23,699
சார்லி பிரவுன்.

508
00:30:23,782 --> 00:30:26,827
நமது வாழ்வின் முக்கிய குறிக்கோள், அன்பை
கொடுப்பதும், அதைப்பெறுவதும் தான் என

509
00:30:26,910 --> 00:30:28,620
என் தாத்தா எப்போதும் சொல்லி இருக்கிறார்.

510
00:30:30,664 --> 00:30:32,749
அவர் நிறைய பெருமூச்சுவிட்டிருக்கிறார்.

511
00:30:34,251 --> 00:30:36,920
என்னை யாராவது நேசிப்பார்களா என்று
எனக்குத் தெரியவில்லை.

512
00:30:37,004 --> 00:30:41,633
லூசியிடம் உதவி கேட்டேன், அவள் என்னிடம்
இருக்கும் தவறை மட்டும் தான் சொன்னாள்.

513
00:30:41,717 --> 00:30:43,760
என்னிடம் ஏதாவது சரியாக இருக்கிறதா?

514
00:30:43,844 --> 00:30:47,598
கண்டிப்பாக இருக்கிறது, சக்.
உன்னிடம் நிறைய நல்ல குணங்கள் இருக்கின்றன.

515
00:30:47,681 --> 00:30:50,767
அப்படியா? உதாரணத்திற்கு, ஏதாவது சொல்.

516
00:30:55,647 --> 00:30:58,066
சரி, நீ மிகவும் இரக்கமானவன்.

517
00:31:00,944 --> 00:31:02,237
நீ மிகவும் தயாள குணம் உடையவன்.

518
00:31:02,321 --> 00:31:05,782
நீ பிறருக்கு உதவக் கூடியவன்.
ரொம்பவும் உதவக் கூடியவன், சக்.

519
00:31:05,866 --> 00:31:10,662
ஆஹா. இரக்கம், தயாள குணம் மற்றும்
உதவி செய்யும் குணம். நன்றி, நண்பர்களே!

520
00:31:11,163 --> 00:31:13,081
ஹேய், லூசி. என்ன தெரியுமா?

521
00:31:13,165 --> 00:31:17,002
நீ சொன்னது தவறு. நான் இரக்கமுடையவன்,
தயாள குணமுடையவன், பிறருக்கு உதவி செய்பவன்.

522
00:31:17,085 --> 00:31:19,421
அவர்கள் கண்டிப்பாக அப்படித்தான்
சொல்வார்கள், சார்லி பிரவுன்.

523
00:31:19,505 --> 00:31:22,132
நீ போட்ட பந்துகள், அடிப்பதற்கு சுலபமாக
இருந்ததால் நீ இரக்கமுடையவன்.

524
00:31:22,216 --> 00:31:24,593
அவர்களுக்கு நிறைய ரன்களை கொடுத்ததால்
நீ தயாள குணமுடையவன்.

525
00:31:24,676 --> 00:31:26,845
விளையாட்டில் அவர்கள் வெற்றி பெற
நீ உதவி செய்தாய்.

526
00:31:28,555 --> 00:31:31,266
நீ என் தாத்தா போலவே மூச்சுவிடுகிறாய்,
சார்லி பிரவுன்.

527
00:31:34,311 --> 00:31:37,689
ஃபிராங்க்ளின் ஆர்ம்ஸ்ட்ராங் தான்

528
00:31:37,773 --> 00:31:39,358
பீனட்ஸ் குழுவில் சேர்ந்த கடைசி நபர்.

529
00:31:39,441 --> 00:31:42,736
அவன் வந்த பிறகு, அந்த நகைச்சுவை தொடர்
சித்திரத்தை முழுவதுமாக மாற்றி விட்டான்.

530
00:31:43,445 --> 00:31:48,825
ஃபிராங்க்ளின் பீனட்ஸ் குழுவில் வந்த போது
நான் எட்டாவது வகுப்பு படித்தேன்.

531
00:31:48,909 --> 00:31:52,120
நான், "ஆஹா" என நினைத்தது நினைவிருக்கிறது.
இதோ ஒரு கருப்பின கதாபாத்திரம்.

532
00:31:52,204 --> 00:31:53,372
ஒரு கருப்பு சிறுவன் இருக்கிறான்.

533
00:31:53,455 --> 00:31:56,750
இந்த நகைச்சுவை சித்திர தொடரை படிக்கிறேன்
அதில் திடீரென, என்னைப் போலவே ஒரு

534
00:31:56,834 --> 00:31:57,835
ஒரு சிறுவன் இடம் பெறுகிறான்.

535
00:31:58,919 --> 00:32:03,006
இந்த காலத்தில் அது பெரிய விஷயம்
இல்லாமல் இருக்கலாம், ஆனால் 1968-இல்,

536
00:32:03,090 --> 00:32:07,636
கேலி சித்திரத்தில் வெள்ளை மற்றும் கருப்பின
குழந்தைகள் விளையாடுவது பெரிய விஷயம் தான்.

537
00:32:08,387 --> 00:32:12,140
அவர் ஃபிராங்க்ளினை இந்த தொடரில்
கொண்டு வந்த, அந்த 1968 ஆம் வருடம்,

538
00:32:12,224 --> 00:32:16,019
டாக்டர். கிங் படுகொலை செய்யப்பட்டதால்
நகரங்கள் எரிந்து கொண்டிருந்தன.

539
00:32:16,603 --> 00:32:18,522
மெம்பிஸ், டெனெஸீயில்,

540
00:32:18,605 --> 00:32:21,775
சமூக உரிமைகள் இயக்கத்தின் அஹிம்சையின்
தூதுவர் டாக்டர். மார்டின் லூதர் கிங்,

541
00:32:21,859 --> 00:32:24,528
துப்பாக்கியால் சுடப்பட்டு
படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

542
00:32:24,611 --> 00:32:29,992
ஹாரியெட் க்ளிக்மன் என்ற
ஒரு பெண் ஸ்பார்க்கியைத் தொடர்பு கொண்டாள்.

543
00:32:30,075 --> 00:32:34,663
அவள், "உங்களுடைய இந்த துறையின் மூலம்,
நீங்கள் ஏதாவது செய்ய வேண்டிய நேரம்

544
00:32:34,746 --> 00:32:36,415
வந்து விட்டது, திரு. ஷுல்ஸ்" என்றாள்.

545
00:32:36,498 --> 00:32:42,254
மேலும், "பீனட்ஸில் ஒரு கருப்பின குழந்தை
கதாபாத்திரத்தை சேர்க்க வேண்டும்" என்றாள்.

546
00:32:42,337 --> 00:32:46,049
அவர், "முடியாது. இளம் கருப்பின குழந்தை
எப்படி இருக்குமென எனக்கு தெரியாது" என்றார்

547
00:32:46,550 --> 00:32:50,512
எனவே ஹாரியெட் க்ளிக்மன் தன் கருப்பின
நண்பர்களான, கெனத் கெல்லி, மோனிகா கன்னிங்,

548
00:32:50,596 --> 00:32:54,600
மற்றும் அவர்களது பெற்றோர்களை,
ஷுல்ஸிற்கு கடிதம் எழுத சொன்னாள்.

549
00:32:55,267 --> 00:32:59,813
அப்போது, கேலி சித்திரங்களில்
வேற்று நிற கதாபாத்திரங்கள் இல்லை,

550
00:32:59,897 --> 00:33:03,108
தன்னால் அதை மாற்ற முடிந்தால் அது மற்ற
குழந்தைகளுக்கு எப்படிப்பட்ட அர்த்தத்தை

551
00:33:03,192 --> 00:33:05,152
தரும் என்பதை ஸ்பார்க்கி புரிந்து கொண்டார்.

552
00:33:05,235 --> 00:33:08,572
அர்த்தமுள்ள ஒரு விஷயத்தை, ஏதோ ஒரு உண்மையை
சொல்லக்கூடிய ஒன்றை செய்ய வேண்டும்

553
00:33:08,655 --> 00:33:10,157
என்று அவர் விரும்பினார்.

554
00:33:10,240 --> 00:33:13,410
அவர் ஒரு நடுநிலையான மனிதர் என்ற ஒரு விஷயம்
நமக்கு கண்டிப்பாக புரிந்தது.

555
00:33:13,493 --> 00:33:17,539
அதாவது, இன வேறுபாடு என்பது
கண்டிப்பாக நியாயமான விஷயம் கிடையாது.

556
00:33:17,623 --> 00:33:19,875
நான் ஃபிராங்க்ளின்
கதாபாத்திரத்தை பற்றி நிறைய யோசித்தேன்

557
00:33:19,958 --> 00:33:23,045
ஏனென்றால் என்னால் அவனை சரியாக
சித்தரிக்க முடியாது என்று நினைத்தேன்.

558
00:33:23,128 --> 00:33:23,962
தயவு செய்து,
ஒன்று கொடுங்கள்

559
00:33:24,046 --> 00:33:26,924
நான் அதற்கு ஆதரவளித்தது போல
காணப்பட விரும்பவில்லை.

560
00:33:27,007 --> 00:33:29,676
பெரிய விளம்பரம் இல்லாது
அதை செய்ய விரும்பினேன்.

561
00:33:29,760 --> 00:33:34,306
அவன் தோன்றிய ஒரு சிறு காட்சியில்
இரு சிறுவர்கள் கடற்கரையில் சந்தித்தனர்.

562
00:33:34,389 --> 00:33:37,643
இருவருமே தங்களுக்கு மணல் வீடுகள் கட்டுவது
பிடிக்கும் என்று புரிந்து கொண்டார்கள்.

563
00:33:37,726 --> 00:33:40,270
ஒருவன் வெள்ளை நிறத்தவன் மற்றொருவன்
கருப்பினத்தவன் என்பது ஒரு பொருட்டாக இல்லை.

564
00:33:40,354 --> 00:33:42,439
"இதோ, இங்கே பார், சார்லி பிரவுன்,

565
00:33:42,523 --> 00:33:44,858
இது ஒரு உண்மையான மணல் வீடு!"

566
00:33:44,942 --> 00:33:47,611
பத்திரிக்கைகள் அந்த தொடரை வெளியிட
மாட்டோம் என்று பயமுறுத்தினார்கள்.

567
00:33:47,694 --> 00:33:50,656
அதற்கு, "சரி, வெளியிட வேண்டாம்" என்றார்.
ஆனால் அவர்கள் அப்படி செய்யவில்லை.

568
00:33:50,739 --> 00:33:53,700
பிறகு, "சரி, அவர்கள் பள்ளியில் ஒன்றாக
இருப்பது போல சித்தரிக்காதீர்கள்" என்றனர்.

569
00:33:53,784 --> 00:33:56,036
அதன் பிறகு, அவர் உண்மையில்
அதைத்தான் செய்தார்.

570
00:33:56,119 --> 00:33:58,413
ஃபிராங்க்ளின் பற்றிய மற்றொரு
சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால்,

571
00:33:58,497 --> 00:34:04,336
அவன் கருத்துள்ளவனாக இருந்தாலும் அவனுடைய
குணநலன்களை நாம் நினைவில் கொள்ளவில்லை.

572
00:34:04,419 --> 00:34:08,422
அவன் ஒரு அக்கறையுள்ள
சிறுவனாக இருந்தான், இப்போது,

573
00:34:08,507 --> 00:34:10,634
ஒரு வளர்ந்தவனாக அதைப்பற்றி
திரும்பிப் பார்க்கும் போது,

574
00:34:11,217 --> 00:34:16,306
வெள்ளை இன உலகில், ஒரு கருப்பின குழந்தையாக
இருப்பது, அது ஒரு நகைச்சுவை சித்திர

575
00:34:16,389 --> 00:34:18,266
உலகமாக இருந்தாலும் மிகவும்
கடினமான விஷயமாக இருந்தது என

576
00:34:18,350 --> 00:34:20,143
புரிந்துகொள்ள முடிகிறது.

577
00:34:20,226 --> 00:34:23,397
எல்லோரும் தன்னையே ஒரு மாதிரி
பார்ப்பதை அவன் அறிந்திருந்தான்.

578
00:34:40,121 --> 00:34:44,543
என் வாழ்க்கையில் ஒரு அர்த்தம் இருக்கிறது:
நாய்க்கு சாப்பாடு கொடுப்பது.

579
00:34:49,089 --> 00:34:51,425
நான் இதை இன்னும்
தாமதிக்க முடியாது என்று நினைக்கிறேன்.

580
00:34:51,507 --> 00:34:52,885
நான் இப்போது எழுத தொடங்குகிறேன்.

581
00:35:06,982 --> 00:35:08,734
ஒரு நாயாக என்னுடைய வாழ்க்கை

582
00:35:12,070 --> 00:35:16,950
அது ஒரு இருட்டான
புயல் வீசிய இரவு...

583
00:35:24,708 --> 00:35:28,420
நான் யார்? நான் எப்படிப்பட்டவன்?

584
00:35:31,507 --> 00:35:33,050
இது பயனற்றது.

585
00:35:33,133 --> 00:35:35,135
நான் சிறிது நேரம் வெளியில் செல்ல வேண்டும்.

586
00:35:47,648 --> 00:35:49,691
சார்லி பிரவுன் மற்றும் அவனுடைய நண்பர்கள்

587
00:35:49,775 --> 00:35:54,154
டிவியில் முதன் முதலாக சித்தரிக்கப்பட்டது
தான் எல்லாவற்றையும் விட சிறப்பான விஷயம்,

588
00:35:54,238 --> 00:35:57,074
"ஏ சார்லி பிரவுன் கிறிஸ்துமஸ்" என்ற
நிகழ்ச்சியின் மூலமாக.

589
00:35:57,157 --> 00:35:59,243
என் அம்மா எங்களுடைய முதல்
வண்ண தொலைக்காட்சி பெட்டியை...

590
00:35:59,326 --> 00:36:00,953
டான் "டாம் டுமாரோ" பெர்கின்ஸ் - கேலி
சித்திரம் வரைபவர், திஸ் மாடர்ன் வேர்ல்ட்

591
00:36:01,036 --> 00:36:03,455
...கிறிஸ்துமஸ் சிறப்பு நிகழ்ச்சி
பார்ப்பதற்காக சரியாக நேரத்தில் வாங்கினார்

592
00:36:03,539 --> 00:36:05,707
அது, என் வாழ்வில்
ஒரு பெரிய மகிழ்ச்சியான தருணமாக அமைந்தது.

593
00:36:05,791 --> 00:36:09,211
ஒவ்வொரு கிறிஸ்துமஸ் நேரத்திலும், நாங்கள்
சூடான கோக்கோ குடித்துக்கொண்டு

594
00:36:09,294 --> 00:36:11,088
அதைப் பார்த்து
மிகவும் மகிழ்ச்சியாக இருப்போம்.

595
00:36:12,005 --> 00:36:15,509
நான் கிறிஸ்துமஸ் கொண்டாட மாட்டேன். நான்
ஒரு யூதன். எனக்கு கிறிஸ்துமஸ் பிடிக்காது

596
00:36:15,592 --> 00:36:18,178
எனக்கு அதில் எந்த தாக்கமும் இல்லை.
கிறிஸ்துமஸ் எனக்கு அர்த்தமற்றது.

597
00:36:18,262 --> 00:36:23,183
அந்த சார்லி பிரவுன் கிறிஸ்துமஸ் சிறப்பு
நிகழ்ச்சியை விட... சிறந்த விஷயம் உண்டா?

598
00:36:23,267 --> 00:36:25,978
சார்லி பிரவுன்
கிறிஸ்மஸ் நிகழ்ச்சி மிக பிரபலமாகியது,

599
00:36:26,061 --> 00:36:29,565
அதற்குப் பிறகு ஒவ்வொரு விடுமுறைக்கும்
பீனட்ஸ் சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பாகியது.

600
00:36:29,648 --> 00:36:32,359
என் சிறு வயதில், நான் பாரம்பரிய
விடுமுறைகளை அனுபவித்ததில்லை.

601
00:36:32,442 --> 00:36:34,903
நான் வேலை நிமித்தமாக
பயணம் செய்து கொண்டிருந்தேன்.

602
00:36:34,987 --> 00:36:37,072
எனவே என்னைப் பொறுத்த வரை,

603
00:36:37,155 --> 00:36:41,660
இந்த சிறப்பு நிகழ்ச்சிகள் நான் அதுவரை
அனுபவித்திராத விஷயங்களை,

604
00:36:41,743 --> 00:36:44,329
"இது இந்த விடுமுறை. இது வருடத்தின் இந்த
காலம்" என்பது போன்ற விஷயங்களை காட்டியது.

605
00:36:44,913 --> 00:36:47,416
ஹாலோவீன் சிறப்பு நிகழ்ச்சி இருந்தது,

606
00:36:47,499 --> 00:36:48,834
அந்த சிறந்த பூசணிக்காய் சிறப்பு நிகழ்ச்சி,

607
00:36:48,917 --> 00:36:51,628
அதைத் தொடர்ந்த நகைச்சுவை,
"உனக்கு என்ன கிடைத்தது?"

608
00:36:51,712 --> 00:36:55,048
"எனக்கு ஆப்பிள் கிடைத்தது." எனக்கு
இனிப்பு கிடைத்தது." சார்லி பிரவுன்...

609
00:36:55,132 --> 00:36:57,134
எனக்கு ஒரு பாறை கிடைத்தது.

610
00:36:58,385 --> 00:37:01,013
சரி. நாம் இதை மறுபடியும் செய்வோம்.

611
00:37:06,351 --> 00:37:11,148
ஐந்து, நான்கு, மூன்று, இரண்டு...
எல்லா இயந்திரங்களும் இயங்குகின்றன.

612
00:37:11,648 --> 00:37:14,484
விடுமுறை சிறப்பு நிகழ்ச்சிகள்
பீனட்ஸை மிகவும் பிரபலமாக்கியதால்

613
00:37:14,568 --> 00:37:19,573
அப்போலோ 10 மாட்யூல்களுக்கு சார்லி பிரவுன்
மற்றும் ஸ்நூப்பி என நாசா பெயரிட்டார்கள்.

614
00:37:19,656 --> 00:37:22,993
உங்களது நிகழ்ச்சியில் பங்கு வகிப்பதற்கு
நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்,

615
00:37:23,076 --> 00:37:24,453
அதற்காக நன்றி கடன் பட்டிருக்கிறோம்.

616
00:37:24,536 --> 00:37:27,706
ஸ்நூப்பி நிலவுக்கு போவது
போன்ற விசித்திரமான விஷயங்கள்

617
00:37:27,789 --> 00:37:29,833
நடக்கப் போகின்றன என்று
எனக்கு தெரிந்திருக்கவில்லை.

618
00:37:29,917 --> 00:37:32,252
ஆமாம். நாங்கள் அங்கே
இந்த விஷயத்தை பார்க்கிறோம்.

619
00:37:34,129 --> 00:37:37,466
என் முழு வாழ்க்கையிலேயே நடந்த மிக
உணர்ச்சிகரமான தருணங்களில் இதுவும் ஒன்று.

620
00:37:37,549 --> 00:37:38,967
திரும்ப வரவேற்கிறோம்!!
சார்லி பிரவுன்

621
00:37:39,051 --> 00:37:42,429
கலாச்சாரத்தின் ஒரு முக்கியமான
பகுதியாக இருந்தால் தான்

622
00:37:42,513 --> 00:37:44,806
ஒரு நிலவு விண்கலத்திற்கு
நமது பெயரை வைப்பார்கள்.

623
00:37:44,890 --> 00:37:47,559
நான் சொல்வது புரிகிறதா? அந்தளவு
பிரபலமாக இருப்பதை கற்பனை செய்ய முடிகிறதா?

624
00:37:47,643 --> 00:37:49,686
கற்பனை செய்ய முடிகிறதா?
அது மிகவும் நம்ப முடியாதது.

625
00:37:50,562 --> 00:37:54,066
ஆனால் சார்லி பிரவுன் மற்றும்
ஸ்நூப்பி விண்வெளிக்கு சென்ற போது

626
00:37:54,149 --> 00:37:56,610
ஸ்பார்க்கி ஒரு அமைதியான வாழ்க்கை
வாழ்ந்து கொண்டிருந்தார்.

627
00:37:57,110 --> 00:37:58,779
தான் குழந்தையாக இருந்த போது விருப்பப்பட்ட

628
00:37:58,862 --> 00:38:01,949
ஒரு பனி சறுக்கும் ரிங்க்,
ஒரு பேஸ்பால் மைதானம் போன்றவற்றை

629
00:38:02,533 --> 00:38:03,951
தன்னை சுற்றியுள்ள உலகத்தில்,

630
00:38:04,743 --> 00:38:06,245
அவர் உருவாக்கிக் கொண்டார்.

631
00:38:07,538 --> 00:38:10,499
அவர் ஸ்டூடியோவில் வேலை செய்யவில்லை.
அது ஒரு வளாகம். டிஸ்னி உலகம் போல இருந்தது.

632
00:38:10,582 --> 00:38:13,961
அந்த கட்டிடத்தில் ஒரு கஃபே இருந்தது,
ஹாக்கி இருந்தது.

633
00:38:15,462 --> 00:38:19,383
தினமும் பனி சறுக்கு மைதானத்தில்
இப்படியும் அப்படியுமாக நடந்து சென்று

634
00:38:19,466 --> 00:38:22,344
காலை சிற்றுண்டி சாப்பிட்டு, ஸ்டூடியோவுக்கு
போகும் எனது அன்றாட பணியை ரொம்ப நேசித்தேன்.

635
00:38:22,427 --> 00:38:23,804
என்னைப் பொறுத்தவரை,

636
00:38:23,887 --> 00:38:26,974
எல்லாவற்றையும் விட உட்கார்ந்து
நகைச்சுவையான படம் வரைவதையே விரும்புவேன்.

637
00:38:27,683 --> 00:38:30,769
அவர் காலையில் எழுந்து, தன்னுடைய
காரை ஓட்டிச்சென்று,

638
00:38:30,853 --> 00:38:33,397
தெருவுக்கு எதிர்பக்கம் ஒரே இடத்தில்
அதை நிறுத்துவார்.

639
00:38:33,480 --> 00:38:35,566
பனி சறுக்கும் இடத்தில்
காலை சிற்றுண்டி சாப்பிட்டார்.

640
00:38:35,649 --> 00:38:38,026
திராட்சை ஜெல்லியோடு கூடிய
ஒரு ஆங்கிலேய மஃபின்.

641
00:38:38,110 --> 00:38:42,197
பிறகு அவர் தன் அலுவலகத்திற்குள் சென்று,
தன்னுடைய இடத்தில் அமர்ந்து வேலை செய்வார்,

642
00:38:42,281 --> 00:38:46,785
தன் அலுவலகத்திற்குச் சென்று, தன்னுடைய
கற்பனை வடிவம் பெற காத்துக் கொண்டிருப்பார்.

643
00:38:48,245 --> 00:38:50,831
அவர் வேலை செய்யாமல்
இருந்ததை நான் பார்த்ததே கிடையாது.

644
00:38:50,914 --> 00:38:53,709
நாங்கள் எப்போது சென்றாலும்,
அவர் தன்னுடைய ஸ்டூடியோவில் இருப்பார்.

645
00:38:53,792 --> 00:38:56,128
அவர் அதைத்தான் செய்தார்.
அது அவருக்கு பிடித்திருந்தது.

646
00:38:56,211 --> 00:39:01,800
தன் ஸ்டூடியோவில் உள்ள தனிமையான இடத்தில்
அமர்ந்து, எல்லாவற்றையும் உருவாக்குவார்.

647
00:39:01,884 --> 00:39:06,013
பல மணி நேரம் தனிமையாக ஒரு அறையிலிருந்து,
பல விஷயங்களை தன் முளையிலேயே சிந்தித்து

648
00:39:06,096 --> 00:39:11,560
வடிவமைப்பதற்கு ஒரு தனித்தன்மையான,
குணநலன் கொண்ட மனிதனாக இருக்க வேண்டும்.

649
00:39:12,769 --> 00:39:18,400
பெருமளவு வெற்றி பெற்றிருந்தாலும், அவர்
மீதும் அவருடைய கதாபாத்திரங்களின் மீதும்

650
00:39:18,483 --> 00:39:24,573
மக்கள் வைத்திருந்த அன்பும் மரியாதையும்

651
00:39:24,656 --> 00:39:27,451
அவர் முழுமையாக புரிந்து கொண்டாரா என்று
எனக்குத் தெரியவில்லை.

652
00:39:36,627 --> 00:39:40,964
நட்சத்திரங்களை பார்க்கும் போது உனக்கு
முக்கியத்துவம் இல்லாதது போல தோன்றவில்லையா,

653
00:39:41,048 --> 00:39:42,257
சார்லி பிரவுன்?

654
00:39:42,758 --> 00:39:45,093
நான் எப்போதுமே
முக்கியமில்லாதவனாகத்தான் உணர்வேன், லைனஸ்.

655
00:39:48,263 --> 00:39:50,516
உன் வீட்டு பாடத்தை
எந்தளவு எழுதியிருக்கிறாய்?

656
00:39:50,599 --> 00:39:52,643
நான் இன்னும் ஒரு வார்த்தை கூட எழுதவில்லை.

657
00:39:53,435 --> 00:39:55,604
நான் யாருக்கும் முக்கியம் இல்லை போலும்.

658
00:39:55,687 --> 00:39:58,190
நீ முக்கியம் இல்லை என்று
நான் நினைக்கவில்லை, சார்லி பிரவுன்.

659
00:39:58,273 --> 00:39:59,399
நன்றி, லைனஸ்.

660
00:40:00,025 --> 00:40:04,613
ஆனால் நான் என்ன செய்வது? என் கட்டுரை
நாளைக்கு தயாராக இருக்க வேண்டும்.

661
00:40:05,113 --> 00:40:07,449
எனக்கு மிகவும் பிரமிப்பாக இருப்பதால்,

662
00:40:07,533 --> 00:40:10,619
நான் சில சமயம் வானத்தை பார்த்து
அதில் என்னுடைய பதில்களை தேடுகிறேன்,

663
00:40:16,375 --> 00:40:18,043
அது பயனளிக்கவில்லை, லைனஸ்.

664
00:40:18,544 --> 00:40:20,003
நீ என்ன பார்க்கிறாய்?

665
00:40:20,087 --> 00:40:22,381
ஒரு நட்சத்திர கூட்டம் என்று நினைக்கிறேன்.

666
00:40:22,464 --> 00:40:25,801
ஆனால் அது என்னுடைய வீட்டு பாடத்திற்கு
எப்படி சம்பந்தப்பட்டது?

667
00:40:25,884 --> 00:40:29,096
சரி, சில வகைகளில் பார்த்தால்,
அந்த நட்சத்திரங்கள் உன்னைப் போன்றவை.

668
00:40:31,723 --> 00:40:35,686
உன்னிப்பாக கவனித்தால், அங்கே ஒவ்வொரு
நட்சத்திரமும் மாறுபட்டது என்று புரியும்.

669
00:40:35,769 --> 00:40:40,315
அவை வண்ணம், அளவு, மற்றும் எப்படி
பிரகாசிக்கின்றன என்பதில் மாறுபடுகின்றன.

670
00:40:40,399 --> 00:40:43,569
ஆனால் அந்த வேறுபாடுகள்தான் அழகான ஒன்றை
உருவாக்கி இருக்கிறது.

671
00:40:45,320 --> 00:40:46,780
நம்மைப் போலவே, சார்லி பிரவுன்.

672
00:40:47,489 --> 00:40:48,782
ஒவ்வொருவருமே தனித்தன்மை வாய்ந்தவர்கள்,

673
00:40:48,866 --> 00:40:51,827
ஆனால் எல்லோருமே நம்மை விட ஒரு பெரிய
விஷயத்தின் அங்கமாக இருக்கிறோம்.

674
00:40:51,910 --> 00:40:53,662
நமக்கு புரிந்து கொள்வதற்கு
கடினமாக இருந்தாலும்,

675
00:40:53,745 --> 00:40:56,707
நம் ஒவ்வொருவருக்கும்
ஒரு குறிக்கோள் இருக்கிறது.

676
00:40:56,790 --> 00:41:00,752
ஒவ்வொரு நாளின் பயணத்திலும் அதை
கண்டுபிடிப்பது மகிழ்ச்சியாக இருக்கும்.

677
00:41:00,836 --> 00:41:05,132
ஒருவேளை, இப்போதைக்கு உன்னுடைய குறிக்கோள்
சார்லி பிரவுனாக இருப்பது மட்டும் தான் போல.

678
00:41:08,177 --> 00:41:12,181
நீ சொல்வது சரியாக இருக்கலாம், லைனஸ்.
சரி, நான் என் வேலையை செய்கிறேன்.

679
00:41:14,057 --> 00:41:17,769
சார்லி பிரவுனுக்கு நம்பிக்கை இருந்தால்,
எல்லோருக்கும் நம்பிக்கை இருக்கும்.

680
00:41:23,358 --> 00:41:24,776
1980-இல்,

681
00:41:24,860 --> 00:41:29,656
ஸ்பார்க்கி 30 வருட காலமாக ஒவ்வொரு நாளும்
பீனட்ஸை வரைந்து கொண்டிருந்தார்.

682
00:41:30,157 --> 00:41:32,784
அது 10,000 தொடர்களுக்கும் அதிகம்.

683
00:41:33,410 --> 00:41:34,494
அந்த முழு காலகட்டத்திலும்,

684
00:41:34,578 --> 00:41:38,582
அவர் விடுமுறை எடுத்துக் கொள்ளவில்லை
அல்லது ஒரு காலக்கெடுவில் தவறியதில்லை.

685
00:41:38,665 --> 00:41:42,628
நாம் தினமும் ஒரு கூண்டுக்குள்ளே
ஓடிக்கொண்டிருக்கும் அணில் போன்றவர்கள்.

686
00:41:42,711 --> 00:41:43,879
விடுமுறைகள் கிடையாது.

687
00:41:43,962 --> 00:41:47,633
ஒரு நகைச்சுவை தொடர் என்பது ஒரு முழு அளவு
தனித்தன்மையான பொழுதுபோக்கு.

688
00:41:47,716 --> 00:41:50,969
நாளுக்கு நாள்
அது தொடர்ந்து நம்மோடு வாழும்.

689
00:41:51,053 --> 00:41:56,266
எழுதியதையே திருப்பி எழுதாமல்,
ஒவ்வொரு நாளும் ஒரே விஷயத்தைப் பற்றி

690
00:41:56,350 --> 00:41:58,018
எழுதுவது என்பது மிகவும் சவாலான ஒரு விஷயம்.

691
00:41:58,810 --> 00:42:01,271
நிறைய நகைச்சுவை வரைபட கலைஞர்கள்
அந்த படங்களை பென்சிலால் வரைந்து விட்டு

692
00:42:01,355 --> 00:42:03,065
வேறு யாரையாவது
மையினால் வரைய செய்வார்கள்.

693
00:42:04,191 --> 00:42:07,653
ஆனால் அவர் தானே அவற்றை
மையால் வரைந்தார்.

694
00:42:07,736 --> 00:42:11,240
வேறு யாரும் அந்த சித்திரங்களை தொடவில்லை
என்பது அவருக்கு ஒரு பெருமையாக இருந்தது.

695
00:42:11,323 --> 00:42:13,116
எல்லா வேலைகளையும் அவரே செய்தார்.

696
00:42:13,700 --> 00:42:18,539
1981 ஜூலை மாதத்தில்,
ஸ்பார்க்கிக்கு நெஞ்சுவலி வர ஆரம்பித்தது.

697
00:42:18,622 --> 00:42:21,333
இருதயத்தில் அறுவை சிகிச்சை செய்வதற்காக
மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

698
00:42:21,416 --> 00:42:22,918
அவர் மருத்துவமனையில் இருந்தார்.

699
00:42:23,001 --> 00:42:26,463
ஒரு கதாபாத்திரத்தை தன்னால் வரைய முடிகிறதா
என பார்ப்பதற்காக ஒரு காகிதத்தை கேட்டார்.

700
00:42:26,547 --> 00:42:31,301
தன்னால் வரைய முடிகிறது என உறுதிப்படுத்த
அதை உடனே அவர் செய்ய விருப்பபட்டார்.

701
00:42:31,385 --> 00:42:33,887
அவரால் முடிந்தது,
ஆனால் சற்று மாறி இருந்தது.

702
00:42:38,016 --> 00:42:40,853
அவரது கை சற்று நடுங்கியது,
அவரது கோடுகள் வளைந்து இருந்தன.

703
00:42:41,645 --> 00:42:44,857
மேலும் நீங்கள் பின்னால்
வரையப்பட்ட சித்திரங்களைப் பார்த்தால்,

704
00:42:44,940 --> 00:42:47,734
அந்தக் கோடுகள் சற்று
வளைந்து இருப்பதை பார்க்கலாம்.

705
00:42:48,235 --> 00:42:51,238
அவர், "சில நேரங்களில்
என்னுடைய கை மிகவும் நடுங்குவதால்

706
00:42:51,321 --> 00:42:53,991
நான் வரைவதற்காக கையை பிடித்துக் கொள்ள
வேண்டி இருக்கிறது" என்றார்.

707
00:42:54,074 --> 00:42:58,078
சற்று பெரிய தலையை உடைய,
சார்லி பிரவுனை, அவர் வரைவதை,

708
00:42:58,161 --> 00:43:00,038
நான் பார்த்த ஞாபகம் இருக்கிறது.

709
00:43:00,122 --> 00:43:02,791
அவரது கைகள் நடுங்குவதால்,
அவருக்கு மிகுந்த கோபம் வரும்.

710
00:43:02,875 --> 00:43:07,713
ஆனாலும், "என்னால் மழைத்துளி வரைய முடியும்"
என்பார். சிறு சிறு கோடுகளாகவும்,

711
00:43:07,796 --> 00:43:09,882
புள்ளிகளாகவும் மழை போல
அல்லது புல் போல இருக்கும்.

712
00:43:11,133 --> 00:43:15,679
அவர், "இது இப்போது இப்படித்தான் இருக்கும்.
இது என் சுயமான சித்திரம்" என்று சொல்வார்.

713
00:43:15,762 --> 00:43:20,100
அந்த வளைந்த கோடு
அவருடைய சிறப்பு சித்திரமானது.

714
00:43:21,268 --> 00:43:25,147
அது மிகவும் பிரமாதமானது. அது பல பேருடைய
தொழில் வாழ்க்கையை முடித்திருக்கும்.

715
00:43:25,230 --> 00:43:28,692
ஆனால் அது பீனட்ஸை
மிகவும் உயர்ந்த நிலைக்கு கொண்டு போய்,

716
00:43:28,775 --> 00:43:35,282
அவருக்கும், அவரது கதாபாத்திரங்களுக்கும்
நாம் இரக்கம் காட்டும்படியாக அமைந்தது.

717
00:43:36,283 --> 00:43:40,662
அவர் தன்னையே வருத்திக் கொள்ள
தயாராக இருக்கிறார் என்பதை இது சொல்கிறது.

718
00:43:41,246 --> 00:43:43,332
அவர் நிறுத்தவில்லை.
அவருடைய அகங்காரம், "என்னால் சரியாக

719
00:43:43,415 --> 00:43:46,001
வரைய முடியவில்லை என்றால், நான்
அதை செய்யப் மாட்டேன்" என்று சொல்லவில்லை.

720
00:43:46,084 --> 00:43:49,129
இது தான் அவருடைய குணம். இப்படித்தான்
அவர் விஷயங்களை பகிர்ந்துக் கொண்டார்.

721
00:43:49,213 --> 00:43:50,506
இப்படித்தான் அவர் வாழ்ந்தார்.

722
00:43:51,882 --> 00:43:54,968
நான் சில சமயங்களில் தீர்வுகளை
கொண்டு வருகிறேன் என நினைக்க விரும்புவேன்.

723
00:43:55,052 --> 00:43:56,053
ஓ, இல்லை!

724
00:43:56,136 --> 00:44:01,642
அப்படிப்பட்ட, ஒரு தீர்வு தான்,
சார்லி பிரவுன் தொடர்ந்து முயற்சி செய்வது.

725
00:44:04,311 --> 00:44:07,814
அவன் மனம் தளர மாட்டான். யாராவது மனம் தளர
வேண்டுமென்றால், அது அவனாகத்தான் இருக்கும்.

726
00:44:20,202 --> 00:44:23,914
காலை வணக்கம், சார்லி பிரவுன்.
உன் கட்டுரையை எந்தளவில் எழுதியிருக்கிறாய்?

727
00:44:23,997 --> 00:44:27,084
நான் இரவு முழுதும் விழித்திருந்தேன்,
ஆனால் அதை முடித்துவிட்டேன்.

728
00:44:27,167 --> 00:44:30,546
-முதல் தர மதிப்பெண் கூட கிடைக்கலாம்.
-அது நன்றாக இருக்கும்.

729
00:44:30,629 --> 00:44:33,006
ஆனால் வாழ்க்கையின் பரிசுகள்
சில சமயங்களில்

730
00:44:33,090 --> 00:44:35,008
எதிர்பாராத விதங்களில் நமக்கு கிடைக்கும்.

731
00:44:35,092 --> 00:44:38,011
அதற்கு என்ன அர்த்தம் என்று
எனக்கு புரியவில்லை, லைனஸ்.

732
00:44:38,095 --> 00:44:41,807
ஆனால் எனக்கு முதல் தர மதிப்பெண்கள்
கிடைப்பதும், எதிர்பாராத விஷயமாக இருக்கும்.

733
00:44:55,612 --> 00:44:59,408
கட்டுரைகளுக்கு மதிப்பெண் கொடுத்தாயிற்று.
முதல் மதிப்பெண் கிடைத்ததா என தெரியவில்லை.

734
00:45:03,370 --> 00:45:05,372
என்னால் இந்த மர்மத்தை
பொறுக்க முடியவில்லை.

735
00:45:07,916 --> 00:45:11,086
மூன்றாம் தரத்தை விட குறைவா? கடவுளே.

736
00:45:11,837 --> 00:45:13,005
எனக்கு முதல் தரம் கிடைத்திருக்கிறது.

737
00:45:13,088 --> 00:45:16,550
என்னுடைய கையெழுத்தையும், அழகான
எழுத்துக்களையும் ஆசிரியர் பாராட்டினார்.

738
00:45:23,223 --> 00:45:27,978
என்னால் நம்ப முடியவில்லை, லைனஸ். கடுமையாக
உழைத்தது மூன்றாம் தர மதிப்பெண் வாங்கவா?

739
00:45:28,061 --> 00:45:32,232
வருத்தப்படாதே, சார்லி பிரவுன். மதிப்பெண்
ஒருவருடைய திறமைகளை சொல்வதில்லை.

740
00:45:32,316 --> 00:45:36,486
என்றாலும், ஒரு உண்மையான கலை வடிவமானது,
காலத்தால் தான் புரிந்துகொள்ள முடியும்.

741
00:45:36,987 --> 00:45:40,073
ஆமாம், அதை எதிர்பார்த்து இருக்க வேண்டும்
என்று நினைக்கிறேன்.

742
00:45:44,953 --> 00:45:48,665
"சில நேரங்களில் இரவில் விழித்து,
'எதற்காக நான்?' என்ற கேள்வியை கேட்பேன்

743
00:45:49,750 --> 00:45:53,504
அப்போது ஒரு குரல், ஒன்றும் தவறில்லை,
உன் பெயர் ஞாபகம் வந்தது' என பதிலளித்தது."

744
00:45:59,927 --> 00:46:03,263
சில வாரங்களுக்கு முன்னர் தான், கோலோன்
புற்றுநோய்க்காக சிகிச்சை பெறுவதற்காக தன்

745
00:46:03,347 --> 00:46:06,141
பீனட்ஸ் நகைச்சுவை சித்திரம் வரைவதிலிருந்து
ஓய்வு பெறப்போவதாக ஷுல்ஸ் அறிவித்தார்.

746
00:46:06,225 --> 00:46:07,059
ஜனவரி 3, 2000

747
00:46:08,435 --> 00:46:14,274
கீமோ சிகிச்சையினால் பலவீனமாக
இருந்து, ஓய்வு பெற அவர் முடிவு செய்தார்.

748
00:46:14,358 --> 00:46:19,363
"என்னால் இனி அந்த தொடரை வரைய முடியாது"
என அவர் சொன்னது துல்லியமாக நினைவிருக்கு.

749
00:46:19,905 --> 00:46:24,284
அவர் ஒரு நாள் வந்த போது,
கடைசி தொடரை உருவாக்குவது பற்றி பேசினோம்.

750
00:46:24,368 --> 00:46:26,745
அவர் என்னிடமிருந்து
சில அடி தூரத்தில் அமர்ந்திருந்தார்,

751
00:46:26,828 --> 00:46:29,373
அப்போது என்னைப் பார்த்து ஒரு விதமாக
சிரித்து விட்டு, அவர்,

752
00:46:29,456 --> 00:46:31,458
"நான் உண்மையில் சில வேடிக்கையான
விஷயங்களை வரைந்தேன்" என்றார்.

753
00:46:31,542 --> 00:46:35,003
தன்னால் இனி வரைய முடியாது
என்பதை அறிந்திருந்ததால்

754
00:46:35,087 --> 00:46:37,840
அவருக்கு எவ்வளவு வேதனையாக இருந்தது
என்பதை எங்களால் உணர முடிந்தது.

755
00:46:38,757 --> 00:46:41,760
இந்த கதை ஒளிபரப்பப்படும்
அந்த நாளான ஜனவரி 3ஆம் தேதி தான்,

756
00:46:41,844 --> 00:46:43,470
இந்த கடைசி தொடர் சித்திரம் வெளியாகும்.

757
00:46:43,554 --> 00:46:47,474
இனிமேல் இதை நீங்கள் செய்யப் போவதில்லை
என உங்களுக்கு பூரணமாக புரிந்திருக்கிறதா?

758
00:46:48,016 --> 00:46:54,147
ஒரு சிறு குறிப்பு எழுத ஆரம்பித்தது வரை,
அது உண்மையில் புரிந்திருக்கவில்லை...

759
00:46:54,231 --> 00:46:55,065
அன்பு நண்பர்களே...

760
00:46:55,148 --> 00:46:58,068
...ஒரு "விடைபெறுகிறேன், நண்பர்களே" போன்ற,
ஒரு குறிப்பு எழுதும் வரை புரியவில்லை.

761
00:46:58,151 --> 00:47:04,241
அதன் பிறகு கடைசியில், நான்,
அவன் பெயரை, என் பெயரை எழுதினேன்.

762
00:47:04,324 --> 00:47:06,076
அப்போது...

763
00:47:06,159 --> 00:47:07,870
நான் அழ ஆரம்பிக்கப் போகிறேன்.

764
00:47:09,371 --> 00:47:10,414
வந்து...

765
00:47:10,497 --> 00:47:11,915
சார்லி பிரவுன், ஸ்நூப்பி,
லைனஸ், லூசி...

766
00:47:11,999 --> 00:47:13,208
அவர்களை என்னால் எப்படி
மறக்க முடியும்...

767
00:47:13,292 --> 00:47:15,294
...அதுதான் சார்லி பிரவுன்,
லைனஸ் மற்றும் பலர்.

768
00:47:15,377 --> 00:47:16,920
அப்போது திடீரென்று, நான்...

769
00:47:18,297 --> 00:47:22,467
"பாவம் அந்த சிறுவன். கால் பந்தை உதைக்க ஒரு
வாய்ப்பு கிடைக்கவில்லையே" என நினைத்தேன்.

770
00:47:26,972 --> 00:47:30,517
பிப்ரவரி 12, 2000 அன்று
ஸ்பார்க்கி மரணமடைந்தார்.

771
00:47:31,018 --> 00:47:32,728
அந்த நாளில்தான்,

772
00:47:32,811 --> 00:47:35,939
அவருடைய இறுதி பீனட்ஸ் நகைச்சுவை சித்திர
தொடர் வெளியிடப்பட்டது.

773
00:47:36,023 --> 00:47:37,441
அவர் இறந்த அன்று தான்...

774
00:47:37,941 --> 00:47:39,151
இல்லை, அவர் எழுதுகிறார் என நினைக்கிறேன்...

775
00:47:39,234 --> 00:47:41,445
...அந்த கடைசி தொடர் சித்திரம்
வெளியிடப்பட்டது.

776
00:47:41,528 --> 00:47:46,283
அவர் உருவாக்கிய அருமையான கதாபாத்திரங்களின்
ஆன்மாவோடு அவருடைய ஆன்மாவும் எவ்வளவு

777
00:47:46,366 --> 00:47:49,745
ஆழமாக இணைந்திருந்தது என்பதற்கு இது
ஒரு அருமையான சான்று என்று நினைக்கிறேன்.

778
00:47:49,828 --> 00:47:52,039
அதாவது, அவர்
அந்த கதாபாத்திரங்களாகவே இருந்தார்.

779
00:47:52,122 --> 00:47:56,251
இது அற்புதமானது. அவருக்கு பிடித்த விஷயத்தை
செய்து கொண்டே அவர் இறந்தார்.

780
00:47:56,335 --> 00:48:02,382
இந்த கதையை ஒவ்வொரு நாளும்
சொன்ன ஒரு நபர் அவர் தான்.

781
00:48:02,466 --> 00:48:07,387
அவருடைய ரசிகர்களுக்கு, அது புரிந்தது.
அவர்கள் அதை உணர்ந்தார்கள்.

782
00:48:07,471 --> 00:48:11,391
இந்த நகைச்சுவையான, அற்புதமான,
மறக்கமுடியாத நகைச்சுவை தொடர் சித்திரங்கள்.

783
00:48:11,475 --> 00:48:14,394
இவற்றிலிருந்து வாழ்க்கைக்கான
நிறைய நல்ல பாடங்களை கற்றுக் கொண்டு

784
00:48:14,478 --> 00:48:17,397
இவற்றை நேசித்து, பாதுகாத்தும் இருக்க
முடியும் என்பதை புரிந்து கொண்டார்கள்.

785
00:48:17,481 --> 00:48:21,109
மிகவும் மென்மையான மனிதத்தை பற்றியது இது.

786
00:48:21,193 --> 00:48:24,112
இது மனிதத்தன்மை மற்றும்
அதன் முட்டாள்தனத்தை பற்றியது.

787
00:48:24,196 --> 00:48:26,573
கொடூரம் இல்லாத மனிதத்தை பற்றியது.

788
00:48:27,366 --> 00:48:30,077
இன்று அது நமது உலகத்தில் மிகவும் தேவை
என்று நினைக்கிறேன்.

789
00:48:31,119 --> 00:48:32,746
நாம் ஒருவருக்கு ஒருவர் உடன்பாடு
இல்லாமல் இருக்கலாம்.

790
00:48:32,829 --> 00:48:34,998
லூசி போன்று குறை சொல்பவர்கள் இருக்கலாம்.

791
00:48:35,082 --> 00:48:38,460
சார்லி போன்று
தன்னம்பிக்கை இல்லாதவனாக இருக்கலாம்.

792
00:48:38,544 --> 00:48:41,964
லைனஸ் போல, நமது தத்துவங்கள் தான்
முக்கியம் என்று நினைக்கலாம்.

793
00:48:42,047 --> 00:48:44,341
ஆனால் உண்மையில், நாம் இவை எல்லாவற்றிலும்
ஒன்றாக இருக்கிறோம்.

794
00:48:44,424 --> 00:48:47,803
இந்த இளம் குழந்தைகள் பேசக்கூடிய
உரையாடல்கள்

795
00:48:47,886 --> 00:48:50,472
நம்முடைய ஆன்மாவை சென்றடைகின்றன.

796
00:48:56,770 --> 00:48:59,648
தன்னுடைய கடைசி பீனட்ஸ் சித்திரத்தை

797
00:48:59,731 --> 00:49:01,149
சார்லஸ் ஷுல்ஸ் வரைந்த
20 வருடங்களுக்குப் பிறகு,

798
00:49:01,233 --> 00:49:03,485
அவருடைய கற்பனையும்,
அவர் உண்டாக்கிய கதாபாத்திரங்களும்

799
00:49:03,569 --> 00:49:06,947
உலகம் முழுவதிலும் கொண்டாடப்பட்டு
வருகின்றன.

800
00:49:07,030 --> 00:49:09,074
டாம் சாயர், ஹக் ஃபின் போல

801
00:49:09,157 --> 00:49:13,662
அமெரிக்க பாப் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக
பீனட்ஸ்ஸும் பின்னி இணைக்கப்பட்டிருக்கிறது.

802
00:49:13,745 --> 00:49:17,040
அதன் மனித உணர்ச்சிகள் இன்றும் கூட
எல்லோருக்கும் புரிகிறது.

803
00:49:17,624 --> 00:49:19,293
அது எப்போதும் மாறாது என
எல்லோருக்கும் தெரியும்.

804
00:49:19,376 --> 00:49:20,878
அது காலத்தை வென்ற ஒரு அடையாளம்,

805
00:49:20,961 --> 00:49:25,340
உலகத்தின் எந்த பகுதியில் இருப்பவரும் அதோடு
தன்னை தொடர்புபடுத்தி நேசிக்க முடியும்.

806
00:49:26,049 --> 00:49:28,969
என்னுடைய பேரப்பிள்ளைகள்,
பீனட்ஸ் பற்றி படிக்கப் போகிறார்கள்.

807
00:49:29,052 --> 00:49:30,179
இது சார்லி பிரவுன்.

808
00:49:30,262 --> 00:49:33,724
கடந்த 50 ஆண்டுகளாக பீனட்ஸை
படித்து வந்திருக்கும் மக்களுக்கு

809
00:49:33,807 --> 00:49:35,809
நீங்கள் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?

810
00:49:35,893 --> 00:49:42,524
நான்... செய்யும் விஷயங்கள் சிறந்தவை என்று,
அவர்கள் நினைப்பது அதிசயமாக இருக்கிறது.

811
00:49:43,358 --> 00:49:45,986
என்னால் முடிந்தவற்றை நான் செய்தேன்.

812
00:50:11,929 --> 00:50:15,682
நீ எங்கே போயிருந்தாய், சக்?
உன் பணி சறுக்கும் காலணிகளை அணிந்து கொள்.

813
00:50:39,331 --> 00:50:41,124
உன்னை சந்திப்பதில் மகிழ்ச்சி,
சார்லி பிரவுன்.

814
00:50:43,252 --> 00:50:46,004
சீக்கிரம் வா, சார்லி பிரவுன்.
இதை பிடித்துக் கொள்.

815
00:50:53,345 --> 00:50:56,723
வருடத்தின் முதல் பனி பொழிவு போல
மிகவும் சிறப்பான விஷயம் எதுவும் கிடையாது.

816
00:51:16,243 --> 00:51:17,870
பீனட்ஸை உருவாக்கியவர்
சார்லஸ் எம்.ஷுல்ஸ்

817
00:54:20,802 --> 00:54:24,014
நன்றி, ஸ்பார்க்கி.
எப்போதும் எங்கள் இதயத்தில் இருப்பீர்கள்.

818
00:54:24,097 --> 00:54:26,099
தமிழாக்கம் மேனகா மணிகண்டன்



